குளத்தில் குளித்த பெண் வெட்டிக் கொலை

நெல்லை மாவட்டம், கடையம் அருகே உள்ள முதலியார்பட்டி பள்ளிவாசல் தெருவைச் சேர்ந்தவர் கோயா. ஆந்திர மாநிலம் விசாகபட்டினத்தில் ஒரு கடையில் வேலை பார்த்து வருகிறார்.
இவரது மனைவி கதீஜாபேகம். பாய் முடையும் தொழில் செய்து வருகிறார். இவர் கடையம் அருகே உள்ள அய்யன்பிள்ளைகுளத்தில் குளிப்பதற்காக நேற்று காலை சென்றார். அங்கு வேறு யாரும் இல்லை. படித்துறையில் துணிகளை துவைத்துவிட்டு குளிப்பதற்காக குளத்தில் இறங்கினார்.
அப்போது அங்குவந்த மர்ம ஆசாமிகள் குளத்தில் குதித்து கதீஜாபேகத்தை சரமாரியாக வெட்டினர். இதில் அவரது உடல் முழுவதும் படுகாயம் ஏற்பட்டது. ரத்த வெள்ளத்தில் குளத்துக்குள்ளேயே கதீஜாபேகம் துடிதுடித்து இறந்தார்.அந்த கும்பல் அவரது கழுத்தில் கிடந்த மூன்றே முக்கால் பவுன் செயினை பறித்துக்கொண்டு தப்பியோடி விட்டனர்.
தகவலறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இது குறித்து வழக்கு பதிந்து, கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர்.

0 comments: