ஆப்கானிஸ்தானுக்கு கூடுதல் படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்தப்போவதாக பயங்கரவாத அமைப்பான தாலிபான் அறிவித்துள்ளது. அமெரிக்கர்களுக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த உள்ளதாக தாலிபான் அமைப்பின் தளபதி வலியூர் ரஹ்மான் அறிவித்துள்ளார். தனது சக கூட்டாளிகளுடன் தோன்றி கூறியுள்ளார்.
ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் தோற்று ஓடுவதாலேயே, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத் தாக்குதலைக் கட்டுப்படுத்த கூடுதல் படைகளை அனுப்பப் போவதாக அமெரிக்கா அறவித்துள்ளது என்றும் வலியூர் ரஹ்மான் கூறினார்.எனவே, பாகிஸ்தானில் இருந்து ஆயிரக்கணக்கான தாலிபான் தீவிரவாதிகளை ஆப்கானிஸ்தானுக்கு அனுப்பி, அங்கு அமெரிக்கப் படையினருக்கு எதிரான தாக்குதலை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்றும் கூறினார்.
ஒசாமா பின் லேடன் இறந்து விட்டதாக வரும் தகவல்களில் உண்மையில்லை. அவர் உயிருடன் நலமாகவே உள்ளார். அமெரிக்கர்களுக்கு எதிரான போரில் ஈடுபடும் வீரர்களுக்கு ஆலோசனைகளும், ஊக்குவிப்பையும் அளித்து வருகிறார் என்றும் அவர் குறிப்பிட்டார்.
0 comments:
Post a Comment