இந்தியாவி்ல் கார் விற்பனை 32% அதிகரிப்பு

இந்தியாவில் கடந்த ஆண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில், இந்தாண்டு ஜனவரியில் 32 சதவீதம் அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

இந்திய ஆட்டோமொபைல் தொழிற்சாலைகள் சங்கத்தின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் இதுபற்றி கூறப்பட்டுள்ளதாவது:

கடந்தாண்டு ஜனவரி மாதத்தை ஒப்பிடுகையில் 2010 ஜனவரியில் கார் விற்பனை அதிகரித்துள்ளது. உள்நாட்டு சந்தையில் கடந்தாண்டு விற்பனை ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 300 ஆக இருந்தது.

இந்தாண்டு ஜனவரி மாதம் இந்த எண்ணிக்கை ஒரு லட்சத்து 45 ஆயிரத்து 905 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் மோட்டார் சைக்கிள் விற்பனை கடந்தாண்டைக் காட்டிலும் 43.6 சதவீதம் அதிகரித்துள்ளது.

பஸ், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்களின் விற்பனை 131 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்தாண்டு ஜனவரியில் 53 ஆயிரத்து 447 யூனிட்டுகள் விற்றுள்ளன.

இந்த புத்தாண்டில் ஏராளமான சலுகை திட்டங்கள் புது வெளியீடுகள் ஆகியவை அறிமுகப்படுத்தப்பட்டதும் விற்பனை உயர்வுக்கு காரணம் என கருதப்படுகிறது.

மேலும், நிதி நிறுவனங்கள் போட்டி போட்டுக்கொண்டு கடன் வழங்கியதும் முக்கிய காரணமாக அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்படுகிறது.

0 comments: