நேற்று முதல் அந்த நிலை மாறி ரயில்வே முன்பதிவும், சென்னை செல்ல நீடாமங்கலத்திலேயே பயணம் செய்யும் வசதியும் ஏற்பட்டுள்ளது. மேலும், நேற்று முதல் தளிக்கோட்டையில் இருந்து சென்னைக்கு அரசு பஸ் ஒன்றும், தளிக்கோட்டையில் இருந்து மன்னார்குடி வழியாக நீடாமங்கலம் வரை செல்லும் அரசு பஸ் ஒன்றையும் முன்னார் மத்திய அமைச்சர் டி.ஆர்.பாலு துவக்கி வைத்தார்.நேற்று காலையில் அந்த பஸ்ஸில் அவர் நீடாமங்கலத்தில் இருந்து தளிக்கோட்டைக்கு பயணம் செய்தார்.
நீடாமங்கலத்தில் நின்று, சென்ற நாகூர் - கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில்
தஞ்சை - மயிலாடுதுறை பயணிகள் ரயில் ஏப்., 13ம் தேதி ரத்து
ரயில் வண்டி எண் 892ஏ, 899ஏ தஞ்சை - மயிலாடுதுறை - தஞ்சை பயணிகள் சிறப்பு ரயில் ஏப்ரல் 13ம் தேதி ரத்து செய்யப்படுகிறது. அன்று ரயில் வண்டி எண் 824 திருச்சி - மயிலாடுதுறை பயணிகள் ரயில், திருச்சி - குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே இயக்கப்பட்டு, குத்தாலம் - மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ரத்து செய்யப்படுகிறது.
ரயில் வண்டி எண் 825ஏ மயிலாடுதுறை - நெல்லை பயணிகள் ரயில் 13ம் தேதி மயிலாடுதுறை - குத்தாலம் ரயில்வே ஸ்டேஷன்களுக்கு இடையே ரத்து செய்யப்பட்டு, மயிலாடுதுறை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படுவதற்கு பதிலாக குத்தாலம் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து புறப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.
மணிக்கு 350 கி.மீ. போகும் ரயில்
உலகின் மிக வேகமான ரயில் சேவையை துவக்கி சீனா அசத்தியுள்ளது. குவாங்சு மற்றும் ஊகன் ரயில் நிலையங்களுக்கிடையே இயக்கப்படும் இந்த ரயில், மணிக்கு சராசரியாக 350 கி.மீ., வேகம் செல்லக்கூடியதாகும். 1069 கி.மீ., தூரம் கொண்ட இந்த ரயில் நிலையங்களை, வெறும் 3 மணி நேரத்தில் ரயில் கடக்கிறது. முன்னதாக இதற்கு ஏழரை மணிநேரம் செலவாகும் என்பது குறிப்பிடத்தக்கது. உலகின் இது போன்ற ரயில்கள் ஜப்பான் (243கி.மீ/ம), பிரான்ஸ் (277கி.மீ/ம) ஆகிய நாடுகளில் இயங்கி வருகின்றன.
சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்படவுள்ளது.
நாளை சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் மூடப்படவுள்ளது.சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பிளாட்பாரம் விரிவாக்கம், கிராசிங் மற்றும் சிக்னல் பராமரிக்கும் பணி 4 கட்டமாக நடக்கிறது.ரயிலில் பிறந்த குழந்தைக்கு பெயர் லாலு !!!
பீகார் மாநிலம் வழியே செல்லும் லோகித் எக்ஸ்பிரசில் நிறைமாத கர்ப்பிணி பெண் காயத்ரி (20) பயணம் செய்தார்.ரயில் தேசிரி நிலையம் அருகே காசிபூர் பசாபர் இடையே வரும் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு அந்த பெண் லாலுபிரசாத் என பெயர் சூட்டுவேன் என கூறினார்.
ஏழைகள் மீதான அவரது அக்கறையான பேச்சு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.
காய்த்ரி லாலுபிரசாத் வெற்றிபெற்ற பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். தனது கணவர் வேலைபார்க்கும் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இவருக்கு குழந்தை பிறந்தது.
ரயில்வேயில் தூய குடிநீர் !
ரயில்வே பட்ஜெட்டின் போது மத்திய ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி ரயில் பயணிகளுக்கு பாதுகாப்பு குடி தண்ணீரும், சுகாதாரமான கழிப்பிடங்களும் ஏற்பாடு செய்து தரப்படும் என உறுதியளித்திருந்தார். இதன் விரைவில் ரயில் நிலையங்களில் சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஸ்டேஷனிலும் எவ்வளவு மெஷின்கள் பொறுத்தப்பட வேண்டும் என்பதை அந்தந்த ரயில்வே பிராந்திய தலைமை அலுவலர்கள் முடிவு செய்வார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மாயவரத்துக்கு தற்காலிக சிறப்பு ரயில் இயக்கம்
இந்த தற்காலிக சிறப்பு ரயில் இயக்கம் நேற்று துவங்கியது. தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது. இந்த ரயில் தினமும் காலை 10.45 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு 12.50 மணி க்கு மயிலாடுதுறைக்கு செல்லும். இரவு எட்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு இரவு 9.55 மணிக்கு வரும். இரவு பத்து மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு 11.20 மணிக்கு திருச்சிக்கு செல்லும். காலை 8.30 மணிக்கு அந்த ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு 9.45 மணிக்கு வரும். மீண்டும் 10.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு செல்லு ம். இந்த ரயிலில் ஆறு பெட்டிகள் இருக்கும். தஞ்சையில் நான்காவது பிளாட் ஃபார்மில் இரு ந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயில் ஜனவரி 20ம் தேதி வரை இயங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.
ரயில் டிக்கெட் கவுன்டர்கள் இடமாற்றம்
இதனால், நாளை முதல் இவ்விரு கவுன்டர் களும், மேற்கு பக்கம் பூந்தமல்லி சாலை பகுதியில் உள்ள புதிய கட்டடத் தின் முதல் மாடியில் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மொபைல் போனில் ரயில் டிக்கெட் அமலாவதில் சிக்கல்
மொபைல் போன் மூலம் டிக்கெட் பதிவு செய்யும் முறையை அறிமுகம் செய்ய திட்டம் தீட்டியது. இதன்படி, ரயில் டிக்கெட் பெற நினைப்போர் மொபைல் போனில் எஸ்.எம்.எஸ்., செய்து, வேண்டிய டிக்கெட்டை பதிவு செய்து கொள்ளலாம். இந்த திட்டத்திற்கு, ரயில்வே போர்டு கடந்த டிசம்பர் மாதம் ஒப்புதல் அளித்திருந்தது. மும்பையை சேர்ந்த ஆக்சிஜன் பிரைவேட் லிமிடெட் என்ற நிறுவனத்திடம் பணியை ஒப்படைத்திருந்தது. இந்நிறுவனம் மேற்கு ரயில்வே மண்டலத்தில் முதன் முறையாக இந்த மாதம் துவக்க திட்டமிட்டிருந்தது.
ஆனால், இதற்கான ஏற்பாடுகள் இன்னும் பூர்த்தி அடையாததால், இந்த திட்டம் அமலாக இன்னும் சில மாதம் ஆகும் என்று தெரிகிறது. ரிசர்வ் வங்கி வகுத்த விதிமுறைகளுக்கு இந்நிறுவனம் கொள்கை அளவில் ஒத்துபோகவில்லை. ஆதலால், ரிசர்வ் வங்கி திட்டம் துவக்க உத்தரவு வழங்கவில்லை. மேலும், சாப்ட்வேர் தொழில்நுட்பத்தில் சில இயந்திரக் குறைபாடுகளும் உள்ளன என்றும் தெரிகிறது.
விரைவில் 8 புதிய ரயில்கள்
இதுகுறித்த முழு விவரம்...
- நெல்லை - பிலாஸ்பூர் இடையே விரைவில் வாராந்திர ரயில் இயக்கப்படுகிறது. பிலாஸ்பூரில் இருந்து செவ்வாய்கிழமை தோறும் காலை 8.10 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2787) வியாழக்கிழமை காலை 5.05 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இதேபோல், நெல்லையில் இருந்து ஞாயிற்றுக்கிழமை தோறும் இரவு 12.15 மணிக்கு புறப்படும் வாராந்திர ரயில் (2788) மறுநாள் (திங்கட்கிழமை) இரவு 9.35 மணிக்கு பிலாஸ்பூரை சென்றடையும்.
- நெல்லை - ஹபா இடையே வாரம் இருமுறை ரயில் இயக்கப்படுகிறது. ஹபாவில் இருந்து வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் இரவு 9.15 மணிக்கு புறப்படும் ரயில் (2998), ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் மாலை 5.30 மணிக்கு நெல்லையை வந்தடையும்.
இதேபோல், நெல்லையில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய்கிழமைகளில் காலை 5.45 மணிக்கு புறப்படும் ரயில் (2997), புதன் மற்றும் வியாழக்கிழமைகளில் நள்ளிரவு 2.10 மணிக்கு ஹபாவை சென்றடையும்.
- ராமேஸ்வரம் - கன்னியாகுமரி இடையே வாரம் 3 முறை அதிவேக ரயில் இயக்கப்படுகிறது. ராமேஸ்வரத்தில் இருந்து சனி, திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் இரவு 8.45 மணிக்கு புறப்படும் ரயில் (2789), ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் அதிகாலை 4.05 மணிக்கு கன்னியாகுமரியை சென்றடைகிறது.
இதேபோல், கன்னியாகுமரி யில் இருந்து ஞாயிறு, செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் இரவு 10 மணிக்கு புறப்படும் ரயில் (2790), திங்கள், புதன் மற்றும் சனிக்கிழமைகளில் காலை 5.20 மணிக்கு ராமேஸ்வரத்தை சென்றடையும்.
- கோவையில் இருந்து சோரனூர் இடையே ஞாயிற்றுக்கிழமையை தவிர்த்து வார நாட்களில் பயணிகள் ரயில் இயக்கப்படுகிறது. கோவையில் இருந்து தினமும் காலை 9.45 மணிக்கு புறப்படும் ரயில் (605), மதியம் 12.35 மணிக்கு சோரனூரை சென்றடைகிறது.
இதேபோல், சோரனூரில் இருந்து தினமும் மதியம் 2.45 மணிக்கு புறப்படும் ரயில் (606), மாலை 5.30 மணிக்கு கோவையை வந்தடையும்.
இவை தவிர சோரனூர் - நிலாம்பூர், எஸ்வந்த்பூர் - கொச்சுவேலி, மட்கான் - எர்ணாகுளம், மங்களூர் - கொச்சுவேலி இடையேயும் வாராந்திர ரயில்கள் இயக்கப்பட உள்ளன.
இவை தவிர 6 ரயில்களின் தூரத்தை ரயில்வே நீட்டித்துள்ளது.
அந்த விவரம்...
- மங்களூர் - சென்னை சென்டிரல் வாரம் ஒருமுறை எக்ஸ்பிரஸ் புதுச்சேரி வரை நீட்டிக்கப்படுகிறது. இது
சென்னை எழும்பூர், தாம்பரம், செங்கல்பட்டு, மேல்மருவத்தூர், விழுப்புரம் ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
- ஜம்முதாவி - மதுரை - ஜம்முதாவி வாரம் 2 முறை எக்ஸ்பிரஸ் ரயில் நெல்லை செல்வதற்கு இணைப்பு ரயிலாக நீட்டிக்கப்படுகிறது. இது விருதுநகர், கோவில்பட்டி, வாஞ்சி மணியாச்சி ஆகிய நிலையங்களில் நின்று செல்லும்.
- எர்ணாகுளம் - திருச்சி - எர்ணாகுளம் தினசரி எக்ஸ்பிரஸ் நாகூர் வரை நீட்டிக்கப்படுகிறது. இது தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் நிலையங்களில் நின்று செல்லும்.
- திருவனந்தபுரம் - எர்ணாகுளம் இடையே தினசரி இயக்கப்படும் ஜனசதாப்தி எக்ஸ்பிரஸ் கோழிக்கோடு வரையிலும், யஸ்வந்த்பூர் - மங்களூர் சென்டிரல் - எஸ்வந்த்பூர் தினசரி எக்ஸ்பிரஸ் ரயில் கண்ணூர் வரையிலும், எர்ணாகுளம் - ஜெய்ப்பூர் - எர்ணாகுளம் வாராந்திர எக்ஸ்பிரஸ் ரயில் ஆஜ்மீர் வரையிலும் நீட்டிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
நாளை முதல் தமிழக ரயில்களின் நேரம் மாற்றம்
தெற்கு ரயில்வேயின் புதிய கால அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது. அப்போது பல்வேறு ரயில்களின் புறப்படும் நேரம் மாற்றியமைக்கப்பட்ட விவரம் வெளியிடப்பட்டது. இந்த மாற்றங்கள் நவம்பர் 1ம் தேதி (நாளை) முதல் அமலுக்கு வருகிறது.
புறப்படும் நேரம் மாற்றம் குறித்த முழு விவரம்:
சென்னை சென்டிரல் ரயில்கள்...
- தன்பாத்-டாடா - ஆலப்புழா எக்ஸ்பிரஸ் காலை 3.45 மணிக்கு பதில் 20 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.
- குவஹாத்தி - பெங்களூர் எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.
- குவஹாத்தி - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.
- குவஹாத்தி - எர்ணாகுளம் சந்திப்பு எக்ஸ்பிரஸ் காலை 4.50 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 4.40 மணிக்கு புறப்படும்.
- திருவனந்தபுரம் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.
- பெங்களூர் - குவஹாத்தி எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.
- எர்ணாகுளம் சந்திப்பு - பாட்னா எக்ஸ்பிரஸ் காலை 6.30 மணிக்கு பதில் 10 நிமிடம் முன்னதாக 6.20 மணிக்கு புறப்படும்.
கோவை எக்ஸ்பிரஸ்...
- ஜெய்ப்பூர் - கோவை எக்ஸ்பிரஸ் காலை 11 மணிக்கு பதில் 50 நிமிடம் முன்னதாக 10.10 மணிக்கு புறப்படும்.
- சென்னை - பெங்களூர் எக்ஸ்பிரஸ் மதியம் 1.20 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 1.35 மணிக்கு புறப்படும்.
- சென்னை - வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.
- சென்னை - ஹூப்ளி எக்ஸ்பிரஸ் மதியம் 1.40 மணிக்கு பதில் 30 நிமிடம் தாமதமாக 2.10 மணிக்கு புறப்படும்.
- பெங்களூர் - தர்பங்கா பக்மடி எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.
- பெங்களூர் - பாட்னா சங்கமித்ரா எக்ஸ்பிரஸ் மதியம் 3.25 மணிக்கு பதில் 5 நிமிடம் தாமதமாக 3.30 மணிக்கு புறப்படும்.
லால்பாக் எக்ஸ்பிரஸ்...
- சென்னை - பெங்களூர் லால்பாக் எக்ஸ்பிரஸ் மதியம் 3.30 மணிக்கு பதிலாக 3.35 மணிக்கு புறப்படும்.
- சென்னை - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் மாலை 4 மணிக்கு பதில் 35 நிமிடம் முன்னதாக 3.25 மணிக்கு புறப்படும்.
- சென்னை - கூடூர் பயணிகள் ரெயில் மாலை 4.10 மணிக்கு பதிலாக 4 மணிக்கே புறப்படும்.
- சென்னை - மங்களூர் எக்ஸ்பிரஸ் ரெயில் (செவ்வாய் தவிர) மாலை 5 மணிக்கு பதிலாக 4.10 மணிக்கே புறப்படும்.
- சென்னை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.
- சென்னை - கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.
- கோவை - ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் மாலை 5.30 மணிக்கு பதிலாக 5.35 மணிக்கு புறப்படும்.
நாகர்கோவில் எக்ஸ்பிரஸ்...
- சென்னை - நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் மாலை 6.05 மணிக்கு பதில் 10 நிமிடம் தாமதமாக 6.15 மணிக்கு புறப்படும்.
- சென்னை - திருவனந்தபுரம் மெயில் இரவு 8 மணிக்கு பதிலாக இரவு 7.45 மணிக்கே புறப்படும்.
- சென்னை - மங்களூர் மெயில் இரவு 8.15 மணிக்கு பதிலாக இரவு 8 மணிக்கே புறப்படும்.
- சென்னை - கோவை எக்ஸ்பிரஸ் இரவு 10.20 மணிக்கு பதிலாக 10.30 மணிக்கு புறப்படும்.
ஏற்காடு எக்ஸ்பிரஸ்...
- சென்னை - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் இரவு 10.30 மணிக்கு பதிலாக 10.40 மணிக்கு புறப்படும்.
- ஆலப்புழா - டாடா-தன்பத் எக்ஸ்பிரஸ் இரவு 10.35 மணிக்கு பதில் இரவு 11 மணிக்கு புறப்படும்.
- திருவனந்தபுரம் - கோரக்பூர் எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.
- திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.
- எர்ணாகுளம் - பராணி எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.
- திருவனந்தபுரம் - இந்தூர் எக்ஸ்பிரஸ் இரவு 11.15 மணிக்கு பதில் 11.25 மணிக்கு புறப்படும்.
ஹவுரா மெயில்...
- சென்னை - ஹவுரா மெயில் இரவு 11.35 மணிக்கு பதிலாக 11.40 மணிக்கு புறப்படும்.
- கோரக்பூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.
- கோர்வா - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.
- பராணி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.
- இந்தூர் - திருவனந்தபுரம் எக்ஸ்பிரஸ் இரவு 11.55 மணிக்கு பதிலாக 11.45 மணிக்கே புறப்படும்.
வைகை எக்ஸ்பிரஸ்
- சென்னை - மதுரை வைகை எக்ஸ்பிரஸ் மதியம் 12.25 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 12.40 மணிக்கு புறப்படும்.
- சென்னை - திருச்சி பல்லவன் எக்ஸ்பிரஸ் மதியம் 3.30 மணிக்கு பதில் 15 நிமிடம் தாமதமாக 3.45 மணிக்கு புறப்படும்.
- நிஜாமுதின் - மதுரை தமிழ்நாடு சம்பக்கிராந்தி எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.
- நிஜாமுதின் - கன்னியாகுமரி திருக்குறள் எக்ஸ்பிரஸ் சென்னை எழும்பூரில் இருந்து மாலை 6.40 மணிக்கு பதில் 6.35 மணிக்கே புறப்படும்.
- சென்னை - திருவனந்தபுரம் அனந்தபுரி எக்ஸ்பிரஸ் இரவு 7.05 மணிக்கு பதிலாக 7.15 மணிக்கு புறப்படும்.
முத்துநகர் எக்ஸ்பிரஸ்...
- சென்னை - தூத்துக்குடி முத்துநகர் எக்ஸ்பிரஸ் இரவு 7.30 மணிக்கு பதிலாக 7.35 மணிக்கு புறப்படும்.
- ஹவுரா - திருச்சி எக்ஸ்பிரஸ் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.
- ஹவுரா - கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் இரவு 8.25 மணிக்கு பதிலாக 8.20 மணிக்கே புறப்படும்.
பாண்டியன் எக்ஸ்பிரஸ்...
- சென்னை - மதுரை பாண்டியன் எக்ஸ்பிரஸ் இரவு 9.40 மணிக்கு பதிலாக 9.45 மணிக்கு புறப்படும்.
- சென்னை - திருச்செந்தூர் செந்தூர் எக்ஸ்பிரஸ் (வாரம் ஒருமுறை) மாலை 3.40 மணிக்கு பதில் ஒரு மணி நேரம் முன்னதாக 2.40 மணிக்கே புறப்படும்.
- சென்னை - சேலம் எக்ஸ்பிரஸ் இரவு 11.20 மணிக்கு பதிலாக 11 மணிக்கே புறப்படும்.
28 ரயில்களின் வேகம் அதிகரிப்பு...
இதேபோல 28 ரயில்களின் வேகமும் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுவும் நாளை முதல் அமலுக்கு வரும்.
- விழுப்புரம் - மதுரை பாசஞ்சர் (90 நிமிடம்)
- ராமேஸ்வரம் - ஓக்கா எக்ஸ்பிரஸ் (80 நிமிடம்)
- ஜெய்ப்பூர் - கோவை எக்ஸ்பிரஸ் (75 நிமிடம்)
- ராமேஸ்வரம் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (75 நிமிடம்)
- டேராடூன்-சண்டிகார் - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)
- ராஜ்கோட் - கோவை எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)
- திருவனந்தபுரம் - கோர்பா எக்ஸ்பிரஸ் (60 நிமிடம்)
- எர்ணாகுளம் - பராணி எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)
- எர்ணாகுளம் - புனே எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)
- சென்னை சென்டிரல் - மங்களூர் எக்ஸ்பிரஸ் (35 நிமிடம்)
- ஜம்முதாவி - கன்னியாகுமரி இம்சாகர் எக்ஸ்பிரஸ் (30 நிமிடம்)
- கோவை - சென்னை சென்டிரல் எக்ஸ்பிரஸ் (30 நிமிடம்)
- சாப்ரா - சென்னை சென்டிரல் கங்கா காவேரி எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- திருச்செந்தூர் - சென்னை எழும்பூர் எக்ஸ்பிரஸ் (25 நிமிடம்)
- மயிலாடுதுறை - மைசூர் எக்ஸ்பிரஸ் (25 நிமிடம்)
- கொச்சுவேலி - சண்டிகார், கேரளா சம்பக்கிராந்தி எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- குவஹாத்தி - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- திருவனந்தபுரம் - கோரக்பூர் ரப்திசாகர் எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- சென்னை சென்டிரல் - கோவை எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- திருச்சி - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (20 நிமிடம்)
- ஓக்கா - ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)
- மைசூர் - மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)
- கொச்சுவேலி - அமிர்தசரஸ் எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)
- சென்னை சென்டிரல் - வாஸ்கோடகாமா எக்ஸ்பிரஸ் (15 நிமிடம்)
- எர்ணாகுளம் - கண்ணூர் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)
- திருவனந்தபுரம் - சோரனூர் எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)
- சென்னை சென்டிரல் - ஈரோடு ஏற்காடு எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்)
- சென்னை சென்டிரல் - மங்களூர் வெஸ்ட்கோஸ்டு எக்ஸ்பிரஸ் (10 நிமிடம்).