இந்தி சேனல் தொடங்குகிறது ராஜ் டிவி!

ராஜ் டிவி சார்பில் 'ராஜ் பரிவார்' என்ற புதிய இந்திசேனல் விரைவில் துவக்கப்பட உள்ளது.

சென்னையில் உள்ள ராஜ் டெலிவஷன் நெட்வொர்க் லிட் நிறுவனத்தின் கீழ் தற்போது ஆறு சேனல்கள் ஒளிபரப்பாகின்றன.

ராஜ் டிவி, ராஜ் டிஜிட்டல் பிளஸ், ராஜ் நியூஸ், ராஜ் மியூசிக்ஸ், விஸ்ஸா தெலுங்கு, ராஜ் மியூசிக்ஸ் கன்னடா ஆகிய சேனல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.

இந்த வரிசையில் மலையாளம் மற்றும் தெலுங்கு மொழிகளில் புதிதாக மியூசிக் சேனல்களை துவக்க உள்ளதாக முன்னர் அறிவிக்கப்பட்டது.

இதற்கிடையே, இந்தி மொழியில் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை வழங்கும் ராஜ் பரிவார் சேனலை உருவாக்கும் முயற்சிகள் நடந்து வந்தன.

தற்போது இப்பணிகள் முடிவடைந்து அடுத்த சில மாதங்களில் முழு ஒளிபரப்பு துவங்கிவிடும் என நிர்வாகிகள் கூறுகின்றனர்.

தற்போது இந்தி திரைப்படப் பாடல்களை மட்டும் ஒளிபரப்பும் 'டிரை ரன்' துவங்கியுள்ளது. நிகழ்ச்சிகள் விரைவில் இறுதி செய்யப்பட்டு முழு நேர நிகழ்ச்சி ஒளிபரப்பு துவங்கிவிடும் என்று ராஜ் டிவியின் நிகழ்ச்சிகள் பிரிவு துணைத் தலைவர் அமித் போஸ் தெரிவித்தார்.

0 comments: