'கோவிலுக்கு மசூதி': பாஜக கோரிக்கையை நிராகரித்த முஸ்லீம் தலைவர்கள்

ராமர் கோவில் கட்ட அனுமதி அளித்தால், பாபர் மசூதி அமைக்க உதவுவதாக பாஜக தலைவர் நிதின் கத்காரி கூறியுள்ளதை முஸ்லீம்கள் நிராகரித்துள்ளனர்.அயோத்தியில் ராமர் கோவில் கட்டினால் அதற்கு சற்று தள்ளி பாபர் மசூதி கட்டுவதற்கு பாஜக உதவும் என்று நிதின் கத்காரி நேற்று கூறியிருந்தார்.இதை முஸ்லீம் தலைவர்கள் நிராகரித்து விட்டனர். பல்வேறு முஸ்லீம் அமைப்புகளும் ஒரே குரலில் இந்த அழைப்பை நிராகரித்துள்ளன.நிராகரித்ததோடு நில்லாமல், கோர்ட் உத்தரவு வரும் வரை பாஜக காத்திருக்க வேண்டும் என்றும் முஸ்லீம் தலைவர்கள் கூறியுள்ளனர்.லோக்சபா எம்.பி. அசாவுதீன் ஓவைசி கூறுகையில், கோர்ட் உத்தரவு எதுவாக இருந்தாலும் அதை நாங்கள் ஏற்போம். எங்களுக்கு பாதகமாக இருந்தாலும் சரி, சாதகமாக இருந்தாலும் சரி. அதே போல சொல்ல பாஜக தயாரா என்றார்.பாபர் மசூதி நடவடிக்கைக் குழுவின் முக்கிய உறுப்பினர்களான ஸபார்யாப் ஜிலானி மற்றும் சையத் சஹாபுதீன் ஆகியோர் கூறுகையில்,விட்டுக் கொடுத்தல் என்ற பேச்சுக்கே இங்கு இடமில்லை. இந்தப் பிரச்சினை நீதிமன்றங்கள் முன்பு உள்ளது. அவற்றின் தீர்ப்பு வரும் வரை அனைவரும் காத்திருக்கத்தான் வேண்டும் என்றர்.ராஜ்யசபா எம்.பியும், ஜமாத் உலமா இ ஹிந்த் அமைப்பின் மூத்த தலைவர்களில் ஒருவருமான மஹமூத் மதானி கூறுகையில், முதலில் இந்தக் கருத்தை எந்த முஸ்லீமும் ஏற்க மாட்டார். 2வது, பாஜகவையும், ஆர்.எஸ்.எஸ்ஸையும் நம்ப முடியாது. உச்சநீதிமன்றத்திற்கு அளித்த வாக்குறுதியையே மீறியவர்கள் அவர்கள் என்றார்.டெல்லி ஜூம்மா மசூதி இமாம் அகமது புகாரி கூறுகையில், இடம்தான் இப்போது பிரச்சினையே. முதலில் மசூதியை அவர்கள் ஆக்கிரமித்தனர். பின்னர் அதை இடித்தனர். இப்போது, நாங்கள் புதிய மசூதி கட்டிக் கொள்ள உதவுவதாக கூறுகின்றனர். இதை ஏற்பது என்ற பேச்சுக்கே இடமில்லை என்றார்.அரசியல் தலைவரான சையத் சஹாபுதீன் கூறுகையில், பாஜகவின் அழைப்பை ஏற்கும் பேச்சுக்கே இடமில்லை. இதே போன்ற ஒரு அழைப்பை முன்பே விஸ்வ இந்து பரிஷத் கூறியது.மாற்று இடத்திலோ அல்லது சற்று தள்ளியோ மசூதியை அமைப்பது என்ற பேச்சுக்கே இடமில்லை. எங்களது உரிமையை நாங்கள் ஒருபோதும் விட்டுக் கொடுக்க மாட்டோம் என்றார்.

லண்டனில் இந்தியப் பெண் குத்திக் கொலை: மாஜி காதலன் வெறிச் செயல்

இங்கிலாந்தில் இந்திய பெண் ணை அவரது மாஜி காதலன் கத்தியால் தாறுமாறாக குத்திக் கொலை செய்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கேமிலி மதுராசிங் (27), ஒரு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். லண்டனில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் பணியாற்றியபோது பால் பிரிஸ்டல் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது.ஆனால், 2009ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் இருந்து விலகிய மதுரா, லண்டனில் லிவர்பூல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தார்.ட்ரினிடாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிரிஸ்டல் உடனான தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் மதுரா.இதற்கிடையே, லண்டனில் வேறு ஒரு பாய் ஃபிரண்டுடன் மதுரா பழக ஆரம்பித்தார். புது காதலனுடன் மதுரா பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாஜி காதலன் பிரிஸ்டால் மதுராவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.ஆனால் மதுரா, பிரிஸ்டாலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால் லண்டனில் உள்ள மதுரா வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதம் செய்தார்.ஆனால், பிரிஸ்டாலை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு விருப்பமில்லை என மதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மேல் தொந்தரவு செய்தால் புகார் செய்துவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால், மதுராவை அவரின் சமையலறைக்கே இழுத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தாறுமாறாக குத்தியுள்ளார்.கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என கண்ட இடங்களிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை வெறித்தனமாக மதுராவை குத்தியுள்ளார் பிரிஸ்டல். இதில் மதுரா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.விரக்தியில் தன் உடலையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திக் கொண்டார் பிரிஸ்டால். பின்னர் மதுராவை அவரின் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு காரை வீதிகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். கார் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றதையடுத்து போலீசார் பிரிஸ்டாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.மதுராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது இத்தத கவல்களை போலீஸார் நீதிமன்றத்தில் வெளியிட்டனர்.

அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா?: தியேட்டர் அதிபர் சங்க அறிக்கை

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க பொதுச்செயலாளர் பன்னீர்செல்வம் விடுத்துள்ள அறிக்கையில், ’’தமிழர்களை வைத்து சம்பாதித்த நடிகர் அஜீத்குமார், தமிழர்களுக்கு எதிராக பேசி வருகிறார். காவிரி நீர் பிரச்சினைக்காக நடைபெற்ற போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் பேசியிருக்கிறார்.
அவர் சோர்வாக இருந்தால், நடிப்பதை நிறுத்திக்கொள்ள வேண்டியதுதானே...தொடர்ந்து ஏன் நடிக்க வேண்டும்?
அஜீத் தன் கருத்தை திரும்ப பெற வேண்டும். இந்த பிரச்சினை பற்றி விவாதிக்க மார்ச் 3-ந் தேதி, தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்க செயற்குழு கூட்டம் நடைபெற இருக்கிறது.
அஜீத் படத்தை திரையிடுவதா, வேண்டாமா? என்பதை அந்த கூட்டத்தில் முடிவு செய்வோம்’’என்று கூறியுள்ளார்.

திருமாவளவன் தலைமையில் கலைஞருக்கு பாராட்டு விழா

தாழ்த்தப்பட்ட பழங்குடியினருக்கு பல்வேறு திட்டங்களைத் நடைமுறைப்படுத்தியதற்காக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில் முதல்-அமைச்சர் கருணாநிதிக்கு `அம்பேத்கர் சுடர்' விருது வழங்கப்பட உள்ளது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைமை அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
’’முதலமைச்சர் கருணாநிதியை அவரது இல்லத்தில் தொல். திருமாவளன் எம்.பி. நேற்று நேரில் சந்தித்து பேசினார்.
அப்போது, `தாட்கோ' மூலம் தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் பெற்ற கடன்களைத் தள்ளுபடி செய்ததற்காகவும், ஏழை எளிய மக்கள் பயன்படக்கூடிய வகையில் கலைஞர் வீட்டு வசதித் திட்டம் என்கிற பெயரில் 21 லட்சம் காரை வீடுகள் கட்டுவதற்கான அறிவிப்புச் செய்ததற்கும், அரசுப் புறம்போக்கு நிலத்தில் 3 ஆண்டுகளாக குடியிருப்போருக்கு பட்டா வழங்கிட ஆணை பிறப்பித்ததற்காகவும் அவர் நன்றி தெரிவித்தார்.
தாழ்த்தப்பட்ட வகுப்பினரில் மிகவும் பின்தங்கியுள்ள அருந்ததியினருக்கு உள் ஒதுக்கீடு வழங்கப்பட்டிருப்பதை தாழ்த்தப்பட்டோருக்கான தேசிய ஆணையத்தைச் சேர்ந்த அதிகாரிகள் விமர்சனம் செய்துள்ளதை பொருட்படுத்தாமல் உள் ஒதுக்கீட்டைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் திருமாவளவன் கேட்டுக்கொண்டார்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்தி வரும் கருணாநிதியை பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010-ம் ஆண்டுக்கான `அம்பேத்கர் சுடர்' விருதினை வழங்குவது என்ற முடிவுக்கு முதலமைச்சர் கருணாநிதி மகிழ்வுடன் இசைவளித்துள்ளார்.
இதற்கான விருது வழங்கும் விழா ஏப்ரல் 14-ம் தேதி சென்னையில் நடைபெறுகிறது. இதில், முதலமைச்சர் கருணாநிதி பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். மற்ற விருதுகள் பெறுவோர் பட்டியல் விரைவில் அறிவிக்கப்படும்’’கூறப்பட்டுள்ளது.

திமுக பொதுக்குழுவில் SVசேகர்:ஸ்டாலின் கொடுத்த பேட்ஜ்

முதல்வர் கருணாநிதி தலைமையில் தி.மு.க., செயற்குழு, பொதுக்குழு இன்று காலை அண்ணா அறிவாலயத்தில் பரபரப்பாகக் கூடியது.
செயற்குழு, பொதுக்குழுவுக்கு தி.மு.க., தலைவர் கருணாநிதி தலைமை வகித்தார். மத்திய, மாநில அமைச்சர்கள் இதில் பங்கேற்றனர்.
அதிமுக எம்.எல்.ஏவாக இருந்த எஸ்.வி.சேகர் திமுக ஆதராவாக செயல்பட்டுவந்ததால் அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டார். ஆனால் அவர் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்யவில்லை.எந்த கட்சியிலும் சேரவில்லை. கட்சி சாராத எம்.எல்.ஏவாக இருந்து வருகிறார்ர்.
இந்நிலையில் அவர் திமுக செயற்குழு மற்றும் பொதுக்குழுவில் பங்கேற்றூள்ளார். திமுக உறுப்பினர்கள் மட்டுமே பங்குபெறும் இந்த கூட்டத்தில் இவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றுள்ளது பெரும் பரபரப்புள்ளாகியிருக்கிறது. திமுகவில் இணையப்போகிறாரா என்ற கேள்வியை எழுப்பியிருக்கிறது.
எஸ்.வி.சேகர் எப்போதும் தேசியக்கொடியை சட்டைப்பையில் குத்தியிருப்பது வழக்கம். இந்த கூட்டத்தில் பங்கேற்ற அவருக்கு ஸ்டாலின் திமுக கொடியை கொடுக்கச்சொல்லவும் அதை குத்திக்கொண்டு பங்கேற்றுள்ளார்.

ஷாரூக்கின் மை நேம் ஈஸ் கான்!

இதற்கு முந்தைய இந்தியப் படங்களின் வசூல் சாதனையை ஜஸ்ட் லைக் தட் முறியடித்து பெரும் சாதனைப் படைத்துள்ளது ஷாரூக்கானின் மை நேம் ஈஸ் கான்.

இந்திப் படங்களுக்கு பெரிய மார்க்கெட் இல்லாத தமிழகத்தில்கூட அரங்கு நிறைந்த காட்சிகளாக வெற்றி நடை போடுகிறது மை நேம் ஈஸ் கான்.

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களும் இந்தியாவுக்கு வந்து விளையாடினால் நன்றாக இருக்கும் என்ற ஒரு கருத்தைச் சொன்னதற்காகவே, ஷாரூக்கானை தேசத் துரோகி என்று குற்றம்சாட்டி, பெரும் கலவரத்தைத் தூண்டப் பார்த்தது பால்தாக்கரேயின் சிவசேனை.

கடந்த வெள்ளிக்கிழமை இப்படம் ரிலீசான போது மும்பை நகரம் முழுவதும் சிவசேனா கட்சியினர் கிளர்ச்சியில் ஈடுபட்டனர். பல தியேட்டர் அதிபர்கள் பயந்து போய் படத்தை நிறுத்தினார்கள். ஆனால் மராட்டிய அரசும், ரசிகர்களும் ஷாரூக்கானுக்கு ஆதரவாக களம் இறங்கியதும் மறுநாள் பல தியேட்டர்களில் படம் ரிலீசானது. தற்போது 80-க்கும் மேற்பட்ட தியேட்டர்களில் படம் ஓடுகிறது.

இந்தி திரையுலகில் சமீபத்திய படங்களின் வசூல் சாதனைகள் அனைத்தையும் மை நேம் இஸ் கான் படம் முறியடிக்கும் என்கின்றனர். தியேட்டருக்கு வெளியே பிளாக்கில் ஒரு டிக்கெட் ரூ.5 ஆயிரம் வரை விற்பனையாகின்றது. பெர்லின் திரைப்பட விழாவில் இந்தப் படத்துக்கு ஒரு டிக்கெட் ரூ.60 ஆயிரம் என விற்கப்பட்டு சில நிமிடங்களிலேயே முடிந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்காவிலும் இந்தப் படம் சக்கைபோடு போடுகிறது. அந்த படம் ரிலீசான 3 நாட்களில் 1.86 மில்லியன் டாலர் வசூலித்துள்ளது.

சென்னையில் 5 தியேட்டர்களில் தொடர்ந்து அரங்கு நிறைந்த காட்சிகளாக ஓடுகிறது. காதலர் தினத்தையொட்டி நேற்று இளைஞர்களும், இளம் பெண்களும் தியேட்டர்களில் நிரம்பி இருந்தனர். இதை சாதகமாக்கி பிளாக்கில் டிக்கெட் விற்பனை நடந்தது. அங்கும் கூட சில நிமிடங்களில் விற்றுத் தீர்ந்தது டிக்கெட்.

பொதுவாக ரிப்பீட்டட் ஆடியன்ஸ் எனும் திரும்பத் திரும்ப படம் பார்க்கும் ரசிகர்கள் [^] படம் வெளியான மூன்றாவது அல்லது நான்காவது வாரம்தான் வருவார்கள். ஆனால் இந்தப் படத்துக்கு இப்போதே ரிப்பீட்டட் ஆடியன்ஸ் வருகை அதிகரித்துள்ளதால், டிக்கெட் கிடைக்காமல் உள்ளதாகவும், இதனால் இன்னும் சில வாரங்களுக்கு ரசிகர்கள் வருகை ஏராளமாக இருக்கும் என்றும் மும்பை பாக்ஸ் ஆபீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன

ஜெய்ன் டெலிகாமின் ஆப்பிரிக்க பிரிவை வாங்கும் ஏர்டெல்

எப்படியாவது ஆப்பிரிக்க தொலைபேசி மார்க்கெட்டைப் பிடித்துவிடுவதில் தீவிரமாக உள்ளது பார்தி ஏர்டெல்.

தெனனாப்பிரிக்காவின் எம்டிஎன் தொலைபேசி நிறுவனத்தை வாங்க தீவிர முயற்சி மேற்கொண்டது பார்தி. இருமுறை முயன்றும் அந்த பேச்சுவார்த்தையில் வெற்றி கிட்டவில்லை.

இதற்கிடையே வங்கதேசத்தில் இயங்கி வந்த வாரிட் தொலைபேசி நிறுவனத்தை வாங்கியது. இப்போது மீண்டும் ஆப்ரிக்க மார்க்கெட் பக்கம் பார்வையைத் திருப்பியுள்ளது.

குவைத்தைச் சேர்ந்த ஜெய்ன் (Zain Telecom) நிறுவனத்தின் ஆப்பிரிக்க பிரிவை வாங்க பார்தி பேச்சுவார்த்தையைத் துவங்கியுள்ளது. ஆனால் மொராக்கோ மற்றும் சூடானில் மட்டும் ஜெய்ன் தனித்து இயங்கும் என்று கூறப்படுகிறது.

10.7 பில்லியன் டாலருக்கு இந்த டீல் பேசப்பட்டு வருகிறது. ஏப்ரல் மாதத்துக்குள் இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்துவிடும் என்று தெரிகிறது.

மோட்டாரோலா நிறுவனம் 2 ஆக பிரிக்கப்படுகிறது

செல்போன் தயாரிப்பில் முன்னணியில் உள்ள மோட்டாரோலா நிறுவனம் இரண்டாகப் பிரிக்கப்படுகிறது.

பிரிக்கப்பட்ட பிறகு இரு நிறுவனங்களுமே இரண்டு தனி வர்த்தக அடையாளங்களாகத் திகழும் வகையில் பங்குச் சந்தையில் பட்டியலிடப்படும் என்று மோட்டாரோலா அறிவித்துள்ளது.

இந்தத் திட்டத்துக்கு நிறுவனத்தின் இயக்குநர் குழுவும் முழுமையான சம்மதம் தெரிவித்துள்ளது.

முதல் நிறுவனம் மோட்டாரோலாவின் மொபைல் கருவிகள் தயாரிப்பு மற்றும் வர்த்தகத்தை உள்ளடக்கியதாக இருக்கும். இதன் சிஇஓவாக சஞ்சயா ஜா பணியாற்றுவார்.

இரண்டாவது நிறுவனம் மோட்டாரோலாவின் நெட்வொர்க் வர்த்தகத்தை மையமாகக் கொண்டதாக இருக்கும்.

இந்த இரு நிறுவனங்களும் மொபைல் மற்றும் சர்வீஸ் சார்ந்த அனைத்துத் தேவைகளுமே பூர்த்தி செய்வதாக அமையும் என்கிறார் மோட்டாரோலா சேர்மன் டேவிட் டார்மன்.

வீடியோ படங்கள் தருவது, ஸ்மார்ட்போன்கள் தயாரிப்பது என மோட்டாரோலாவின் விரிவாக்கப் பணிகள் வேகமாக நடப்பதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்திய கட்டுமானத் தொழிலாளர்கள் துபாய் செல்வது குறைகிறது

இந்தியக் கட்டுமானத் தொழிலாளர்களின் வரத்து குறைந்து வருவதாக துபாயைச் சேர்ந்த பிரபல தோரியா சர்வதேச வேலை வாய்ப்பு மையம் தெரிவித்துள்ளது.

கடந்த சில மாதங்களாக இந்தியாவிலிருந்து வரும் கட்டுமானத் தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாக அந்த நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் கூறுகிறார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், தோரியா சர்வதேச வேலைவாய்ப்பு மையம் இந்தியா மற்றும் பாகிஸ்தானைச் சேர்ந்த கட்டுமானத் தொழிலாளர்களைத் தேர்வு செய்து பல்வேறு நிறுவனங்களில் அமர்த்தும் பணியைச் செய்து வருகிறது.

கடந்த ஆண்டு மாதத்திற்கு 200 முதல் 4000 இந்தியத் தொழிலாளர்கள் வரை வேலைக்கு வந்தார்கள். ஆனால் கடந்த நான்கு மாதங்களாக இது அடியோடு குறைந்து விட்டது. இந்த காலகட்டத்தில் இதுவரை வெறும் நான்கு கட்டுமானத் தொழிலாளர்கள்தான் இந்தியாவிலிருந்து வேலைக்கு அழைத்து வந்துள்ளோம்.

முதலில் மாதத்திற்கு 100 பேராக குறைந்து இப்போது மிகவும் மோசமான முறையில் குறைந்து விட்டது என்றார்.

தோரியா மையம், கடந்த 30 ஆண்டுகளாக இந்திய கட்டுமானத் தொழிலாளர்களை துபாயில் வேலைக்கு அமர்த்தும் பணியைச் செய்து வருகிறது. துபாய் [^] பெஸ்டிவல் சிட்டி, ஸ்கை துபாய், துபாய் சர்வதேச விமான நிலையம் உள்ளிட்டவற்றில் இந்த நிறுவனம் வேலைக்குத் தேவையான ஆட்களை கொடுக்கும் பணியைச் செய்து வருகிறது.

இந்தியா மற்றும் பாகிஸ்தானிலிருந்து மட்டும்தான் இந்த நிறுவனம் வேலைக்கு ஆட்களை எடுப்பது குறிப்பிடத்தக்கது. வேலைக்குத் தேர்ந்தெடுக்கப்படும் தொழிலாளர்களிடமிருந்து மூன்று மாத சம்பளத்தை சேவைக் கட்டணமாக இது வசூலிக்கிறது. 3 ஆண்டு ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்களை இந்த நிறுவனம் அமர்த்துகிறது.

இந்த நிறுவனம் மூலம் வரும் தொழிலாளர்கள் பெரும்பாலும் 3 ஆண்டு காலத்தை முழுமையாக கழித்த பின்னர்தான் நாடு திரும்புவார்களாம். ஆனால் தற்போது துபாய் கட்டுமான சந்தையில் பெரும் நிதித் தேக்கம் காணப்படுவதால் பலர் முன்கூட்டியே ஒப்பந்தத்தை முடித்துக் கொண்டு திரும்பிச் செல்கிறார்களாம்.

கடந்த ஆண்டு ஒரு புகழ் பெற்ற துபாய் கட்டுமான நிறுவனத்திற்காக 300 பேரை இந்த நிறுவனம் அமர்த்தியது. அவர்களில் 200 பேர் ஏற்கனவே நாடு திரும்பி விட்டனராம்.

இருப்பினும் சவூதியில் இன்னும் இந்தியத் தொழிலாளர்களுக்கு நல்ல மவுசு இருப்பதாகவும், அங்கு எந்தவிதக் குறைவும் இன்றி இந்தியத் தொழிலாளர்கள் சென்று கொண்டிருப்பதாகவும் கூறுகிறார் தோரியா செய்தித் தொடர்பாளர்.

அடுத்த ஆறு வாரங்களில் தொடங்கவுள்ள ஒரு புதிய கட்டுமானப் பணிக்காக 15000 இந்தியத் தொழிலாளர்களை இந்த நிறுவனம் தேர்வு செய்து கொடுக்கவுள்ளதாம்.

இந்தி சேனல் தொடங்குகிறது ராஜ் டிவி!

ராஜ் டிவி சார்பில் 'ராஜ் பரிவார்' என்ற புதிய இந்திசேனல் விரைவில் துவக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள ராஜ் டெலிவஷன் நெட்வொர்க் லிட் நிறுவனத்தின் கீழ் தற்போது ஆறு சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.

ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ், ராஜ் நியூஸ், ராஜ் மியூசிக்ஸ், விஸ்ஸா தெலுங்கு, ராஜ் மியூசிக்ஸ் கன்னடா ஆகிய சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த வரிசையில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் புதிதாக மியூசிக் சேனல்களை துவக்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்தி மொழியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் ராஜ் பரிவார் சேனலை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வந்தன.

தற்போது இப்பணிகள் முடிவடைந்து அடுத்த சில மாதங்களில் முழு ஒளிபரப்பு துவங்கிவிடும் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்தி திரைப்படப் பாடல்களை மட்டும் ஒளிபரப்பும் 'டிரை ரன்' துவங்கியுள்ளது. நிகழ்ச்சிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு முழு நேர நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கிவிடும் என்று ராஜ் டிவியின் நிகழ்ச்சிகள் பிரிவு துணைத் தலைவர் அமித் போஸ் தெரிவித்தார்.

எனது நிர்வாண ஸ்கேனில் ஆட்டோகிராப் போட்டேன்..!- ஷாரூக் கிளப்பிய புயல்

லண்டன் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் என்னை ஸ்கேன் செய்தனர். அந்த நிர்வாண போட்டோக்களை என்னிடம் இரு பெண் ஊழியர்கள் காட்டினர். நான் அந்த ஸ்கேன் படத்தின் மீதே அவர்களுக்கு ஆட்டோகிராப் போட்டுக் கொடுத்தேன் என்று பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாரீக்கான் கூறியுள்ளார்.

இதைத் தொடர்ந்து பிரிட்டனில் இந்த விவகாரம் பரபர்பபை ஏற்படுத்தியுள்ளது.

பாதிகாப்பு காரணங்களுக்காகவும், தீவிரவாத அச்சுறுத்தலைத் தடுக்கவும் பிரிட்டனின் ஹீத்ரூ மற்றும் மான்செஸ்டர் விமான நிலையங்களில் வெளிநாட்டவர்களை முழு உடல் ஸ்கேன் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சமீபத்தில் பிரிட்டன் சென்றிருந்த ஷாரூக்கானையும் இந்த இரு விமான நிலையங்களிலும் ஸ்கேன் செய்துள்ளனர். ஸ்கேன் செய்யும் போது முழு உடலும் நிர்வாணமாகவே திரையில் தோன்றும். இதனை எடுத்துப் பார்த்து பின்னர் அழித்துவிடுவதாக பிரிட்டன் அறிவித்திருந்தது.

ஷாரூக்கானும் இந்த சோதனைக்குட்படுத்தப்பட்டார். பின்னர் அவரது உடலின் ஸ்கேன் படங்களை இரு பெண் அதிகாரிகள் கொண்டு வந்துள்ளனர். இதுகுறித்து ஷாரூக் கூறுகையில், "தன் உடலை நிர்வாணமாக ஸ்கேன் செய்த படத்தை, அதுவும் இரு பெண்களுக்கு முன்னால் பார்ப்பது யாருக்கும் தர்மசங்கடம்தான். எனக்கும் அப்படி இருந்தது. இருந்தாலும் அதைக் காட்ட முடியாதே. காரணம் எனது பெயர். இந்தப் பெயருக்காகவே அனைத்து விமான நிலையங்களிலும் நான் தடுக்கப்படுகிறேன். இது பழகிப்போக ஆரம்பித்துவிட்டது. மத ரீதியான அவமானப்படுத்தல்களுக்கு முன் ஒரு தனி மனிதனின் சுதந்திரம், உரிமை என்பதெல்லாம் பெரிய விஷயமா என்ன...

இந்த ஸ்கேன் படங்களைக் காட்டிய பெண் அதிகாரிகளுக்கு பதிலாக, அந்த ஸ்கேன் படத்திலேயே எனது கையெழுத்தை ஆட்டோகிராபாக போட்டுவிட்டு வந்தேன்" என்றார் ஷாரூக், கோபமும் நக்கலும் கலந்த தொனியில்.

மனைவியிடம் மன்னிப்பு கேட்டதாம் ஜாக்சன் 'ஆவி

வரவர இந்த ஆவிகள் தொல்லை தாங்க முடியலப்பா...

'ஆவி' அமுதா-கனகா சண்டை பேய் பட ரேஞ்சுக்குப் போய்க் கொண்டிருக்கும் நிலையில், இன்னொரு ஆவி விவகாரம்.

மறைந்த மைக்கேல் ஜாக்சனின் ஆவி, அவரது முன்னாள் மனைவி லிசா மேரி பிரஸ்லியிடம் மன்னிப்பு கேட்டதாக ஜாக்சனின் தோழி பரபரப்புத் தகவலை வெளியிட்டுள்ளார்.

மேலும் ஜாக்சனின் ஆத்மா இன்னும் சாந்தி அடையாமல் தவித்துக் கொண்டிருப்பதாகவும் கூறியுள்ளார் அவர். ஒரு மீடியம் மூலமாக ஜாக்சனின் ஆவியுடன் இவர்கள் பேசினார்களாம்.

ஜாக்சனின் தோழி கரேன் பேஹஸ். இவர் ஜாக்சனின் மேக்கப் கலைஞராகவும் இருந்தவர். ஜாக்சன் ஆவிக் கதை குறித்து பேஹஸ் கூறுகையில், நானும், லிசாவும் ஒரு மீடியம் மூலமாக கடந்த வாரம் ஜாக்சனின் ஆவியைத் தொடர்பு கொண்டோம். அப்போது நான் உனக்கு செய்த தவறுகளுக்காக என்னை மன்னித்து விடு என்று கேட்டுக் கொண்டார் ஜாக்சன்.

மேலும் தனது வாழ்க்கையில் தான் சந்தித்த மனிதர்களிடம் மன்னிப்பு கேட்க விரும்புவதாகவும் ஜாக்சன் தெரிவித்தார். தனது தவறுகளை விவரித்த அவர், அவற்றுக்கெல்லாம் மன்னிப்பு வேண்டும் என்று கேட்டார். அவரது ஆத்மா இன்னும் சாந்தி அடையவில்லை என்று தெரிகிறது.

நாங்கள் தொடர்பு கொண்ட மீடியத்திற்கு, நாங்கள் யார் என்பது குறித்துத் தெரியாது. மேலும் அந்த மீடியம், ஜாக்சன் வாழ்க்கையில் யாருக்குமே தெரியாத பல உள் விஷயங்களையும் சொன்னன் மூலம் ஜாக்சன்தான் பேசியதாக நாங்கள் நம்புகிறோம் என்றார் அவர்.

சரி, ஜாக்சனை அவரது டாக்டர் கான்ராட் முர்ரேதான் கொன்றார் என்று கூறப்படுவது குறித்து 'ஜாக்சனிடம்' கேட்டீர்களா என்ற கேள்விக்கு பேஹஸ் பதிலளிக்கையில், அதுபற்றியெல்லாம் ஜாக்சன் ஆவி எதுவும் சொல்லவில்லை. அதை முற்றிலும் தவிர்த்து விட்டது என்றார் பேஹஸ்.

1994ம் ஆண்டு மேரியை மணந்தார் ஜாக்சன். பின்னர் 18 மாத மண வாழ்க்கைக்குப் பின்னர் இருவரும் பிரிந்து விட்டனர். மறைந்த பாப் மாமேதை எல்விஸ் பிரஸ்லியின் மகள்தான் லிசா மேரி என்பது குறிப்பிடத்தக்கது.

ஸ்ருதிஹாஸன்-நடிகர் சித்தார்த் காதல்?

நடிகர் சித்தார்த்தும் கமல்ஹாஸனின் மூத்த மகள் ஸ்ருதி ஹாஸனும் காதலிப்பதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்ளக்கூடும் என்றும் பரபரப்பாக துவங்கியுள்ளன.

நடிகர் கமலின் மூத்த மகள் ஸ்ருதிஹாசன். இவர் லக் படம் மூலம் நடிகையாக பாலிவுட்டில் அறிமுகமானார். தமிழில் கமல்ஹாசனின் உன்னைப்போல் ஒருவன் படத்தில் இசையமைப்பாளராகவும், பாடகராகவும் அவதாரம் எடுத்தார். இப்போது தெலுங்கிலும், தமிழிலும் நாயகியாக நடிக்கிறார்.

தெலுங்கில் அவர் நடிக்கும் படத்தில் 'பாய்ஸ்' சித்தார்த் தான் கதாநாயகன். அந்த படத்தில் ஸ்ருதியின் கேரக்டருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுள்ளதாம். நாயகியாக வெற்றிக் கொடி நாட்டியாக வேண்டிய கட்டாயமிருப்பதால் ஸ்ருதியின் பாத்திரம் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளதாம்.

இதற்கிடையில், படத்தின் நாயகன் சித்தார்த்தையே, தனது நிஜ நாயகனாகவும் ஆக்கிக் கொள்ள முடிவு செய்துவிட்டாராம் ஸ்ருதி.

சித்தார்த்தும், ஸ்ருதிஹாசனும் காதலிப்பதாகவும், விரைவில் திருமணம் செய்யப் போவதாகவும் கூறப்படுகிறது. தெலுங்கு மீடியாவில் இந்த செய்தி இப்போது பெரும் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.. ஏற்கெனவே திருமணமாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து கமல்ஹாஸனுக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசாரிக்கையில், இதுபற்றி விரைவில் ஸ்ருதியே பேசுவார் என்று மட்டும் கூறினர்.

ஆபாச வீடியோவில் காத்ரீனாவின் தங்கை

காத்ரீனா கைபின் தங்கை இசபெல் போன்ற ஒரு பெண் தோன்றும் ஒரு ஆபாச எம்எம்எஸ் பாலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அந்த ஆபாச எம்எம்எஸ்ஸில் உடலுறவு உள்ளிட்ட காட்சிகள் இடம் பெற்றுள்ளன. அதில் இடம் பெற்றுள்ள பெண் அப்படியே காத்ரீனாவின் தங்கை இசபெல்லைப்
போலவே உள்ளார்.

10 நிமிடம் இந்த வீடியோ ஓடுகிறது. யூடியூபில் இது லீக் ஆகியுள்ளது. அந்தப் பெண்ணுடன் இருக்கும் ஆண் யார் என்று தெரியவில்லை.

இந்த ஆபாச வீடியோ இங்கிலாந்திலும், இந்தியாவிலும் பரபரப்பாக உலா வந்து கொண்டுள்ளது.

இந்த வீடியோ குறித்து காத்ரீனாவும் சரி, இசபெல்லும் சரி எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை.

கல்லூரி பெண்களிடையே பரவும் புது 'டிரெண்ட்'கருமுட்டை தானம்

டெல்லியில் உள்ள கல்லூரி மாணவிகள் மற்றும் விடுதிகளில் தங்கி பணிபுரியும் பெண்கள் மத்தியில் கருமுட்டை தானம் செய்யும் போக்கு அதிகரித்துள்ளது.

தங்களின் ஆடம்பர செலவினங்களுக்கு ஏற்படும் பணப் பற்றாக்குறையை இதன் மூலம் அவர்கள் நிவர்த்தி செய்துகொள்ள முற்படுகின்றனர்.

ஏராளமான மகப்பேறு களில் பெண்கள் தாமாக முன்வந்து கருமுட்டை வழங்குவதாகவும், ஒரு பெண்ணிடம் சுமார் 10 முதல் 12 வரை முட்டைகள் பெறப்படுவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர்.

இதன்மூலம் பெண்களுக்கு ரூ.20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கிடைப்பதாக தெரிகிறது. தற்போதை இளம் தலைமுறை பெண்களிடம் இந்த போக்கு பரவலாக காணப்படுவதாக ஃபீனிக்ஸ் மருத்துவமனையின் மகப்பேறு சிறப்பு மருத்துவர் ஷிவானி சச்தேவா கூறுகிறார்.

'கடந்த வாரம் கூட நான்கு பெண்கள் மருத்துவமனைக்கு வந்து கருமுட்டை வழங்க விரும்புவதாக கூறினார்கள். எதற்கு என கேட்டபோது, செலவுக்கு பணம் போதவில்லை என்று கூறினர்.
பெரும்பாலும் 22 முதல் 24 வயது பெண்கள் எங்களிடம் அதிகளவில் வருகின்றனர். 18 வயது பெண்கள் கூட வீட்டை ஏமாற்றிவிட்டு வருவதுண்டு.

ஒருமாதத்து ஒன்று என்ற விகிதத்தில் பெண்களின் உடலில் கருமுட்டை உருவாகிறது. அவர்களிடம் வீணாவதை விட, குழந்தை பேறு இல்லாதவர்களுக்கு அந்த கருமுட்டை பயன்படும் என்பதால் நாங்களும் அவர்களை நிராகரிக்க முடிவதில்லை.

அதேசமயம் ஃபீனிக்ஸ் மருத்துவமனைக்கு கருமுட்டை கேட்டு மாதத்துக்கு சராசரியாக 15 கோரிக்கைகள் வரும். பெரும்பாலும் வெளிநாட்டில் இருந்தே கேட்கப்படும்.

தேவைக்கு அதிகமாக முட்டைகளை நாங்கள் பெண்களிடம் இருந்து பெறமுடியாது. எனவே பெரும்பாலான பெண்களை நாங்கள் திருப்பி அனுப்பிவிடுவோம்' என்றனர்.

அதோடு பல வெளிநாட்டினர், தங்களுக்கு அதிக புத்திக்கூர்மையுடன் கூடிய பளிச்சென்ற குழந்தை தேவை எனக் கேட்பதால், டெல்லியில் உள்ள கல்லூரி பெண்களின் கருமுட்டைகளுக்கு தனி கிராக்கி இருப்பதாக கூறப்படுகிறது

நெருங்குகிறது காதலர் தினம் சூடு பிடிக்கும் 'காண்டம்' விற்பனை!

காதலர் தின விழாவை முன்னிட்டு, சாக்லேட், ரோஜாப் பூக்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் விற்பனை அதிகரிப்பதன் கூடவே, ஆணுறை மற்றும் கருத்தடை மாத்திரைகளின் விற்பனையும் படுஜோராக நடக்கிறதாம்.

காதலர் தினத்தை குறிப்பிட்ட ஒரு நாள் மட்டும் கொண்டாடுவதற்கு பதிலாக காதல் வாரமாகவே இளைஞர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த சூழலை பயன்படுத்தி, ஆணுறை விற்பனையாளர்களும், தங்களின் விற்பனையை உயர்த்த தேவையான அனைத்து வழிகளையும் கையாள்கின்றனர்.

ஆண்டுதோறும் காதலர் தின சமயத்தில் சராசரியாக 20 சதவீதம் ஆணுறை மற்றும் பெண்கள் உபயோகப்படுத்தும் கருத்தடை மாத்திரைகள் கூடுதல் விற்பனை இருப்பதாக 24 மணி நேர ஆணுறை விற்பனை மையமான எஸ்2காண்டம் நிறுவனத்தின் இயக்குனர் சிஷிர் மிக்லானி தெரிவித்தார்.

காதலர் தினத்தையொட்டி சில சலுகைகளையும் மிக்லானியின் நிறுவனம் அறிவித்துள்ளதாம். குறிப்பிட்ட எண்ணிக்கையிலான ஆணுறைகளை வாங்கினால் இலவசமாம். மேலும் வேல்யூ ஆடட் பேக்கேஜ்களையும் இந்த நிறுவனம் அறிவித்துள்ளது. உதாரணத்திற்கு ஒரு ஆணுறை வாங்கினால் ஒன்று இலவசம் என்பது போல.

சுப்லால் என்ற மருந்துக் கடை உரிமையாளர் கூறுகையில், சிலர் கூச்சப்பட்டுக்கொண்டு போன் மூலமாக ஆர்டர் கொடுப்பார்கள். சில இளைஞர்கள் கடைக்கு வந்து தயக்கத்துடன் கேட்பார்கள். எப்படியானாலும் ஆணுறை விற்பனை இந்த சமயத்தில் கூடுதலாகவே இருக்கும் என்றார்.

சமீபத்திய சர்வேக்கள் இந்திய ஆண்களும் பெண்களும் பாதுகாப்பான உடலுறவு விஷயத்தில் மிகுந்த விழிப்புணர்வு அடைந்துவிட்டதாக கூறுகின்றன.

ஆண்களைப் போலவே பெண்களும் கருத்தடை மாத்திரைகளை கூச்சமின்றி பயன்படுத்தத் தொடங்கி விட்டனர். அதோடு, ஆன் லைன் வர்த்தகம் பெருகி விட்ட சூழலில் பெண்கள் கருத்தடை மாத்திரைகள் பெறுவது சுலபமானதாகவும், நடைமுறை சிக்கலின்றி இருப்பதாகவும் கருதுகின்றனர்.

நார்வே திரைப்பட விழா-நந்தலாலாவுக்கு விருது

நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்ற மிஷ்கின் இயக்கிய நந்தலாலா படத்துக்கு மக்கள் தெரிவு விருது கிடைத்துள்ளது.

நந்தலாலா படத்தை அய்ங்கரன் நிறுவனம் தயாரித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில், வசீகரன் சிவலிங்கத்தின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வேயில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நந்தலாலா பங்கேற்றது.

இந்தப் படத்துடன் மேலும் 12 தமிழ்ப் படங்களும் பங்கேற்றன. படத்தை இயக்கிய மிஷ்கின் மற்றும் முன்னணி தமிழ்ப்பட இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரும் விழாவுக்கு சென்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து தமிழ்ப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.

விழாவின் இறுதியில் நான்கு படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மிஷ்கினின் நந்தலாலாவுக்கு மக்கள் தெரிவு விருது (People Choice Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விழாவில் பங்கேற்ற ஜனநாதனின் பேராண்மை, சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் மற்றும் சமுத்திரக் கனி இயக்கிய நாடோடிகள் ஆகிய பங்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

இந்தியாவி்ல் கார் விற்பனை 32% அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரியில் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2010 ஜனவரியில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் கடந்தாண்டு விற்பனை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 300 ஆக இருந்தது.

இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்தாண்டைக் காட்டிலும் 43.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் விற்பனை 131 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரியில் 53 ஆயிரத்து 447 யூனிட்டுகள் விற்றுள்ளன.

இந்த புத்தாண்டில் ஏராளமான சலுகை திட்டங்கள் புது வெளியீடுகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதும் விற்பனை உயர்வுக்கு காரணம் என கருதப்படுகிறது.

மேலும், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்கியதும் முக்கிய காரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

நிதி நெருக்கடியை சமாளிக்க ஜோதிடத்தை நம்பும் இத்தாலியர்கள்

சர்வதேச பொருளாதார மந்த நிலை காரணமாக, நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்காக ஜோதிடம் மற்றும் மூட நம்பிக்கைகளில் இத்தாலியர்கள் பெருமளவு ஆர்வம் காட்டுவதாக சமீபத்திய ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

ஐரோப்பிய நுகர்வோர் சங்கத்தின் ஆய்வு அறிக்கை ஒன்றில் உள்ள தகவலின் படி, இத்தாலியர்கள் ஆண்டுக்கு பல மில்லியன் யூரோக்களை ஜோதிடர்களிடமும், எதிர்கால கணிப்பு சொல்பவர்களிடமும் செலவழிப்பதாக தெரிய வந்துள்ளது.

குறிப்பாக நிதி நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பரிகாரம் தேடி இத்தாலியர்கள் வங்கி மற்றும் ஆலோசகர்களிடம் செல்வதற்கு பதிலாக ஜோதிடர்களிடம் சென்றதே அதிகம் என இந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இத்தாலியின் தெற்கு பகுதியில் இந்த போக்கு அதிகளவு காணப்படுவதாக தெரிகிறது.

நுகர்வோர் சங்க அறிக்கையின் படி, 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இத்தாலியர்கள் தினசரி 20 முதல் 600 யூரோக்களை டாரட் கார்டு வாசிப்பாளர்கள், ஜோதிடக்காரர்கள், கணி சொல்பவர்கள் போன்றவர்களிடம் செலவழிக்கின்றனர்.

இந்த செலவைச் சுருக்கினாலே பெரும் நிதியை சேமிக்க முடியுமே இத்தாலியர்களே...!

டிவி ரியாலிட்டி ஷோவில் எலியைக் கொன்று சாப்பிட்டதால் சர்ச்சை......

லண்டன் இங்கிலாந்தின் ஐடிவி குழும டிவியில், நடந்த ரியாலிட்டி ஷோவின்போது எலியைப் பிடித்து கொன்று அதை சமைப்பது போன்ற காட்சி வந்ததற்காக அந்த டிவிக்கு 1400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

I'm A Celebrity ...Get Me Out of Here! என்ற பெயரில் ஐடிவியில் ஒரு ரியாலிட்டி ஷோ நடத்தப்பட்டது. அதில் கலந்து கொண்ட இத்தாலி நாட்டு சமையல் கலைஞரான கினோ டிஅக்காம்போ என்பவர் காட்டில் நடந்த நிகழ்ச்சியின்போது ஒரு காட்டு எலியைப் பிடித்து அதைக் கொன்று சமையல் செய்தார்.

பின்னர் அந்த எலிக் கறியை அவரும், நடிகர் ஸ்டூவர்ட் மேனிங் என்பவரும் சாப்பிட்டனர்.

இது சர்ச்சையைக் கிளப்பி விட்டு விட்டது. இதையடுத்து விலங்குகள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடவடிக்கை எடுக்கக் கோரி குரல் எழுப்பினர். இதையடுத்து தற்போது அந்த டிவிக்கு 1400 டாலர் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்வதாக ஐடிவியின் செய்தித் தொடர்பாளர் கூறியுள்ளார். மேலும் இவ்வாறு நடந்தது தவறான செயல் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

ஹக்கீமுல்லா மசூத் மரணம்

பாகிஸ்தான்தலிபான் அமைப்பின் தலைவர் ஹக்கீமுல்லா மசூத் இறந்து விட்டதாக அந்த அமைப்பு உறுதிப்படுத்தியுள்ளது.


ஜனவரி 14ம் தேதி வசிரிஸ்தானின் சாக்தோய் பகுதியில், அமெரிக்கப் படையினர் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஹக்கீமுல்லா படுகாயமடைந்தார். அவர் உயிரிழந்து விட்டதாக பின்னர் அமெரிக்கப் படையினருக்குத் தகவல் கிடைத்தது. இத்தகவல் பாகிஸ்தான் ராணுவத்திற்கும் கிடைத்தது.

இருப்பினும் இதை இரு தரப்பும் உறுதிப்படுத்த முடியாமல் இருந்தன. இந்த நிலையில் ஹக்கீமுல்லா சிகிச்சை பலனளிக்காமல் இறந்து விட்டதாக பாகிஸ்தான் தலிபான் அமைப்பே அறிவித்துள்ளது.

இதன் மூலம் ஹக்கீமுல்லா நிலை குறித்து நிலவி வந்த குழப்பம் முடிவுக்கு வந்துள்ளது. ஹக்கீமுல்லாவின் மரணம், அமெரிக்க, பாகிஸ்தான் ராணுவத்தினருக்கு பெரும் உற்சாகம் அளிக்கக் கூடிய செய்தியாகும்.

அராக்சாய் பழங்குடியினப் பகுதியில் உள்ள தலிபான் அமைப்பினர் ஹக்கீமுல்லாவின் மரணச் செய்தியை உறுதிப்படுத்தி பேட்டி அளித்துள்ளனர்.

அதில், 28 வயதான ஹக்கீமுல்லா மசூத், ஏவுகணைத் தாக்குதலில் படுகாயமடைந்தார். காயத்திலிருந்து மீள முடியாமல் அவர் மரணமடைந்து விட்டார் என்று தெரிவித்துள்ளனர்.

இருப்பினும் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் முல்தான் நகருக்கு சிகிச்சைக்காக ஹக்கீமுல்லா கொண்டு வரப்பட்டதாகவும், அங்கிருந்து அவரை கராச்சி கொண்டு செல்ல முயற்சிகள் நடந்ததாகவும் கூறப்படுகிறது. அந்த சமயத்தில்தான் அவர் உயிரிழந்துள்ளார் என்றும் கூறப்படுகிறது.

உயிரிழந்ததைத் தொடர்ந்து ஹக்கீமுல்லாவின் உடலை மீண்டும் தலிபான்கள் ஆதிக்கம் நிறைந்துள்ள பழங்குடியினப் பகுதிக்கே கொண்டு சென்று விட்டனராம்.

அதேசமயம் இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது. ஹக்கீமுல்லா 2 வாரங்களுக்கு முன்பு இறந்து விட்டதாகவும், அவரது உடலை அராக்சாய் கிராமப் பகுதியில் மாமனாரின் உடல் புதைக்கப்பட்ட இடத்திற்கு அருகே புதைத்து விட்டதாகவும் அத்தகவல் கூறுகிறது.

தலிபான் தலைவர்கள் ஹக்கீமுல்லாவின் மரணத்தை ஒப்புக் கொண்டுள்ள நிலையில் தலிபான் அமைப்பின் செய்தித் தொடர்பாளரான அஸம் தாரிக் இதுகுறித்து இதுவரை கருத்து தெரிவிக்கவில்லை.

இவர் ஹக்கீமுல்லா உயிருடன் இருப்பதாக தொடர்ந்து கூறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

t

அவதார்' நடிகருடன் மல்லிகா ஷெராவத்!

அவதார் பட நடிகர் லாஸ் அலோன்சாவுடன் ஒரு அரசியல் காமெடிப் படத்தில் ஜோடி சேர்ந்துள்ளார் நம்ம ஊர் மல்லிகா ஷெராவத்.

லவ், பாரக் என்ற பெயரில் ஹாலிவுட்டில் உருவாகும் படம் இது. இதில் லாஸ் அலோன்சாவுடன் இணைந்து நடிக்கிறாராம் மல்லிகா ஷெராவத்.

அமெரிக்க இயக்குநர் டோக் மெக்கென்றி இப்படத்தை இயக்குகிறார்.

அரீதா குப்தா என்ற கேரக்டரில் நடிக்கிறாராம் மல்லிகா. அமெரிக்க அதிபர் தேர்தலை மையமாகக் கொண்ட கதை இது.

அதிபர் ஒபாமாவின் ஆதரவாளர்கள் குழுவின் ஒருங்கிணைப்பாளராக இதில் வருகிறார் மல்லிகா.

கதை என்னவென்றால், ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்தவர் அரீதா குப்தா. ஒபாமாவுக்காக தீவிரப் பிரசாரம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது எதிர்பாராதவிதமாக குடியரசுக் கட்சியின் ஜான் மெக்கெய்னுக்காக பிரசாரம் செய்து கொண்டிருக்கும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த அலோன்சாவுடன் காதல் மலர்ந்து விடுகிறது.

இந்தக் காதலை, அரசியல் பின்னணியில் அட்டகாசமாக சொல்கிறார்களாம் இப்படத்தில்.

இதுகுறித்து மல்லிகா கூறுகையில், மிகவும் அருமையான, திறமையான, ஆச்சரியகரமான நடிகர் லாஸ். அவருடன் பணியாற்றுவதை அதிர்ஷ்டமாக கருதுகிறேன் என்றார்.

ஏற்கனவே ஜாக்கி சானுடன் மித் என்ற படத்தில் நடித்திருந்தார் மல்லிகா. ரொம்ப குட்டியூண்டு கேரக்டர் அது. அதேபோல ஹிஸ் என்ற ஒரு ஹாலிவுட் படத்திலும் அவர் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.