பார்தி ஏர்டெல் நிறுவனம், புதிய கட்டணத் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் ரோமிங் கட்டணம் 60 சதவீத அளவுக்கு குறைக்கப்பட்டுள்ளது.இந்தியாவின் முன்னணி செல்போன் சேவை நிறுவனமான பார்தி ஏர்டெல், இந்திய செல்போன் வாடிக்கையாளர்களில் 23 சதவீதத்திற்கும் மேற்பட்டோரைக் கொண்டுள்ளது.தற்போது செல்போன் சேவை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களைக் கவர பல்வேறு சலுகைகளை அறிவித்து வருகின்றன.
இருப்பினும் ஏர் டெல் தரப்பிலிருந்து பெரிய அளவில் நடவடிக்கை இல்லாமல் இருந்து வந்தது.
இந்த நிலையில் ரோமிங் கட்டணத்தில் 60 சதவீதத்தைக் குறைத்து அறிவித்துள்ளது ஏர்டெல்.
0 comments:
Post a Comment