தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பிரஜா ராஜ்யம் கட்சித் தலைவர் சிரஞ்சீவி, தனது சட்டமன்ற உறுப்பினர் பதவியை இன்று ராஜினாமா செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நடிகர் சிரஞ்சீவி, இதுவரை, தெலுங்கானா மாநிலம் அமைக்க ஆதரவு தெரிவித்து வந்தார். ஆனால், தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அவரது பிரஜா ராஜ்யம் கட்சியைச் சேர்ந்த 15 சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலம் அமைக்க எதிர்ப்பு தெரிவிக்குமாறும், ஒன்றுபட்ட ஆந்திராவுக்காக சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்யுமாறும் சிரஞ்சீவியை அவர்கள் நிர்பந்தம் செய்து வருகிறார்கள். இதுபற்றி நேற்று கட்சியின் மூத்த தலைவர்களுடன் சிரஞ்சீவி ஆலோசனை நடத்தினார்.
தனது திருப்பதி தொகுதி சட்டமன்ற பதவியை ராஜினாமா செய்வது குறித்து, இன்று முடிவு அறிவிப்பதாக, கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களிடம் சிரஞ்சீவி அறிவித்தார்.கட்சியின் அரசியல் விவகாரக் குழு கூட்டம் இன்று நடைபெறுகிறது. அதில், சிரஞ்சீவி தனது முடிவை அறிவிக்கிறார்.
இதற்கிடையே, தெலுங்கானாவுக்கு எதிராக சிரஞ்சீவி மாறி இருப்பதற்கு தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த பிரஜா ராஜ்யம் கட்சி பிரமுகர்கள் நேற்று அவரிடம் தங்கள் அதிருப்தியைத் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment