Showing posts with label வேலை. Show all posts
Showing posts with label வேலை. Show all posts

அமெரிக்க நிறுவனத்தில் 19 பேருக்கு வேலைஉத்தரவுகளை வழங்கினார் துணை முதல்வர்

ஒரகடம் சிப்காட் வளாகத்தில் உள்ள அமெரிக்க நிறுவனத்தில் பணிபுரிய, உள்ளூர் இளைஞர்கள் 19 பேருக்கு பணி நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஸ்டாலின் வழங்கினார்.


சான்மினா - எஸ்.சி.ஐ., நிறுவனம், 225 கோடி ரூபாய் முதலீட்டில் தகவல் தொடர்பு, மருத்துவம், தானியங்கி, பல் நோக்கு ஊடகம், நுகர்வோர் மின்னணு சாதனங்கள் மற்றும் பாதுகாப்பு சாதனங்களுக்காக உயர் தொழில்நுட்ப மின்னணு கருவிகள் தயாரிப்பதற்கான தொழிற்சாலையை நிறுவியுள்ளது.இந்த தொழிற்சாலையை, கடந்த மார்ச் 28ம் தேதி துவக்கி வைத்து துணை முதல் வர் ஸ்டாலின் பேசினார்.


ஒரகடம் பகுதியில் உள்ள வல்லக்கோட்டை, வல்லம், வடகால், வைப்பூர், மாத்தூர் மற்றும் சென்னாக்குப்பம் கிராமங்களில் உள்ள உயர்நிலைப்பள்ளிகளில் பிளஸ் 2 படித்த 10 மாணவிகளையும், ஒன்பது மாணவர்களையும் நேர்முகத் தேர்வு மூலம் சான்மினா நிறுவனம் தேர்வு செய்தது.இந்த 19 பேரும், மேற்படிப்பை தொடர முடியாத ஏழ்மை நிலையில் உள்ளனர்.


இவர்கள் அனைவருக்கும் சான் மினா நிறுவனத்தில், இளநிலை இயக்குபவராக (ஜூனியர் ஆபரேட்டர்) நியமிக் கப்பட்டுள்ளனர். இதற்கான நியமன ஆணைகளை, துணை முதல்வர் ஸ்டாலின் நேற்று வழங் கினார்.மாணவர்கள் உயர்கல்வி படிக்க விரும்பினால், அதற்கான கால அவகாசமும், படிப்பிற்குத் தேவையான நிதி உதவிகளையும் வழங்க சான்மினா நிறுவனம் முன்வந்துள்ளது.

ஐடி துறையில் 50,000 பேருக்கு வேலை

தகவல் தொழில்நுட்பத் துறையில் அடுத்த ஆண்டில் 50 ஆயிரம் பேருக்கு புதிதாகவேலை வாய்ப்பு கிடைக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.சர்வதேச நிதிநெருக்கடி காரணமாக ஐடி துறையில் லட்சக் கணக்கானோர் வேலை இழந்ததுடன் புதிய வேலை வாய்ப்பும் குறைந்தது.

இப்போது நிலைமை சீரடைந்து வருவதால் அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் ஐடி துறை நிறுவனங்கள் அதிக அளவில் புதிதாக ஊழியர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.