தேஜஸ் என்ற மலையாள நாளிதழைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டு கேரள அரசுக்கு மத்திய உள்துறை அமைச்சகத்திலிருந்து கடிதம் ஒன்று அனுப்பப்பட்டதாக செய்திகள் வெளியாகி இருந்தன.
ஆனால் உள்துறை அமைச்சகம் இதை மறுத்துள்ளது.இந்தக் கடிதம் அனுப்பப்பட்டது தொடர்பாக எங்களுக்கு எதுவும் தெரியாது. மேலும் அது எங்கிருந்து அனுப்பப்பட்டது என்பதைக் குறித்து விசாரணை நடத்தப்படும் என்று உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நாங்கள் இத்தகைய கடிதத்தைப் பார்க்கவுமில்லை; அதைக் கேரள அரசுக்கு அனுப்பவுமில்லை என உள்துறை அமைச்சக அதிகாரிகள் கூறியுள்ளனர்.
தேஜஸின் பத்திரிகைச் சுதந்திரத்தில் தலையிடும் எந்த எண்ணமும் எங்களுக்கில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான இந்தியா அரசின் கூட்டணி, கஷ்மீர் குறித்து அரசின் நடவடிக்கைகளை அரச பயங்கரவாதமாக சித்தரித்து அவற்றை சிறுபான்மை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் உரிமைகள் குறித்தும் தேஜஸ் நாளிதழ் அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக செய்தி வெளியிடுவதாகவும் எனவே அதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கக் கோரிய கடிதம் ஒன்றை உள்துறை அமைச்சகத்தின் தேசிய ஒருமைப்பாட்டு பிரிவு இயக்குநர் ஒய்.கெ.பவேஜா கேரள முதன்மைச் செயலாளருக்கு கடிதம் எழுதியிருந்தார்.ஆனால் தற்போது இக்கடிதம் தாங்கள் எழுதவில்லை என உள்துறை அமைச்சகம் கூறுகிறது.
ஒரு வேளை கடிதம் வந்தது உண்மையானால் அது முதன்மை அதிகாரிகளுக்கு தெரியாமல் உள்துறை அமைச்சகத்தைச் சார்ந்த யாரோ எழுதியிருக்க வாய்ப்புள்ளது என்றும் அதனைக்குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் உள்துறை அமைச்சக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
0 comments:
Post a Comment