ஈரானில் பின்லேடன் மனைவி, குழந்தைகள் கைது

ஈரானில் பதுங்கியிருந்த சர்வதேச பயங்கரவாதி ஒஸாமா பின்லேடனின் மனைவி மற்றும் குழந்தைகள் கைது செய்யப்பட்டுள்ளனர். பின்லேடனுக்கு பல மனைவிகள் மற்றும் குழந்தைகள் உள்ளனர்.அவர்களில் ஒரு மனைவியும், சில குழந்தைகளும், பேரக்குழந்தைகளும் முன்பு ஆப்கானிஸ்தானில் பின்லேடனுடன் வசித்து வந்தனர்.நியூயார்க் இரட்டைக்கோபுர தாக்குதலுக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் தாக்குதல் தொடங்கியதும் அவர்கள் அங்கு இருந்து தப்பி, ஈரான் நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டனர்.இந்நிலையில் ஏறக்குறைய எட்டு ஆண்டுகளுக்கு பிறகு அவர்கள் தெஹ்ரானில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து அவர்களை ஈரான் அரசு கைது செய்து, ரகசிய இடத்தில் வீட்டுக்காவலில் வைத்து இருப்பதாக இங்கிலாந்திலிருந்து வெளியாகும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது

0 comments: