ஒருநாள் கிரிகெட் போட்டி வேறு இடத்திற்கு மாற்றம்

இந்தியா இலங்கை இடையேயான ஒருநாள் கிரிக்கெட் போட்டி வருகிற 18ந் தேதி விசாகப்பட்டினம் நகரில் நடைபெற உள்ளது.

தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் பற்றி எரியும் போது கிரிக்கெட் போட்டி தேவை இல்லை என்றும், இந்த போட்டியை நடத்த விடமாட்டோம் என்று அனகாபள்ளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. கண்டா சீனிவாச ராவ், காகிநாடா தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. துவாரம்பூடி சந்திரசேகர ராவ் ஆகியோர் அறிவித்து உள்ளனர்.

இதையடுத்து கிரிக்கெட் போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பது குறித்து அம்மாநில காவல்துறை உயர் அதிகாரிகள் கிரிக்கெட் அசோஷியேஷனிடம் நடத்திய ஆலோசனையில், 18ஆம் தேதி நடைபெற இருக்கும் போட்டிக்கு பாதுகாப்பு அளிப்பதில் சிரமம் உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் போட்டி நடத்துவது குறித்த தீவிர ஆலோசனையில் ஈடுபட்டுள்ள இந்திய கிரிக்கெட் வாரியம், போட்டியை வேறு இடத்திற்கு மாற்ற திட்டமிட்டுள்ளது. இதுகுறித்து இன்று மாலை அறிவிக்கப்படும் என்றும் இந்திய கிரிக்கெட் வாரியம் தெரிவித்துள்ளது.

0 comments: