லண்டனில் இந்தியப் பெண் குத்திக் கொலை: மாஜி காதலன் வெறிச் செயல்

இங்கிலாந்தில் இந்திய பெண் ணை அவரது மாஜி காதலன் கத்தியால் தாறுமாறாக குத்திக் கொலை செய்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கேமிலி மதுராசிங் (27), ஒரு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். லண்டனில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் பணியாற்றியபோது பால் பிரிஸ்டல் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது.ஆனால், 2009ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் இருந்து விலகிய மதுரா, லண்டனில் லிவர்பூல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தார்.ட்ரினிடாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிரிஸ்டல் உடனான தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் மதுரா.இதற்கிடையே, லண்டனில் வேறு ஒரு பாய் ஃபிரண்டுடன் மதுரா பழக ஆரம்பித்தார். புது காதலனுடன் மதுரா பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாஜி காதலன் பிரிஸ்டால் மதுராவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.ஆனால் மதுரா, பிரிஸ்டாலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால் லண்டனில் உள்ள மதுரா வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதம் செய்தார்.ஆனால், பிரிஸ்டாலை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு விருப்பமில்லை என மதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மேல் தொந்தரவு செய்தால் புகார் செய்துவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால், மதுராவை அவரின் சமையலறைக்கே இழுத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தாறுமாறாக குத்தியுள்ளார்.கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என கண்ட இடங்களிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை வெறித்தனமாக மதுராவை குத்தியுள்ளார் பிரிஸ்டல். இதில் மதுரா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.விரக்தியில் தன் உடலையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திக் கொண்டார் பிரிஸ்டால். பின்னர் மதுராவை அவரின் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு காரை வீதிகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். கார் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றதையடுத்து போலீசார் பிரிஸ்டாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.மதுராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது இத்தத கவல்களை போலீஸார் நீதிமன்றத்தில் வெளியிட்டனர்.

0 comments: