புது வருடத்தை கொண்டாட இப்போதே தயாராகி வருகின்றன மும்பை நட்சத்திர விடுதிகள். நட்சத்திரங்களைப் பொறுத்தவரை இது அறுவடைக்கான நாள். ஒரு பாடலுக்கு ஆடினாலே கோடிகளில் காசு பார்க்கலாம்.சென்ற வருடம் பிபாசா பாசுவின் நடனத்துக்குதான் மவுசு.
சஹாரா ஸ்டார் நட்சத்திர விடுதியில் நடனமாட இவர் வாங்கியது ஒன்றரை கோடி ரூபாய். கோடியில் கொடுத்தாலும் பிபாசாவுக்கு இது தகுந்த சம்பளம்தான் என்று கருதுகிறது சஹாரா நிர்வாகம்.இந்த வருடமும் சஹாராவின் புது வருட கொண்டாட்டத்தின் சென்டர் ஆஃப் அட்ராக்சன் பிபாசா பாசுதான்.
ஹோட்டல் நிர்வாகம் ஊரைக் கூட்டி இதனை உறுதி செய்திருக்கிறது. பிபாசாவுடன் வேறு சிலரும் நடனமாட இருக்கிறார்கள். இந்தமுறை பிபாசாவுக்கு இரண்டு கோடி ரூபாய் சன்மானமாக அளிக்கப்பட இருக்கிறது. அவர் எந்தப் பாடலுக்கு நடனமாட இருக்கிறார் என்பது இன்னும் முடிவு செய்யப்படவில்லையாம். முடிவு செய்தாலும் இறுதிவரை அது ரகசியமாக பாதுகாக்கப்படுமாம்.
0 comments:
Post a Comment