மன்மோகனுக்கு ஒபாமா விருந்து

அமெரிக்க அதிபர் ஒபாமா, பிரதமர் மன்மோகன் சிங்குக்கு அளிக்கும் விருந்தில் 400 பேர் கலந்துகொள்கின்றனர். பிரதமர் மன்மோகன் சிங் அடுத்த வாரம் அமெரிக்கா செல்கிறார். அமெரிக்க அதிபர் ஒபாமா, வெள்ளை மாளிகை வளாகத்தில் வரும் 24ம் தேதி மன்மோகன் சிங்குக்கு சிறப்பு விருந்தளித்து கவுரப்படுத்த உள்ளார்.அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ஹிலாரி, இந்திய வம்சா வளியினர், லூசியானா கவர்னர் பாபி ஜின்டால் உள்ளிட்ட 120 வி.வி.ஐ.பி.,க்கள் உட்பட 400 பேர் இந்த விருந்தில் கலந்து கொள்கின்றனர்.

0 comments: