தனி தெலுங்கானா மாநிலத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்ட ஒரு கும்பல், கடந்த 11-ந் தேதி திருப்பதியில் 2 பஸ்களை தீ வைத்து எரித்தது.
இந்த பஸ் எரிப்பு தொடர்பாக திருப்பதி நகர வளர்ச்சி கழக தலைவர் பாஸ்கர ரெட்டி மீது போலீசார் வழக்கு பதிவு செய்து உள்ளனர்.
இந்நிலையில், உண்ணாவிரதம் இருந்து வரும் ஸ்ரீவெங்கடேஸ்வரா பல்கலைக் கழக மாணவர்களுடன் அவர் உண்ணாவிரதத்தில் பங்கேற்றார். மாலையில் அங்கு வந்த திருப்பதி போலீஸ் இன்ஸ்பெக்டர் சுதாகர் ரெட்டி, பஸ் எரிப்பு வழக்கு தொடர்பாக அவரை கைது செய்வதாகக் கூறி அழைத்து சென்றார்.
அப்போது போராட்ட அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் கலவரம் வெடித்தது. தாலுகா அலுவலகத்துக்கு தீ வைக்கப்பட்டது.
0 comments:
Post a Comment