மாயவரத்துக்கு தற்காலிக சிறப்பு ரயில் இயக்கம்

தஞ்சாவூரில் இருந்து மயிலாடுதுறைக்கு தற்காலிக சிறப்பு பயணிகள் ரயில் நேற்று முதல் இயங்கத் துவங்கியது. மயிலாடுதுறையில் இருந்து விழுப்புரம் வரையிலான அகல ரயில்பாதை அமைக்கப்பட்டு அங்கு பணிகள் நிறைவு பெறும் நிலையில் உள்ளது. இதற்கான பல்வேறு கட்ட ஆய்வுப்பணிக ள் நடந்து வருகிறது. இதற்கிடையில் திருச்சியில் இருந்து தஞ்சை வழியாக மயிலாடுதுறைக்கு தற்காலிக சிறப்பு ரயில் இயக்க ரயி ல்வேத்துறை முடிவு செய்தது. இந்த ரயில், மயிலாடுதுறை - வி ழுப்புரம் அகல ரயில்பாதை செ யல்படத்துவங்கியதும், திருச்சி -விழுப்புரத்துக்கு நீட்டிப்பு செய்ய திட்டமிடப்பட்டுள்ளது.
இந்த தற்காலிக சிறப்பு ரயில் இயக்கம் நேற்று துவங்கியது. தஞ்சை ரயில்வே ஸ்டேஷனில் இருந்து நேற்று காலை 10.45 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறைக்கு சென்றது. இந்த ரயில் தினமும் காலை 10.45 மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு 12.50 மணி க்கு மயிலாடுதுறைக்கு செல்லும். இரவு எட்டு மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு தஞ்சைக்கு இரவு 9.55 மணிக்கு வரும். இரவு பத்து மணிக்கு தஞ்சையில் இருந்து புறப்பட்டு 11.20 மணிக்கு திருச்சிக்கு செல்லும். காலை 8.30 மணிக்கு அந்த ரயில் திருச்சியில் இருந்து புறப்பட்டு தஞ்சைக்கு 9.45 மணிக்கு வரும். மீண்டும் 10.45 மணிக்கு மயிலாடுதுறைக்கு புறப்பட்டு செல்லு ம். இந்த ரயிலில் ஆறு பெட்டிகள் இருக்கும். தஞ்சையில் நான்காவது பிளாட் ஃபார்மில் இரு ந்து புறப்பட்டு செல்லும். இந்த ரயில் ஜனவரி 20ம் தேதி வரை இயங்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவித்தன.

0 comments: