கடத்தப்பட்ட 4 சிறுவர்கள் மீட்பு

கொத்தடிமைகளைக வேலை செய்வற்காக அழைத்துச் செல்லப்பட்ட தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 4 சிறுவர்கள் திருவனந்தபுரத்தில் மீட்கப்பட்டுள்ளனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரியை சேர்ந்த சின்னதுரை மகன் இசக்கி. உடன்குடியை சேர்ந்த செல்லப்பா மகன் செல்லத்துரை, பெரியசாமி மகன் சுடலைமுத்து, பெருமாள் மகன் ஆறுமுகம், மற்றும் ஐகோர்ட் இவர்கள் அனைவரும் 7 வயது முதல் 12 வயதுக்குட்பட்டவர்கள்.

இவர்களை பெங்களூரில் உள்ள மிட்டாய் கம்பெனி ஓன்றில் வேலைக்கு சேர்ப்பதற்காக திருச்செந்தூரை சேர்ந்த முத்துகனி என்ற பெண் ரயில் மூலம் திருவனந்தபுரம் வழியாக பெங்களூருக்கு அழைத்து சென்றார்.

திருவனந்தபுரம் ரயில் நிலையத்தில் முத்துகனி 5 சிறுவர்களுடன் இருப்பதை பார்த்த கேரள போலீசாருக்கு சந்தேகம் வந்தது. உடனே அவரை பிடித்து போலீசார் விசாரித்தனர். விசாரணையில் சிறுவர்களை கொத்தடிமைகளாக வேலை செய்ய முத்துகனி பெங்களூருக்கு அழைத்து செல்வது தெரிய வந்தது.

இதையடுத்து முத்துகனியை கேரள போலீசார் கைது செய்தனர். ஐந்து சிறுவர்களையும் போலீசார் மீட்டு அங்குள்ள சிறுவர் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.

அந்த காப்பக நிர்வாகி தூத்துக்குடி முத்துகுளியல் காப்பக நிர்வாக நொய்லினை தொடர்பு கொண்டு சிறுவர்களை மீட்டது குறித்து தகவல் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து 5 சிறுவர்களையும் தூத்துக்குடிக்கு கொண்டு வர ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பேரில் 5 சிறுவர்களும் தூத்துக்குடி அழைத்து வரப்பட்டு முத்துகுவியல் காப்பகத்தில் ஓப்படைத்தனர்.

இது தொடர்பாக சிறுவர்களின் பெற்றோர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பெற்றோர் வந்ததும் சிறுவர்கள் அவர்களிடம் ஓப்படைக்கப்படுவார்கள் என காப்பாக நிர்வாகிகள் தெரிவித்தனர்.

0 comments: