Showing posts with label சாதனை. Show all posts
Showing posts with label சாதனை. Show all posts

பேராவூரணி அரசு மகளிர் பள்ளி சாதனை

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் தஞ்சை மாவட்ட அரசுப் பள்ளிகளில் பேராவூரணி மகளிர் மேல்நிலைப்பள்ளி முதலிடத்தில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது. இப்பள்ளி மாணவி புவனேஸ்வரி 1,153 மதிப்பெண் பெற்று அரசு பள்ளிகளில் தஞ்சை மாவட்ட அளவில் முதலிடம் பெற்றுள்ளார். மாணவி பவித்ரா 1,057 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாமிடமும், மாணவர் சூர்யா 1,052 மதிப்பெண்கள் பெற்று மூன்றாமிடமும் பெற்று சாதனை படைத்துள்ளனர்.

தேர்வெழுதிய 465 பேரில் 457 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களை தலைமையாசிரியர் சந்திரசேகரன், பெற் றோர் ஆசிரியர் கழக கோவிந்தராசு மற்றும் ஆசிரியர்கள் மாணவர்களை பாராட்டினர். ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி: பேராவூரணி ஜே.ஸி.குமரப்பா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவி கவிநயா 1,148 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் ஜெயசீலன் 1,139 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் அருண்குமார் 1,137 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றனர்.


ஜெயசீலன், ராதிகா, அருண் குமார் ஆகியோர் கணிதத்தில் 200 மதிப் பெண், கவிநயா, ஜெயசீலன் ஆகியோர் வேதியியலில் 200 மதிப்பெண், மாணவி நிவேதா தமிழில் 191 மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளனர். சாதனை படைத்த மாணவர்களை பள்ளித் தாளாளர் ஸ்ரீதர், அறங்காவலர்கள் கணபதி, ராமு, பிரியதர்ஷினி மற்றும் ஆசிரியர் கள் பாராட்டினர். திருச் சிற்றம்பலம் கலைமகள் மெட்ரிக். மேல்நிலைப்பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.


வெற்றிப் பெற்ற மாணவர்களை தாளாளர் வேதநாயகி மற்றும் இயக்குனர்கள், ஆசிரியர்கள் பாராட்டினர். பேராவூரணி மூவேந்தர் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி 100 சதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்து உள்ளது. வெற்றிப் பெற்றவர்களை பள்ளித் தாளாளர் வக்கீல் சாமியப்பன் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் பாராட்டினர். பேராவூரணி ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் மாணவர் சதீஷ் 1,017 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவர் சந்தோஷ்முருகன் 1,007 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் கண்ணதாசன் 987 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.


பெருமகளூர் அரசு மேல் நிலைப்பள்ளியில் மாணவி விஜி 854 மதிப்பெண் பெற்று முதலிடம், மாணவி சித்ரா 823 மதிப்பெண் பெற்று இரண்டாமிடம், மாணவர் பிரசன்னா 796 மதிப்பெண் பெற்று மூன்றாமிடம் பெற்றுள்ளனர்.

கல்பாக்கம் வேக ஈணுலையில் வெப்பத் தணிப்பான் பொருத்தம் : விஞ்ஞானிகள், இன்ஜினியர்கள் சாதனை

Tamilnadu special news update

சென்னை: கல்பாக்கத்தில் உள்ள 500 மெகாவாட் முன்மாதிரி வேக ஈணுலையில், பிரமாண்டமான வெப்பத் தணிப்பான் நேற்று பொருத்தப்பட்டது. இந்தியாவின் எரிசக்தித் தேவையை ஈடுகட்டும் வகையில், கல்பாக்கத்தில் 500 மெகா வாட் உற்பத்தித் திறன் கொண்ட முன்மாதிரி வேக ஈணுலை (பாஸ்ட் பிரீடர் ரியாக்டர்) அமைக்கப்பட்டு வருகிறது. இதில், வெவ்வேறு காலகட்டங்களில் ஒவ்வொரு பாகமாக பொருத்தப்பட்டு வருகிறது. இந்த ஈணுலையின் வெப்பத் தணிப்பானாக சோடியம் பயன்படுத்தப்படுகிறது. மையத்தில் உள்ள மற்றும் முதன்மையான சோடியம் சர்க்கியூட் உட்பட, இந்த ஈணுலையின் மொத்த பாகங்களும் பிரதான கொள்கலன் (மெயின் வெஸ்சல்) எனப்படும் ஒரே கொள்கலனுக்குள் அடங்குகின்றன.


இந்த ஈணுலையில், வெப்பத் தணிப்பானை நிறுவும் மிக முக்கியமான பணி, நேற்று மேற்கொள்ளப்பட்டது. பகல் 12.30 மணிக்குத் துவங்கிய இந்தப் பணி ஒரு மணி நேரம் நீடித்தது. தணிப்பான் நிறுவப்பட்டுவிட்டாலும், அவற்றை மற்ற பாகங்களோடு பொருத்தும் பணி முடிக்க 15 நாட்கள் தேவைப்படும்.
இந்த வெப்பத் தணிப்பான், இரண்டு பிரமாண்டமான இணை சிலிண்டர்களைக் கொண்டது. 'எஸ்எஸ் 316எல்என்' எனப்படும், பிரத்தியேகமாக தயாரிக்கப்பட்ட உலோகத்தினாலான இந்த சிலிண்டர்கள் ஒவ்வொன்றும் ஐந்து மீட்டர் உயரம் கொண்டவை. உள்சிலிண்டர் 12.44 மீட்டர் விட்டமும், வெளிசிலிண்டர் 12.67 மீட்டர் விட்டமும் கொண்டது. சுற்றளவு 40 மீட்டர். இவற்றின் மொத்த எடை 70 டன்.


சிலிண்டர்களும், அவற்றுக்குள் இறங்கி பணிபுரிவதற்கான அமைப்புகளும், பிரேம்களும் சேர்த்து மொத்தமாக இந்த சிலிண்டர்களை பொருத்திய போது, அதன் எடை 170 டன்.


இதைப் பொருத்துவதற்காக, நாட்டிலேயே மிகப் பெரிய கிரேன் பயன்படுத்தப்பட்டது. கிரேனின் அடிப்பகுதியில் இருந்தபடி, 170 டன் எடை கொண்ட வெப்பத் தணிப்பானை, தரையிலிருந்து 28 மீட்டர் உயரம் கொண்ட கட்டடத்துக்குள் இறக்கி, தரைக்குள் 30 மீட்டர் பள்ளம் கொண்ட ஈணுலைக்குள் பொருத்தப்பட்டது.


சிலிண்டர்களின் எந்தப் பக்கத்திலும் கொக்கிகளை பொருத்த முடியாது என்பதால், அதற்காகவே பிரத்தியேகமான பிரேம்கள் செய்யப்பட்டிருந்தன. மொத்தமாக 170 டன் எடை கொண்ட இந்த தணிப்பானை, கொள்கலனோடு பொருத்தியாக வேண்டும். ஒரு சிறு கீறல் விழுந்தாலும், மொத்தமும் பாழ் என்ற நிலையில், மிக மிகக் கவனமாக, திட்ட இயக்குனர் பிரபாத் குமாரின் நேரடி மேற்பார்வையில், இப்பணி மேற்கொள்ளப்பட்டது. எந்தக் கோளாறையும் சரி செய்ய முடியாது என்ற அபாயகரமான நிலையில், இந்தத் தணிப்பானை பொருத்தும் பணி உள்ளிட்ட அனைத்தும், ஏற்கனவே ஒத்திகை பார்க்கப்பட்ட பிறகே மேற்கொள்ளப்பட்டது.


இந்த வெப்பத் தணிப்பானின் முக்கிய செயல்பாடு, பிரதான கொள்கலனை குளிர்விப்பதற்காகப் பயன்படுத்தப்படும் சோடியத்தை, வளையங்களாலான பாதை மூலம் அனுப்புவதே. குளிர்விக்கப்பட்ட சோடியம் மூலம், ஈணுலையில் உற்பத்தி செய்யப்படும் வெப்பத்தின் அளவு, 450 டிகிரி செல்சியசுக்கும் குறைவாக்கப்படுகிறது. வெப்பத் தணிப்பான், அளவிலும் எடையிலும் மிகப் பிரமாண்டமானது என்பதால், ரயில் மூலமோ, தரை வழியாகவோ கொண்டு வருவது சாத்தியமில்லாதது. இதனால், இந்தத் தணிப்பானை, 'பெல்' நிறுவனம், கல்பாக்கத்தில் வைத்தே பிரத்தியேகமாக தயாரித்துக் கொடுத்தது. இந்த மொத்தத் திட்டமும் தேசத்தின் பெருமை என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

24 மணி நேரம் தொடர்ந்து உரையாடி 19 வயது இளைஞர் லிம்கா சாதனை

Tamilnadu special news update தொலைக் காட்சியில் 24 மணி நேரம் தொடர்ந்து 507 நேயர்களிடம் உரையாடி, 19 வயது இளைஞர் லிம்கா சாதனை படைத்துள்ளார். திருவள்ளூர் அடுத்த திருமுல்லைவாயல் வைஷ் ணவி நகரைச் சேர்ந்தவர் ராஜா மகன் விவேக்(19). இவர், கம்ப்யூட்டர் டிப்ளமோ படித்துவிட்டு சாப்ட்வேர் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். மேலும், தனியார் தொலைக்காட்சியில் (ஜாக்) நிகழ்ச்சி தொகுப் பாளராகவும் மூன்று ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார்.


இவர் லிம்கா சாதனை மற்றும் ஆசியா சாதனை புத்தகத்தில் இடம்பெறும் வகையில் காமெடி டைம், தெய்வீக நேரம், வாழ்த்தலாம் வாங்க, சிறுவர் நேரம், நேருக்கு நேர் உட்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நேற்று முன்தினம் காலை 8 மணி முதல் நேற்று காலை 8 மணி வரை (24 மணி நேரம்) நேரலை நிகழ்ச்சி திருவள்ளூரில் நடந்தது. இவர் உலக வரலாற்றிலேயே முதன் முதலாக இச்சாதனையை படைத் துள்ளார். லிம்கா உலக சாதனை புத்தகம் சார்பில் அரசு பள்ளி தலைமை ஆசிரியர் தாஸ், அறுவை சிகிச்சை நிபுணர் சந்திரன், பொது மருத்துவர்கள் ஜெயக்குமார், ராமநாதன், ஆசிரியர் ராஜிவ்குமார், ஆசிரியை சீதா உள் ளிட்ட 12 பேர் கொண்ட குழுவினர் 24 மணி நேரமும் உட்கார்ந்து நிகழ்ச்சியை கண்காணித்து மதிப்பீடு செய்தனர். நிகழ்ச்சியின் இடையே சாதனை இளைஞர் விவேக் கின் உடல்நிலை குறித்து அடிக்கடி டாக்டர்கள் பரிசோதித்தனர். இந்நிகழ்ச்சியில் இளைஞர் விவேக்கை 24 மணி நேரத்தில் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, வேலூர் உள்ளிட்ட 75 பகுதிகளில் இருந்து 507 நேயர்கள் தொடர்பு கொண்டு பேசி னர்.


சாதனை குறித்து விவேக் கூறியதாவது: 'நான் முன் னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் எழுதிய புத்தகங் களை விரும்பி படிப் பேன். இளைஞர்கள் சாதனை புரிய வேண்டும் என்ற அப்துல் கலாம் கருத்து தான், என்னை இச்சாதனைக்கு தூண்டியது. நானும் சாதனை படைக்க வேண்டும் என தீவிர முயற்சியில் ஈடுபட்டு, தனியார் தொலைக் காட்சியில் (ஜாக்) பங்கேற்று இச்சாதனையை புரிந்துள்ளேன். இச்சாதனை புரிய என் தாய் விஜயா எனக்கு உறுதுணையாக இருந்தார். நான் நிகழ்த்திய இச்சாதனையை நானே முறியடித்து கின்னஸ் சாதனையில் இடம் பெறுவேன்' என்றார்.

கோவையில் 9ம் வகுப்பு மாணவி ஓவியம் தீட்டி சாதனை முயற்சி

கோவையைச் சேர்ந்த ஒன்பதாம் வகுப்பு மாணவி 300 மீ.,ஓவியம் தீட்டி, 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். 'யுவபாரதி பப்ளிக் பள்ளி' மாணவி பாலசவுந்தர்ய லட்சுமி(13)யின் சாதனை முயற்சியை தடாகம் ரோட்டிலுள்ள, சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில், பேரூர் இளையபட்டம் மருதாசல அடிகள் நேற்று துவக்கி வைத்தார்.


மாணவி பாலசவுந்தர்யலட்சுமி கூறியதாவது: எனது பெற்றோர், மசாலா பொடி தயாரிக்கும் நிறுவனம் நடத்துகின்றனர். பல்வேறு ஓவியப்போட்டிகளில் பங்கேற்று பரிசு பெற்றுள்ளேன். ஓவியம் வரைதலில் சாதனை படைக்க கோவை, தடாகம் ரோட்டிலுள்ள சவுடாம்பிகை அம்மன் திருமண மண்டபத்தில் முயற்சி மேற்கொண் டுள்ளேன். சார்ட் பேப்ரில் 300 மீ., நீளத்தில் 'கடல்சார் உயிரினங்கள்' என்ற தலைப்பில் மூன்று நாட்கள், தினமும் காலை 6.00 முதல் இரவு 10.00 மணி வரை ஓவியம் தீட்டுவேன். நாள் ஒன்றுக்கு 10 நிமிடம் வீதம் மொத்தம் 30 நிமிட இடைவேளை எடுத்துக் கொள்வேன். 'கின்னஸ்' மற்றும் 'லிம்கா' சாதனை புரிவதே எனது குறிக் கோள். எனது முயற்சி வெற்றி பெற்றால், 'உலகளவில் தனி நபர் வரைந்த மிக நீளமான ஓவியம்' என்ற சாதனை பெருமை கிடைக்கும். இவ்வாறு, பாலசவுந்தர்ய லட்சுமி தெரிவித்தார்.

கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவி சாதனை

பல்கலைக்கழக தேர்வில் முதலிடம் பெற்று கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரி மாணவிசாதனை படைத்துள்ளார்.தமிழ்நாட்டில் பி.எட். கல்லூரிகளை ஒருங்கிணைப்பதற்காக 2008-09ல் தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக்கழகம் சென்னையில் தோற்றுவிக் கப்பட்டது. இப்பல்கலைக் கழகத்தின் முதல் தேர்வு 2009 மே மாதம் நடந்தது.


இத் தேர்வில் கும்பகோணம் மாஸ் கல்வியியல் கல்லூரியில் எம்.எட்., பயின்ற மாணவி ரேணுகாதேவி தஞ்சை மண்டலத்தில் பல்கலைக்கழக அளவில் முதலிடம் பெற்றுள்ளார். கடந்த ஏப்.7ம்தேதி நடந்த பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழாவில் அவருக்கு பல்கலைக்கழகம் சிறப்புப் பரிசு வழங்கியது. மாணவியை கல்லூரி தாளாளர் விஜயகுமார், முதல்வர் ராஜசேகரன் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலர் சரவணன் ஆகியோர் பாராட்டி பரிசளித்தனர்.

தஞ்சை தாலுகா, நகராட்சியில் இதுவரை 86,145 டிவிக்கள் வழங்கி அரசு சாதனை :மத்திய அமைச்சர் தகவல்

தஞ்சை தாலுகா மற்றும் நகராட் சியில் இதுவரை 86 ஆயிரத்து 145 இலவச டி.வி.க்களை வழங்கி அரசு சாதனை படைத்துள்ளது என்று மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் கூறினார்.தஞ்சாவூர் அருகே பிள்ளையார்பட்டியில் இலவச டி.வி. வழங்கும் விழா நடந்தது. ஊராட்சித் தலைவர் பிரபாவதி வரவேற்றார். எம்.எல்.ஏ.,க்கள் துரை சந்திரசேகரன், மகேஷ்கிருஷ்ணசாமி, பஞ். தலைவர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.


மத்திய அமைச்சர் பழனிமாணிக்கம் இலவச டிவிக்களை வழங்கி பேசியதாவது:முதல்வர் கருணாநிதியின் சிறப்பு திட்டமான இலவச டி.வி வழங்கும் திட்டத்தில் தஞ்சை தாலுகா வில் உள்ள 78 கிராமங்கள் மற்றும் தஞ்சை நகராட்சியில் உள்ள 47 வார்டு களுக்கும் இதுவரை 86 ஆயிரத்து 145 டி.விக்கள் வழங்கப்பட்டுள்ளது. பிள்ளையார் பட்டி ஊராட்சியில் மட்டும் கடந்த 4 ஆண்டுகளில் 27 சாலைப்பணிகள் ரூபாய் 43 லட்சத்து 44 ஆயிரம் மதிப்பிலும், 21 குடிநீர் திட்டப்பணிகளும், ரூபாய் 7 லட்சம் மதிப்பில் தெரு விளக்கு பணிகள் என்று பல சாதனைகள் நடந்து உள்ளது.


இந்நிலையில் இப்போது 2 ஆயிரத்து 254 பயனாளிகளுக்கு இலவச டி.வி வழங்கப்படுகிறது. இயற்கையை பாதுகாக்க விவசாயிகள் தயங்கக்கூடாது. அப்போது தான் மழை வளம் நிலைத்து நிற்கும். இவ்வாறு பழனி மாணிக்கம் பேசினார். ஒன்றியக்குழு தலைவர் துரைராஜன், வேளாண் விற்பனைக்குழு தலைவர் செல்வம், மாவட்ட பஞ். உறுப்பினர் அருளானந்தசாமி, ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயந்தி, ஜெயராமன், கிராம கல்விக்குழு தலைவர் கோகுலகிருஷ்ணன் பெரியநாயகி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான்!

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான்.

இந்திப் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மை நேம் ஈஸ் கான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாரூக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாரூக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறது.

இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.

சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. காதலர் தினத்தையொட்டி நேற்று இளைஞர்களும், இளம் பெண்களும் தியேட்டர்களில் நிரம்பி இருந்தனர். இதை சாதகமாக்கி பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடந்தது. அங்கும் கூட சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது டிக்கெட்.

பொதுவாக ரிப்பீட்டட் ஆடியன்ஸ் எனும் திரும்பத் திரும்ப படம் பார்க்கும் ரசிகர்கள் [^] படம் வெளியான மூன்றாவது அல்லது நான்காவது வாரம்தான் வருவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போதே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளதால், டிக்கெட் கிடைக்காமல் உள்ளதாகவும், இதனால் இன்னும் சில வாரங்களுக்கு ரசிகர்கள் வருகை ஏராளமாக இருக்கும் என்றும் மும்பை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

சாதனைக்கு வயது தடையல்ல

ஸ்போர்ட்ஸ் ஷூ அணியாத வெற்று கால்களுடன், சீனியர் மாணவர்களுடன், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்ற ஏழாம் வகுப்பு மாணவன், நான்காம் இடத்தில் வந்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தினான். மத்திய அரசின் இளைஞர் மேம்பாட்டு விளையாட்டு குழுமம் (பைக்கா) மற்றும் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், அவிநாசி ஒன்றிய அளவிலான விளையாட்டு போட்டி, அரசு மேல் நிலைப்பள்ளியில் நடந்தது. நிறைவு நாளான நேற்று தடகள போட்டிகள் நடந்தன. இதில், 3000 மீட்டர் ஓட்டப்பந்தயம் நடந்தது. விதிகளின் படி, பள்ளியின் பெரிய மைதானத்தை 15 முறை (ஒரு சுற்றுக்கு 200 மீட்டர்) சுற்றி வர வேண்டும். ஏழாம் வகுப்பு மாணவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் என 15 பேர் பங்கேற்றனர். போட்டி துவங்கியதும், மிக வேகமாக ஓடிய நான்கு பேர் பாதி சுற்றிலேயே வெளியேறினர். மொத்த இலக்கான 3000 மீட்டரையும் நிறைவு செய்ய 14 நிமிடங்களாகும். ஓடத்துவங்கிய 10வது நிமிடத்தில், தொடர்ந்து ஐந்து பேர் வெளியேறி விட்டனர். இருப்பினும், வெற்று கால்களுடன், பள்ளி சீருடையிலேயே சலனமில்லாமல் ஓடிக் கொண்டிருந்த கவுதம் என்ற சிறுவனை பார்த்து அனை வரும் ஆரவாரம் செய்த வண்ணம் இருந்தனர். 15வது நிமிடத்தில், முதலிடத்தை லோகேஷ் (பொங்குபாளையம்), இரண்டாமிடத்தை மணிகண்டன் (பழங்கரை), மூன்றாமிடத்தை விக்னேஷ் (பழங்கரை), ஜெயப்பிரகாஷ் (சேவூர்) ஆகியோரும் பிடித்தனர். அனைவராலும் ஊக்கப் படுத்தப்பட்ட சிறுவன் கவுதம், நான்காவதாக வந்து அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினார். சாதிக்க வயது தடையல்ல என்பதை நிரூபித்த சிறுவன் கவுதம், அவிநாசி அரசு மேல்நிலைப்பள்ளியில் ஏழாம் வகுப்பு படிக்கிறான். கவுதம் கூறுகையில்,
""என்னுடன் படிக்கும் நண்பர்கள் தினேஷ் மற்றும் மனோஜ் ஆகியோர் 3000 மீட்டரில் கலந்து கொள்ளுமாறு ஊக்கப்படுத்தினர். அவர் களுடன் நானும் ஓடினேன். ஆரம்பம் முதலே சீராக ஓடி, நான்காவது இடத்தை பெற்றேன். முதலிடம் பெற வேண்டுமென்ற லட்சியத்துடன் ஓடிய போதும், 15 ரவுண்ட் முடித்தது மகிழ்ச்சியளிக் கிறது,'' என்றார்.தலைமையாசிரியர் பிலோமின்ராஜ் கூறுகையில், ""மாணவன் கவுதமிடம் விளையாட்டு திறமை இருக்கும் என்று நினைத்து பார்க்கவில்லை. சீனியர் மாணவர்களுக்கு இணையாக 3000 மீட்டர் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்தான். சிறப்பு பரிசு வழங்கப் படும். கவுதமுக்கு விரைவில் "ஸ்போர்ட்ஸ் ஷூ' வாங்கி கொடுக்க முடிவு செய்துள்ளேன்,'' என்றார். "பைக்கா' விளையாட்டு போட்டி ஒன்றிய ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, ""நன்றாக பயிற்சி பெற்ற மாணவர்களாலேயே 3000 மீட்டர் ஓடுவது சிரமமான விஷயம். எவ்வித பயிற்சியும் இல்லாமல், கவுதம் ஓடியதோடு மட்டுமின்றி, நான்காவதாக வந்துள்ளான். முறையான பயிற்சியை வழங்கினால் இன்னும் பல சாதனைகளை செய்வான் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது. அடுத்த மாதத்திலிருந்து கவுதமுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்