திருச்செந்தூர் இடைத்தேர்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளர் அனிதா ராதாகிருஷ்னை ஆதரித்து பிரச்சாரம் செய்தார்.
திருச்செந்தூர்தொகுதியில் துணைமுதல்வர் ஸ்டாலின் மாலையில் பிரச்சாரத்தை துவக்கினார். வடக்கு ஆத்தூரில் அவர் வேனில் நின்றபடி பேசினார்.
அப்போது அவர், ‘’ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் முதல்வர் கருணாநிதி உங்களுக்காக பணியாற்றுபவர். ஆனால் ஆட்சியில் இருந்தால் தமிழ்நாட்டிலும் இல்லாவிட்டால் கொடநாட்டிலும் இருப்பவர் என்பவர் யார் என்பது உங்களுக்கு தெரியும்.
பிரச்சாரத்தின் போது ஜெயலலிதா, தி.மு.க.,வேட்பாளர் அனிதாவை துரோகி என விமர்சித்துள்ளார். அனிதா ராதாகிருஷ்ணன், ஜெயலலிதாவை மறந்தாலும், அவர் அனிதாவை மறக்கவில்லை. யார் யாரை துரோகி என கூறுவது.
கட்சியில் சேர்த்ததாகவும் மாவட்ட செயலாளர் ஆக்கியதாகவும், ஆனால் துரோகம் செய்துவிட்டு சென்று விட்டதாக கூறியுள்ளார்.
ஆனால் துரோகம் செய்தது ஜெயலலிதாதான். அனிதாவை அவர்தான் நீக்கினார். அனிதா வெளியேறவில்லை.
எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்.,உள்ளார். எனவே அவருக்கு பதிலா தம்மை உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர்., நோய்வாய்ப்பட்டு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது ஜெயலலிதா, அப்போதைய பிரதமர் ராஜீவ்காந்திக்கு எழுதிய கடிதத்தில், செயல்படாத முதல்வராக எம்.ஜி.ஆர்.,உள்ளார். எனவே அவருக்கு பதிலா தம்மை உட்கார வைக்க கூறிய துரோகி ஜெயலலிதா.
எம்.ஜி.ஆர்.,இறந்து அவர் உடல் பொதுமக்கள் பார்வைக்கு வைத்திருந்த இடத்தில், விட்ட அறிக்கையில் ஜானகியம்மாள்தான் எம்.ஜி.ஆருக்கு மோரில் விஷம் கலந்துகொடுத்து கொன்றதாக கூறினார்.
எனவே முந்தைய தேர்தலைப்போலவே இந்த தேர்தலிலும் அவருக்கு தக்கபாடம் புகட்டுங்கள்’’என்று பேசினார்.
0 comments:
Post a Comment