நார்வே திரைப்பட விழா-நந்தலாலாவுக்கு விருது

நார்வே திரைப்பட விழாவில் பங்கேற்ற மிஷ்கின் இயக்கிய நந்தலாலா படத்துக்கு மக்கள் தெரிவு விருது கிடைத்துள்ளது.

நந்தலாலா படத்தை அய்ங்கரன் நிறுவனம் தயாரித்திருந்தது. பல்வேறு காரணங்களால் இந்தப் படம் இன்னும் வெளியாகாமல் உள்ளது.

இந்த நிலையில், வசீகரன் சிவலிங்கத்தின் விஎன் மியூசிக் ட்ரீம்ஸ் சார்பில் நார்வேயில் நடந்த சர்வதேச தமிழ் திரைப்பட விழாவில் நந்தலாலா பங்கேற்றது.

இந்தப் படத்துடன் மேலும் 12 தமிழ்ப் படங்களும் பங்கேற்றன. படத்தை இயக்கிய மிஷ்கின் மற்றும் முன்னணி தமிழ்ப்பட இயக்குநர்கள் எஸ்பி ஜனநாதன், சசிகுமார், சமுத்திரக்கனி ஆகியோரும் விழாவுக்கு சென்றிருந்தனர்.

கடந்த பிப்ரவரி 6ம் தேதி முதல் 9ம் தேதி வரை நடந்த இந்த விழாவுக்கு ஏராளமான ரசிகர்கள் ஆர்வத்துடன் வந்து தமிழ்ப்படங்களைப் பார்த்து ரசித்தனர்.

விழாவின் இறுதியில் நான்கு படங்களுக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டன. இதில் மிஷ்கினின் நந்தலாலாவுக்கு மக்கள் தெரிவு விருது (People Choice Award) அறிவிக்கப்பட்டுள்ளது. இதுதவிர, விழாவில் பங்கேற்ற ஜனநாதனின் பேராண்மை, சசிகுமாரின் சுப்பிரமணியபுரம் மற்றும் சமுத்திரக் கனி இயக்கிய நாடோடிகள் ஆகிய பங்களுக்கும் வெவ்வேறு பிரிவுகளில் விருது கிடைத்துள்ளது.

0 comments: