தெலுகானாவுக்கு எதிர்ப்பு:2 மாணவர்கள் கவலைக்கிடம்

தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆந்திராவில் காங்கிரஸ், தெலுங்கு தேசம், பிரஜா ராஜ்யம் கட்சியினர் நடத்தி வரும் போராட்டத்தில் மாணவர்களும் இணைந்து உள்ளனர்.

தனி தெலுங்கானாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து விசாகப்பட்டினத்தில் காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வரும் ஆந்திரா பல்கலைக்கழக மாணவர்கள் 12 பேர்களில் இருவரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
ஒரு மாணவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டதால் அவரை போலீசார் ஆம்புலன்சில் ஏற்றி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

0 comments: