Showing posts with label கொலை. Show all posts
Showing posts with label கொலை. Show all posts

ஜமாத் தலைவர் உள்பட 2 பேர் சுட்டு கொலை

திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகேயுள்ள திருவிடைச்சேரியில் ஜமீத் முகைதீன் பள்ளிவாசல் உள்ளது. இந்த பள்ளி வாசலில் இமாமாக இருந்தவர் முகமது இஸ்மாயில் (வயது55).
பள்ளிவாசலில் தொழுகை நடத்துவது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் மற்றும் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தினர் இடையே மோதல் இருந்து வந்தது.
இந்நிலையில் அதே பகுதியை சேர்ந்த குத்புதீனுக்கும், இதயதுல்லாவுக்கும், தொழுகை நடத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.
இது சம்பந்தமாக விசாரிக்க குத்புதீன் உறவினர் திருவிடைமருதூர் அருகேயுள்ள திருமங்கலகுடியை சேர்ந்த ஹாஜ்முகமது(40). தனது ஆதரவாளர்கள் சுமார் 15 பேருடன் நேற்று முன்தினம் இரவு காரில் திருவிடைச்சேரிக்கு வந்தார். அப்போது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயிலுக்கும் ஹாஜ் முகமதுவுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது.


இதில் ஆத்திரமடைந்த ஹாஜ் முகமது பள்ளிவாசல் இமாம் முகமது இஸ்மாயில், மற்றும் அருகே நின்ற அஜீத் முகமது ஆகிய 2 பேரையும் துப்பாக்கியால் சுட்டு கொன்றார். இதில் 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி தலைமையில் திருவிடைச்சேரி பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, ஹாஜ் முகமது மற்றும் அவரது ஆதரவாளர்களை தீவிரமாக தேடி வந்தனர்.

இதற்கிடையே திருமங்கலகுடியில், உள்ள ஹாஜ் முகமது வீட்டில் போலீசார் 2 துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் கொலையாளி ஹாஜ் முகமது, நேற்று, சிதம்பரம் கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை 15 நாள் காவலில் வைக்க, மாஜிஸ்திரேட் ஈசுவரமூர்ததி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து அவர் கடலூர் சிறையில் அடைக் கப்பட்டார்.


இந்த சம்பவம் தொடர்பாக 15 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதானவர்கள் பெயர் வருமாறு:-
1. முகமது குத்புதீன், 2. அப்துல் மாலிக், 3. சேத்தப்பா, 4. சலாவுதீன், 5. முகமது இலியாஸ், 6. பசீர் மைதீன், 7. அப்துல் ரகீம், 8. ஜமீல், 9. முஜிபுர் ரகுமான், 10.முகமது அன்சாரி. 11. ஹபீப் ரகுமான், 12. அன்வர்தீன், 13. பசீர் முகமது, 14. ரவி, 15.ஜியாவுதீன்.
துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக நேற்று திருவாரூர் மாவட்ட கலெக்டர் சந்திரசேகரன், பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்தினார். மேலும் ஏதேனும், அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க இன்றும் போலீசார் குவிக் கப்பட்டுள்ளனர்.
துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்களுக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் காமராஜ் ஆறுதல் கூறியபோது எடுத்த படம்.
திருவிடைச்சேரி பள்ளிவாசல் நிர்வாகிகளிடம் கலெக்டர் சந்திரசேகரன் விசாரித்த காட்சி. அருகில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு மூர்த்தி உள்ளார்.

மலேசியாவில் கொல்லப்பட்டார் சென்னை பைனான்சியர்

சென்னையில் சினிமா பைனான்சியர் முத்துராஜா மலேசியாவில் கொல்லப்பட்டார். ஜனவரியில் மலேசியா சென்ற முத்துராஜா காணாமல் போன வழக்கில் திருப்பம் ஏற்பட்டுள்ளது.

கணவர் திரும்பாததை அடுத்து மனைவி உஷாராணி மலேசிய போலீசில் புகார் அளித்தார். இந்நிலையில் முத்துராஜாவை மலேசியாவிற்கு அழைத்துச் சென்று நண்பர்கள் கொலை செய்தது அம்பலமாகியுள்ளது.

இதனையடுத்து முத்துராஜா கொலை வழக்கில் மலேசியாவில் வழக்கறிஞர்கள் 2 பேரை போலீசார் பிடித்துள்ளனர். பிடிபட்ட வக்கீல்கள் சுரேந்திரன், பத்மநாபன் இருவரும் சகோதரர்கள் ஆவர். எனவே இருவரிடமும் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் சகோதரர்கள் இருவரும் ஏற்கனவே மலேசியாவில் 4 பேரை கொலை செய்தது தெரியவந்துள்ளது.

லண்டனில் இந்தியப் பெண் குத்திக் கொலை: மாஜி காதலன் வெறிச் செயல்

இங்கிலாந்தில் இந்திய பெண் ணை அவரது மாஜி காதலன் கத்தியால் தாறுமாறாக குத்திக் கொலை செய்தார்.இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர் கேமிலி மதுராசிங் (27), ஒரு சார்ட்டர்ட் அக்கவுன்டன்ட். லண்டனில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். இதற்கு முன் கடந்த 2008ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் பணியாற்றியபோது பால் பிரிஸ்டல் (24) என்பவருடன் காதல் ஏற்பட்டது.ஆனால், 2009ம் ஆண்டில் பிரைஸ்வாட்டர்கூப்பர் நிறுவனத்தில் இருந்து விலகிய மதுரா, லண்டனில் லிவர்பூல் ஸ்ட்ரீட்டில் உள்ள நிறுவனத்தில் சேர்ந்தார்.ட்ரினிடாட்டில் இருந்து வெளியேறிய பின்னர் பிரிஸ்டல் உடனான தொடர்புகளை கொஞ்சம் கொஞ்சமாக குறைத்துக் கொண்டார் மதுரா.இதற்கிடையே, லண்டனில் வேறு ஒரு பாய் ஃபிரண்டுடன் மதுரா பழக ஆரம்பித்தார். புது காதலனுடன் மதுரா பல்வேறு சந்தர்ப்பங்களில் எடுத்துக் கொண்ட புகைப்படங்களை ஃபேஸ்புக் மூலம் பார்த்து அதிர்ச்சி அடைந்த மாஜி காதலன் பிரிஸ்டால் மதுராவிடம் இதுகுறித்து விளக்கம் கேட்டுள்ளார்.ஆனால் மதுரா, பிரிஸ்டாலை கண்டு கொள்ளவில்லை. இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால் லண்டனில் உள்ள மதுரா வீட்டிற்கு நேரில் வந்து வாக்குவாதம் செய்தார்.ஆனால், பிரிஸ்டாலை திருமணம் செய்துகொள்வதில் தனக்கு விருப்பமில்லை என மதுரை திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மேலும், இதற்கு மேல் தொந்தரவு செய்தால் புகார் செய்துவிடுவேன் என்றும் எச்சரித்துள்ளார்.இதனால் ஆத்திரமடைந்த பிரிஸ்டால், மதுராவை அவரின் சமையலறைக்கே இழுத்துச் சென்று அங்கிருந்த கத்தியை எடுத்து தாறுமாறாக குத்தியுள்ளார்.கழுத்து, மார்பு, பின்புறம், கால்கள் என கண்ட இடங்களிலும் சுமார் 20க்கும் மேற்பட்ட முறை வெறித்தனமாக மதுராவை குத்தியுள்ளார் பிரிஸ்டல். இதில் மதுரா அந்த இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பலியானார்.விரக்தியில் தன் உடலையும் கத்தியால் குத்திக் காயப்படுத்திக் கொண்டார் பிரிஸ்டால். பின்னர் மதுராவை அவரின் காரிலேயே தூக்கிப் போட்டுக் கொண்டு காரை வீதிகளில் கண்மூடித்தனமாக ஓட்டிச் சென்றார். கார் ஒரு கட்டிடத்தின் மீது மோதி நின்றதையடுத்து போலீசார் பிரிஸ்டாலை கைது செய்து மருத்துவமனையில் சேர்த்தனர்.மதுராவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற இச்சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை தற்போது நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நேற்று நடந்த விசாரணையின் போது இத்தத கவல்களை போலீஸார் நீதிமன்றத்தில் வெளியிட்டனர்.

குளத்தில் குளித்த பெண் வெட்டிக் கொலை

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கோயா. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கதீஜாபேகம். பாய் முடையும் தொழில் செய்து வருகிறார். இவர் கடையம் அருகே உள்ள அய்யன்பிள்ளைகுளத்தில் குளிப்பதற்காக நேற்று காலை சென்றார். அங்கு வேறு யாரும் இல்லை. படித்துறையில் துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கினார்.
அப்போது அங்குவந்த மர்ம ஆசாமிகள் குளத்தில் குதித்து கதீஜாபேகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் குளத்துக்குள்ளேயே கதீஜாபேகம் துடிதுடித்து இறந்தார்.அந்த கும்பல் அவரது கழுத்தில் கிடந்த மூன்றே முக்கால் பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிந்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

கடித்த குதிரை அடித்துக் கொலை

ஈரோடு மாவட்டம், கோபி பஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் வெறிபிடித்த நிலையில் திரிந்த பெண் குதிரை, திடீரென மக்களை விரட்டி கடித்தது. பலர் காயமடைந்தனர். மக்கள் அலறி ஓடினர்.

அங்கும் இங்கும் ஓடிய குதிரை அப்பகுதியில் இருந்த பூக்கடைகளை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்களும், அப்பகுதியில் இருந்தவர்களும் தடி, கற்களால் குதிரையை விரட்டினர்.

பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய குதிரை, சாலையில் நடந்து சென்றவர்களையும், பைக்கில் சென்றவர்களையும் விரட்டி கடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்தனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் நீண்ட கயிறுகளை எடுத்து வந்து குதிரையின் கழுத்து, கால்களில் கயிற்றை வீசி குதிரையை கீழே சாய்த்தனர். பின்னர், எல்லோரும் தடிகளால் சரமாரியாக குதிரையை அடித்தனர். இதில் குதிரை இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிகளில் விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது, வனத்துறைக்கு தகவல் கொடுப்பதே வழக்கம்.
புளூகிராஸ் அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டால் கூட, அவர்களே போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து வரவழைப்பார்கள். அப்படி செய்யாமல், மக்களே குதிரையை அடித்து கொன்றதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

இந்திய பெண் கொடூர கொலை-கணவர் கைது

கைகளைத் துண்டித்து தனது மனைவியைக் கொலை செய்த இந்தியரை லண்டன் போலீஸார் கைது செய்துள்ளனர்.கொல்லப்பட்ட 28 வயதான அந்த இளம் பெண்ணின் பெயர் கீதா அலாக். லண்டனில் உள்ள மிகப் பெரிய ஆசிய ரேடியோ நிறுவனமான சன்ரைஸ் ரேடியோவில் வரவேற்பாளராக பணியாற்றி வந்தார்.திங்கள்கிழமை மாலை இவர் லண்டனுக்கு வெளியே கைகள் துண்டிக்கப்பட்ட நிலையில் மிகக் கொடூரமான நிலையில் உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தார்.

மேற்கு லண்டன் புறநகரான கிரீன்போர்ட் என்ற இடத்தில் அவர் கிடந்தார். கைகள் துண்டிக்கப்பட்டது போக தலையிலும் காயம் காணப்பட்டது. இதையடுத்து அவரை மருத்துவமனைக்குக் கொண்டு போய் சேர்த்தனர். ஆனால் அங்கு அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.திங்கள்கிழமை மாலை பணி முடிந்து தனது இரு குழந்தைகளை பள்ளியிலிருந்து அழைத்து வருவதற்காக கிளம்பிச் சென்றபோது கீதா தாக்கப்பட்டிருப்பதாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொலையைச் செய்ததாக சந்தேகத்தின்பேரில் கீதாவின் கணவர் உள்ளிட்ட 6 பேரை போலீஸார் கைது செய்துள்ளதாக தெரிகிறது. இருப்பினும் அதுகுறித்து போலீஸார் இதுவரை முறைப்படி அறிவிக்கவில்லை.கீதாவும், அவரது கணவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்த சம்பவம் லண்டன் நகரில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கிரீன்போர்ட் மற்றும் அதற்கு அருகில் உள்ள செளத்ஹால் பகுதிகளில் பஞ்சாபி மக்கள் அதிகம் பேர் வசிக்கின்றனர். கீதாவும் பஞ்சாபிதான். லண்டனிலேயே அதிக அளவில் பஞ்சாபிகள் வசிக்கும் பகுதி செளத்ஹால் மற்றும் கிரீன்போர்ட் என்பது குறிப்பிடத்தக்து. செளத்ஹாலில் கீதாவின் வீடு உள்ளது.கீதா இங்கிலாந்திலேயே பிறந்து வளர்ந்தவர். அவரது கணவர் பஞ்சாபில் பிறந்தவர் ஆவார்.

ஒரு ஆண்டுக்கு முன்பு இருவரும் பிரிந்து விட்டனர். அவர்களின் இரு குழந்தைகளையும் பராமரிக்கும் உரிமை கீதாவுக்குக் கிடைத்தது. இந்த நிலையில் அவர் கொல்லப்பட்டுள்ளார்.கீதா கைகள் துண்டிக்கப்பட்டு உயிருக்குப் போராடிக் கொண்டிருந்தபோது அவரை வேடிக்கை பார்க்க நிறையப் பேர் கூடியுள்ளனர். ஆனால் யாருமே அவரை மருத்துவமனைக்குக் கொண்டு செல்ல முயலவில்லையாம். அவரை விரைவாக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றிருந்தால் ஒரு வேளை உயிர் பிழைக்க வைத்திருக்கலாம் என போலீஸார் வேதனையுடன் கூறினர்.

மகளை கொன்றார் தந்தை

தாயிடம் செல்ல அடம்பிடித்த எட்டு வயது மகளை, தந்தையே கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை கீழ்கட்டளை, பல்லவன் நகர், இரண்டாவது தெருவைச் சேர்ந் தவர் சிவா(37); சைக்கிள் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி பானு(35). இவர்களுக்கு, ஜெயஸ்ரீ(8) என்ற மகள் உள்ளார். கடந்த ஆறு மாதங்களாக கணவன், மனைவி இருவரும் பிரிந்து வாழ்கின்றனர். முடிச்சூர், லஷ்மி நகரில் உள்ள வாடகை வீட்டில் பானு வசித்து வருகிறார். தாயுடன் வசித்து வந்த ஜெயஸ்ரீ, தந்தை வீட்டிற்கு அடிக்கடி வந்து செல்வது வழக்கம். கடந்த 31ம் தேதி சிவாவிடம் வந்த ஜெயஸ்ரீ, தாயிடம் திரும்பிச் செல்ல அடம்பிடித்துள்ளார். இதில் ஆத்திரமடைந்த சிவா, 1ம் தேதி மதியம் ஜெயஸ்ரீயின் கழுத்தை கயிற்றால் இறுக்கி கொலை செய்தார். பின், உடலை வீட்டிலேயே போட்டு விட்டு சென்றுவிட்டார். நேற்று மதியம், முடிச்சூர் போலீஸ் பூத் அருகே உள்ள சாலையில், சிவா தானாக பேசிக்கொண்டே நடந்து சென்றார். அவரிடம் பீர்க்கண்காரணை போலீசார் விசாரணை நடத்தினர். அதில், அவர் மகளை கொலை செய்துவிட்டு, மனமுடைந்து சுற்றி வருவது தெரியவந்தது.
இதையடுத்து, போலீசார் குறிப் பிட்ட விலாசத்திற்கு சென்று பார்த்த போது, வீட்டிற்குள் துர்நாற்றத்துடன், அழுகிய நிலையில் சிறுமியின் உடல் கிடந்தது. அந்த உடலைக் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விசாரணையில், மகளை கொலை செய்ததை ஒப்புக்கொண்ட சிவா, கைது செய்யப்பட்டார்.

மகளை உல்லாசத்துக்கு அழைத்தவரை கண்டித்த தாய் அடித்துக் கொலை

தஞ்சாவூர் அருகே மகளிடம் தவறாக நடந்து கொண்டவரை தட்டிக் கேட்ட தாய் அடித்து கொலை செய்யப்பட்டார். தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு அடுத்த வளப்பக்குடியை சேர்ந்தவர் ரத்தினம் மனைவி பழனியம்மாள் (55). கணவரை இழந்தவர். இவரது மகள் திருமானூர் சின்னய்யன் மனைவி தனலட்சுமி (27). கடந்த ஐந்து ஆண்டுக்கு முன் சின்னய்யன் மற்றொரு பெண்னை திருமணம் செய்து கொண்டு, தனலட்சுமியை பிரிந்து வாழ்கிறார். தனலட்சுமி இரு மகன் மற்றும் ஒரு மகளுடன், தனது தாயார் பழனியம்மாளுடன் வசித்து வருகிறார்.
வளப்பக்குடி நடுத்தெருவை சேர்ந்தவர் மூக்கன் மகன் சேகர் (40). இவர் அடிக்கடி தனலட்சுமியிடம் தவறாக நடக்க முயன்றார். நேற்று முன்தினம் இரவு பழனியம்மாளும், தனலட்சுமியும் திருக்காட்டுப்பள்ளியில் இருந்து வளப்பக்குடிக்கு பஸ்ஸில் வந்தனர். அதே பஸ்ஸில் வந்த சேகர், தனலட்சுமியை உல்லாசமாக இருக்க அழைத்தார். இதையறிந்த பழனியம்மாள் வளப்பக்குடி வந்ததும் சேகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதில் கோபமடைந்த சேகர், தனது துண்டில் கருங்கல்லை கட்டி பழனியம்மாளை தாக்கினார். இதில், பலத்த காயமடைந்த பழனியம்மாள் அதே இடத்தில் இறந்தார். இதுகுறித்து தனலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் மரூர் போலீஸ் எஸ்.ஐ., பாலதண்டாயுதபாணி வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள சேகரை தேடி வருகிறார். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.