அமெரிக்காவில் இந்தியருக்கு 12 ஆண்டு சிறை

இன்டர்நெட் மூலம் சட்டவிரோதமாக, மருந்து விற்பனை செய்த இந்தியருக்கு அமெரிக்க நீதிமன்றம் 12 ஆண்டு சிறை தண்டனை வழங்கியதுடன், ரூ.319 கோடி அபராதம் விதித்துள்ளது.
இந்தியாவை சேர்ந்த 47 வயது ராகேஷ் ஜோதி சரன், அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலம் அர்லிங்டன் நகரில் வசித்து வருகிறார்.
கேரிங்கடன் ஹெல்த்கேர் சிஸ்டம்ஸ் மற்றும் இன்பினிட்டி சர்வீசஸ் குழுமம் ஆகிய இரண்டு நிறுவனங்களை நடத்தி வரும் இவர், சிறைக் கைதிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு சட்டவிரோதமாக, வலி நீக்கி மற்றும் மனநல மருத்துவம் சார்ந்த அபாயகரமான மருந்துகளை விற்பனை செய்துள்ளார்.
மேலும், டாக்டர் அறிவுரை இல்லாமல், இன்டர்நெட் வாடிக்கையாளர்களுக்கும் விற்பனை செய்துள்ளார். இதன்மூலம் ரூ.940 கோடிக்கு வர்த்தகம் செய்துள்ளார். இதுகுறித்து தொடரப்பட்ட வழக்கில், டெக்சாஸ் நீதிமன்றம் இவருக்கு 12 ஆண்டு சிறை தண்டனையுடன் ரூ.319 கோடி அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த குற்றச்சாட்டின் கீழ் கடந்த மே மாதம் கைது செய்யப் பட்டார்.
இந்த வழக்கில் தொடர் புடைய மேலும் பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கும் தண்டனை வழங்கப்பட்டு உள்ளது. முன்பு இதே குற்றச் சாட்டின் கீழ் கடந்த 2005ம் ஆண்டில் இவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

0 comments: