Showing posts with label மழை. Show all posts
Showing posts with label மழை. Show all posts

கனமழை பெய்வதால் பள்ளிகள் செயல்படக்கூடாது

தஞ்சை மாவட்டத்தில் கனமழை பெய்வதால் பள்ளி, கல்லூரிகள் கட்டாயமாக செயல்படக்கூடாது, என கலெக்டர் சண்முகம் எச்சரிக்கை விடுத்துள்ளார். டெல்டா மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. கடந்த 25ம் தேதி பலத்த மழை பெய்ததால் மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு செய்யாத போதிலும், பெரும்பாலான பள்ளிகள் மதியத்துக்கு மேல் விடுமுறை விடுக்கப்பட்டது. நேற்று கடும் மழை பெய்யும் என்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து பள்ளி, கல்லூரிகளுக்கும் விடுமுறை விடுக்கப்படுவதாக கலெக்டர் சண்முகம் அறிவித்தார். இருப்பினும், பெரும்பாலான தனியார் பள்ளிகளும், சில அரசு பள்ளிகளில் எஸ்.எஸ்.எல்.சி., மற்றும் ப்ளஸ் 2 மாணவ, மாணவிகளுக்காக சிறப்பு வகுப்பு நேற்று நடந்தது. நேற்று கலெக்டர் சண்முகம் கூறுகையில், ""கனமழை தொடர்வதால் கட்டாயமாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு 27, 28ம் தேதி விடுமுறை விடுக்கப்படுகிறது. அன்றைய தேதியில் சிறப்பு வகுப்பு என்ற பெயரில் எந்த கல்வி நிறுவனமும் வகுப்புகள் நடத்தக்கூடாது,'' என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் நீரில் மூழ்கின

வடமேற்கு பருவமழை தீவிரம் அடைந்ததாலும், இலங்கை அருகே வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாகவும் தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது.

காவிரி டெல்டா மாவட்டங்கான தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக ஏரி, குளங்கள் நிரம்பி வழிகின்றன.

வயல்கள் மழை நீரில் மூழ்கி கிடக்கின்றன. 4-வது நாளாக நேற்றும் பலத்த மழை பெய்தது. நேற்று முன்தினம் இரவு தொடங்கிய மழை நேற்று பிற்பகல் 2 மணி வரை விடாமல் பெய்து கொண்டே இருந்தது.


இந்த மழை காரணமாக திருவாரூரில் ஆயுதப்படை போலீஸ் குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது. மேலும் திருவாரூர் தியாகராஜர் கோவிலுக்குள்ளும் மழைநீர் புகுந்தது. திருவாரூர் காட்டுக்காரத்தெரு, மன்னார்குடி அசேஷம் பகுதிகளிலும் வீடுகளுக்குள் மழைவெள்ளம் புகுந்தது.


நாகை மாவட்டத்தில் பெய்து வரும் கன மழை காரணமாக வேதாரண்யம் பகுதியில் 10 ஆயிரம் ஏக்கர் உப்பளங்கள் வெள்ளத்தில் மூழ்கி விட்டன. நாகை மாவட்டத்தில் மீனவர்கள் நேற்று 2-வது நாளாக கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை.


மேலும் வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தைச் சேர்ந்த பாலகிருஷ்ணன் (47) என்ற விவசாயி குளிர் தாங்காமல் நேற்று முன்தினம் இரவு மரணம் அடைந்தார். கடமடை பாசன ஆறுகளில் மழைநீர் பெருக்கெடுத்து ஓடுவதால் தலைஞாயிறு, கீழையூர் ஆறுகளில் உடைப்பு ஏற்படும் அபாயம் ஏற்பட்டு உள்ளது.


தஞ்சை மாவட்டத்தில் பெய்துவரும் கனமழையால் மாவட்டத்தின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள விளை நிலங்கள் நீரில் மூழ்கி விட்டன. பயிர் சேதம் பற்றி அதிகாரிகள் கணக்கெடுப்பு நடத்தி வருகிறார்கள்.

கடலோர மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும்

காற்றழுத்த தாழ்வுநிலை அதே இடத்தில் நீடிப்பதால் அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து வருவதால் தமிழகம் புதுச்சேரியில் கனமழை பெய்து வருகிறது. தென் தமிழகத்தின் பல பகுதிகளில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் அங்கு உள்ள ஏரி, குளங்கள் வேகமாக நிரம்பி வருகின்றது.

அடுத்த 24 மணிநேரத்திற்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரி,


’’இலங்கையையொட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை அதே இடத்தில் தொடர்ந்து நீடிக்கிறது.

இதன் காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நல்ல மழை பெய்து வருகிறது. அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள்மாவட்டங்களில் அநேக இடங்களிலும் மழை பெய்யக்கூடும்.


சென்னையை பொறுத்தவரையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்’’என்று தெரிவித்துள்ளார்.

தென் மாவட்டங்களில் தொடர் மழை

தமிழகத்தின் தென் மாவட்டஙகளில் வடகிழக்கு பருவமழை தொடர்ந்து நீடிப்பதால் அணைகளின் நீர்வரத்து அதிகரித்து வருகிறது. வைகை ஆற்றில் கரைபுரண்டு வெள்ளம் ஓடுவதால் கரையோர மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இதற்கிடையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம் , திருவாரூர் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஒரு வார காலமாக மழை விட்டு, விட்டும், சில பகுதிகளில் தொடர்ந்தும் பெய்த வண்ணம் உள்ளது. கடந்த 3 நாட்களாக திருநெல்வேலி, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் பகுதிகளில் இரவில் விடிய, விடிய மழை பெய்து வருகிறது. பெரிய அளவில் சேதம் ஏதும் இல்லையென்றாலும் தாழ்வான குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் சிறிய பாதிப்பு ஏற்பட்டுள்ளது.மதுரை மாடக்குளம் கண்மாய் மாறுகால் பாய்கிறது. வைகை அணை 71 அடி நிரம்பி விட்டதால் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இதன்காரணமாக வைகை ஆற்றில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். மதுரையில் ஆரப்பாளையம் , யானைக்கல் உள்ளிட்ட தரைப்பாலங்கள் மூழ்கின. மதுரை வைகையில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவதை பார்க்க பலர் குடும்பத்தினருடன் வந்தனர்.



வைகை அணையின் நீர் மட்டம் : தேனி மாவட்டத்தில் நேற்று இரவு பரவலான மழை பெய்தது. அணைப்பகுதியில் நல்ல மழை காரணமாக நீர்வரத்து கணிசமாக உள்ளது. வைகை அணையின் தற்போதைய நீர்மட்டம் 69.59 ( மொத்தம் அணையின் கொள்ளளவு 71 அடி ) இந்த அணைக்கு வினாடிக்கு 4 ஆயிரத்து 046 கன அடி நீர் வந்து கொண்டிருக்கிறது. 2 ஆயிரத்து 46 கன அடி நீர் வெளியேறுகிறது.


அணையின் நீர் இருப்பு 50 ஆயிரத்து 721 மில்லியன் கன அடியாகும். பெரியார் அணை நீர் மட்டம் 127 அடியாக உயர்ந்திருக்கிறது. ( மொத்தம் கொள்ளளவு 136 அடி) . இந்த அணைக்கு 2 ஆயிரத்து 555 கன அடி நீர் வரத்து உள்ளது. நீர் இருப்பு மொத்தம் 4 ஆயிரத்து 50 மில்லியன் கன அடி ஆகும். பெரியாறு அணை பகுதியில் 4 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. ஆண்டிப்பட்டி மற்றும் சுற்றுப்பகுதியில் நெசவுத்தொழில் பாதிக்கப்பட்டிருக்கிறது.


ராமநாதபுரத்தில் பெரிகண்மாய் நிரம்புகிறது: ராமநாதபுரம் மாவட்டத்தில் மப்பும் , மந்தாரமுமாக உள்ளது. கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழை காரணமாக மாவட்டத்தின் முக்கிய பெரிகண்மாய் 60 சதம் நிரம்பியிருக்கிறது. இதன் காரணமாக அருகில் உள்ள காருக்குடி கிராமத்தை வெள்ளநீர் சூழ்ந்துள்ளது. மழை நிலை இதே அளவு இருக்குமானால் இந்த கண்மாய் நிரம்பி விடும் என வருவாய் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த பெரிய கண்மாய் மண்டபத்தில் அதிப்பட்சமாக 207 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. திருவாடானை உள்பட 15 வீடுகள் இடிந்துள்ளன. நீரை வெளியேற்றும் பணியில் வருவாய், நகராட்சி, உள்ளாட்சி ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் சாரலுடன் கூடிய மழை பெய்தது.இளையான்இடி அருகே உள்ள தாயமங்கலம் கண்மாய் நிரம்பியது. இதன் காரணமாக அருகில் உள்ள அகதி முகாமிற்குள் நீர் புகுந்தது. மறவமங்கலம் கண்மாய் நிரம்பும் தருவாயில் உள்ளது.



பள்ளிகளுக்கு விடுமுறை: மழை காரணமாக விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களுக்கு பள்ளி, கல்லூரிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மாவட்டத்தில் பாபநாசம் அணைப்பகுதியில் நல்ல மழை பெய்து வருவதால் அணை நீர் மட்டம் கணிசமாக உயர்ந்திருக்கிறது. அம்பாசமுத்திரம் மணியாச்சி பகுதியில் அதிகப்பட்சமாக 7 செ.மீட்டர் மழை பதிவாகியது.

சென்னையில் திடீர் மழை

சென்னை நகரின் பல இடங்களில் நேற்று இடியுடன் கூடிய திடீர் மழை பெய்ததால், வாட்டி வதைத்த அனல் காற்று மாறி குளிர்ச்சியுடன் காணப்பட்டது.
சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில், கடந்த சில நாட்களாக வெயில் வாட்டி வதைத்து வந்தது.காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை வெயிலினால், மக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாயினர்.இந்நிலையில், பல்லாவரம், குரோம்பேட்டை, திருவல்லிக்கேணி, பூந்தமல்லி, மயிலாப்பூர் உள்ளிட்ட இடங்களில் நேற்றிரவு 9 மணியளவில் இடியுடன் கூடிய திடீர் மழை பெய்தது. இந்த மழையால், அனல் காற்று மாறி, குளிர்ச்சியுடன் காணப் பட்டது.

தமிழகத்தில் மழை நீடிக்கும்

வங்க கடலில் இலங்கை அருகே மையம் கொண்டிருந்த தீவிர காற்றழுத்த நிலை தொடர்ந்து அதே பகுதியில் நீடித்து வருகிறது.

இதனால் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் கடந்த 24 மணி நேரம் மழை பெய்துள்ளது.

அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும். கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.

நகரின் சில பகுதிகளில் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் கடல் கொந்தளிப்பு

வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழக கடல் பகுதியில் கடந்த 1 வாரமாக பலத்த காற்று வீசுகிறது. இதனால் கடல் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் 55 முதல் 75 கிலோ மீட்டர் வேகத்தில் கடலில் பலத்த காற்று வீசும் என்று தொடர்ந்து எச்சரிக்கை விடுத்து வருகிறது.
எனவே மீனவர்கள் ஒரு வாரமாக கடலுக்கு மீன் பிடிக்கச்செல்லவில்லை. சென்னை மெரீனாவிலும் கடந்த சில தினங்களாக கடல் கொந்தளிப்பு காணப்படுகிறது. இன்றும் அலைகள் பல அடி உயரும் எழும்பி சீறிப் பாய்ந்தன. பட்டினப்பாக்கம் மீனவர் குடியிருப்பு பகுதியில் கடல் நீர் புகுந்தது. பெசன்ட் நகர், திருவான் மியூர் பகுதியிலும் கடல் சீற்றம் அதிகமாக காணப்பட்டது.
எனவே இந்த பகுதி மீனவர்கள் இன்றும் கடலுக்கு செல்லவில்லை. எண்ணூர், திருவொற்றியூர், காசிமேடு பகுதியில் கடல் மிகுந்த சீற்றத்துடன் உள்ளது. இன்றும் வழக்கத்தை விட அதிக உயரமாக அலைகள் எழும்பி வேகமாக கரையை தாக்குகிறது. கடந்த ஒரு வாரமாக இந்த பகுதியில் கடல் சீற்றம் காணப்படுகிறது. கடலோரம் உள்ள சில குடியிருப்பு பகுதி களில் கடல் நீர் புகுந்து இருக்கிறது. கடல் சீற்றம் காரணமாக இங்கு மீனவர்கள் இன்று 7-வது நாளாக கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லவில்லை.

நாளை பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

வங்கக்கடலில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை காரணமாக சென்னையில் கனமழை பெய்து வருவதால், நகரில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை அருகே உள்ள திருவாரூர் மாவட்டத்திலும் மழை பெய்து வருவதால் அங்குள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் உருவான ‘வார்ட்’ புயல் இலங்கைப் பகுதிக்குள் நுழைந்ததைத் தொடர்ந்து, நாகை துறைமுகத்தில் ஏற்றப்பட்டிருந்த புயல் அபாய எச்சரிக்கைக் கூண்டு இன்று இறக்கப்பட்டது. எனினும் நாகையில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது.

தஞ்சை: நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடும் மழை பெய்து வருகிறது.
மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்க கலெக்டர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.

நாகை மாவட்டம்:நாளை பள்ளிகளுக்கு விடுமுறை

வார்டு புயல் காரணமாக கடும் மழை நீடிப்பதால், நாகை மாவட்ட பள்ளிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட கலெக்டர் முனியநாதன் தெரிவித்துள்ளார்.

நாளை நடைபெறுவதாக இருந்த அரையாண்டு தேர்வு டிசம்பர் 19ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

புயல் சிறிது பலவீனம்! நாளை நல்ல மழை பெய்யும்

தென்மேற்கு வங்கக் கடலில் நேற்று பலமாக உருவெடுத்தப் புயல் சின்னம் இன்று சிறிது பலமிழந்துள்ளது என்றாலும், நாளை தமிழகம், புதுவை கடலோர மாவட்டங்களில் நல்ல மழை பொழியும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையின்படி, சென்னையிலிருந்து தென்கிழக்காக 500 கி.மீ. தூரத்திலும், நாகையிலிருந்து தென்கிழக்காக 350 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டுள்ள புயல் மேற்கு நோக்கி நகர்ந்து வருவதாகவும், அது நாளை இரவு நாகைக்கும் பாம்பனுக்கும் இடையே கரையைக் கடக்கலாம் என்றும் கூறிப்பட்டுள்ளது.
இந்தப் புயல் சின்னத்தின் காரணமாக தமிழ்நாட்டிலும், புதுவையிலும் கடற்கரையோர மாவட்டங்களில் இன்று ஆங்காங்கே மழை பெய்யும் என்றும், நாளை தமிழ்நாடு, புதுவை கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும் என்றும் கூறியுள்ள வானிலை மைய அறிக்கை, மீனவர்கள் கடலிற்குச் செல்ல வேண்டாம் என்று எச்சரித்துள்ளது.
நாளை கடலோர மாவட்டங்களில் மணிக்கு 65 முதல் 75 வரையும், சில நேரங்களில் 85 கி.மீ. வேகத்திற்கும் புயல் காற்று வீசக்கூடும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னையில் பலத்த மழை!
இன்றுடன் கடந்த இரண்டு நாட்களாக மேக மூட்டத்துடனேயே காணப்பட்ட சென்னையில் இன்று மாலை 6.30 மணியளிவில் பரவலாக பலத்த மழை பொழியத் தொடங்கியது. காற்றுடன் கூடிய மழை பெய்து வருகிறது.

தமிழ்நாடு, புதுவையை நோக்கிப் புயல்! நாளை முதல் பலத்த மழை பெய்யும்!


தென் மேற்கு வங்கக் கடலில், நாகப்பட்டினத்திலிருந்து தென் கிழக்காக நிலை கொண்டிருந்தக் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் புயல் சின்னமாக உருவாகியிருப்பதையடுத்து நாளை முதல் தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளில் பலத்த மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று மாலை 5 .30 மணிக்கு விடுத்துள்ள சிறப்பு வானிலை அறிக்கையில் தமிழ்நாடு, புதுவை மாநிலங்களுக்கு புயல் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இன்று பிற்பகல் 2.30 மணிக்குப் பதிவான செயற்கைக்கோள் புகைப்படத்தில் சென்னையிலிருந்து தென் கிழக்காக 700 கி.மீ. தூரத்திலும், நாகையிலிருந்து தென் கிழக்காக 550 கி.மீ. தூரத்திலும் நிலைகொண்டுள்ள இந்தப் புயல் சின்னம், மேலும் வலுப்பெற்று வடககு மேற்கு வடக்காக தமிழ்நாடு, புதுவை கடற்கரையை நோக்கி வரும் என்றும், இதன் காரணமாக தமிழ்நாடு, புதுவை கடலோரப் பகுதிகளில் நாளை முதல் பலத்த மழை பெய்யும் என்றும் வானிலை அறிக்கைக் கூறியுள்ளது.

நாளை காலை முதல் மணிக்கு 55 முதல் 65 கி.மீ. வேகத்திற்கும், சில நேரங்களில் 75 கி.மீ.வரையும் காற்று வீசக்கூடும் என்றும் எச்சரித்துள்ள அந்த அறிக்கை, கடல் கொந்தளிப்பு அதிகமாக இருக்குமென்றும், மீனவர்கள் கடலிற்குச் செல்ல வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

சென்னையில் சாரல் மழை!இன்று காலை முதலே மேக மூட்டத்துடன் காணப்பட்ட சென்னையில் இன்று மதியம் 3.00 மணிக்குப் பிறகு ஆங்காங்கே சாரலாக மழை பொழிந்தது. விட்டுவிட்டுப் பொழியும் சாரல் மழையால் சென்னையில் குளிரான வெப்ப நிலை நிலவுகிறது.

இரண்டு நாட்களுக்கு மழை

வங்கக் கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகி உள்ளதால் அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை இருக்கும். குறிப்பாக, கடலோர மாவட் டங்களில் பலத்த மழை பெய்யும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

வங்கக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, அரபிக் கடலுக்கு சென்ற பின், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்வது படிப்படியாக குறைந்தது. ஆனாலும், பருவமழை சீசன் என்பதால், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஆங்காங்கே ஒருசில இடங்களில் மழை பெய்து வருகிறது. சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் விடியற்காலை பனிமூட்டமாக காணப்பட்டாலும், பகலில் சுள்ளென வெயில் அடித்தது. இதற்கிடையே, வங்கக் கடலில் நேற்று முன்தினம் புதிதாக காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது. இதன் காரணமாக, கடலோர மாவட்டங்களில் படிப்படியாக மழை பெய்வது அதிகரிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக, வல்லத்தில் 7 செ.மீ., மழை பெய்தது. தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணி நிலவரப்படி, சிவகிரி, தூத்துக்குடியில் 5 செ.மீ., செங்கல்பட்டு, பேராவூரணியில் 4 செ.மீ., பாம்பன், சங்கரிதுர்க், பவானிசாகர், திருச்சுழி, துறையூரில் 3 செ.மீ., மழை அளவு பதிவாகியது.

இது குறித்து சென்னை வானிலை மைய இயக்குனர் ரமணன் கூறுகையில்,"தென்மேற்கு வங்கக் கடலுக்கும், தென்கிழக்கு வங்கக் கடலுக்கும் இடையே குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை நேற்று முன்தினம் உருவானது. இந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை, நேற்று தமிழகம் மற்றும் இலங்கை கடற்கரைக்கிடையே நிலை கொண்டிருந்தது. இதன் காரணமாக, அடுத்த இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பல்வேறு இடங்களிலும், தமிழகத்தின் உள்மாவட்டங்களில் சில இடங்களிலும் இடியுடன் கூடிய மழை பெய்யலாம். குறிப்பாக, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடலோர மாவட்டங்களில் பலத்த மழை பெய்யும். சென்னை நகரில் வானம் மேகமூட்டமாக இருக்கும். நகரின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்' என்றார்.

நீலகிரி மாவட்டத்தில் கூடுதல் மழை: நீலகிரி மாவட்டத்தில், முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு 77.4 செ.மீட்டர் அளவிற்கு, வடகிழக்கு பருவமழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழையால் 10 மாவட்டங்களில் கூடுதல் மழை பெய்துள்ளது. அதிக பட்சமாக நீலகிரி மாவட்டத்தில் 77.4 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. இங்கு இதுவரை இயல்பான மழையளவு 27.8 செ.மீட்டராக இருந்துள் ளது. நாகப்பட்டினத்தில் 70.8 செ.மீட்டர், கடலூரில் 62.2 , திருநெல்வேலியில் 47.2, விழுப்புரத்தில் 48.4, திருவாரூரில் 47.8, திண்டுக்கலில் 35.8, திருவாரூரில் 47.8, ராமநாதபுரத்தில் 41.8, தூத்துக்குடியில் 34.4 சென்டி மீட்டரும் மழை பெய்துள்ளது. சென்னை, அரியலூர், கோவை, ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை, சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவண்ணாமலை, திருச்சி, மதுரை, விருதுநகர், திருவள்ளூர் மாவட்டங்களில், இயல்பான அளவிற்கே மழை பெய்துள்ளது. தருமபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், வேலூர் மாவட்டங்களில் வழக்கமான அளவிற்கு குறைவாக மழை பெய்துள்ளது.

மழை; 24 மணி நேரம் நீடிக்கும்


வங்கக்கடலில் கன்னியாகுமரிக்கு அருகே குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகியிருப்பதன் காரணமாக மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ள நிலையில், சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
நேற்று பகலில் ஓரளவு வெயில் இருந்த நிலையில், பிற்பகலில் கனமழை கொட்டியது,மீண்டும் நள்ளிரவு முதல் இன்று காலை வரை விட்டு விட்டு பரவலாக கனமழை பெய்துள்ளது. தாழ்வான பகுதிகளிலும், சாலைகளிலும் மழை நீர் தேங்கியதால், வாகனப் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது.
இன்று ஞாயிற்றுக்கிழமை என்பதால், சாலைகளில் போக்குவரத்து ஓரளவு குறைந்து காணப்பட்டாலும், இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.காற்றழுத்த தாழ்வு நிலை நீடிப்பதன் காரணமாக சென்னை உட்பட மாநிலம் முழுவதிலும், புதுவையிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை மையம் அறிவித்துள்ளது.

குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை

அரபிக் கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை , தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி 12ம் தேதி குஜராத்துக்கும், கொங்கன் கடற்கரைக்கும் இடையே கரையைக் கடக்கும் .என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் தற்போது மங்களூருக்கு மேற்கே 470 கிலோமீ்ட்டர் தொலைவிலும், கோவாவுக்கு 470 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு - தென் மேற்காக 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு - வட மேற்காக நகர்ந்து, நாளை ( நவம்பர் 12ம் தேதி ) அதிகாலை பொழுதில் தெற்கு குஜராத் - வடக்கு கொங்கன் கடற்கரைப் பகுதியில், மஹுவா மற்றும் தஹானு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு பயான் என பெயரிடப்பட்டுள்ளது.

65 கி. மீட்டர் வேகத்தில் காற்று : இதன் காரணமாக குஜராத் , மகாராஷட்டிரா, ஆந்திர தெற்கு கடலோர பகுதிகள், கேரள கடற்கரையோர பகுதிகள், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்யும். குஜராத் பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும். கடலோர கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மேலும் 24 மணி நேரம் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இக்குநர் குழந்தைவேலு கூறுகையில் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இப்போது புயலாக உருமாறி குஜராத், மகாராஷட்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.

24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும்

குமரிக் கடலில் உருவான குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை திசை மாறி அரபிக் கடலுக்குப் போய் விட்ட போதிலும், அடுத்த 24 மணி நேரத்திற்கு தமிழகத்தில் மழை நீடிக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

வட கிழக்குப் பருவ மழை தமிழகம் முழுவதும் பெய்து வருகிறது. புதுச்சேரியும் மழைக்குத் தப்பவில்லை.

கடந்த நான்கு நாட்களாக தமிழகத்தின் கடலோரப் பகுதிகளிலும் உட்பகுதிகளிலும், புதுவையிலும் தொடர்ந்து விடாமல் மழை பெய்து வந்தது. குமரிக் கடலில் ஏற்பட்டிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலையே இதற்குக் காரணம். மேலும், மன்னார் வளைகுடாப் பகுதியில் இது நிலை கொண்டிருந்ததால், பலத்த மழை கிடைத்தது.

ஆனால் நேற்று திடீரென இந்த புயல் சின்னம், வடக்கு நோக்கி நகர்ந்து அரபிக் கடலுக்குப் போய் விட்டது. இதனால் கேரளாவில் நல்ல மழை பெய்யத் தொடங்கியுள்ளது.

கேரளாவை ஒட்டியுள்ள மேற்குத் தொடர்ச்சிப் பகுதி மாவட்டங்களான கோவை, நெல்லை, திருப்பூர், தேனி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் தற்போது கன மழை பெய்கிறது.

புயல் சின்னம் தமிழகத்தை நோக்கி வராமல் நகர்ந்து போய் விட்டதால் படிப்படியாக மழையின் அளவு குறையும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

அதன்படி நேற்று முதல் சென்னை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மழையின் வேகமும், அளவும் குறைந்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.ஆர்.ரமணன் கூறுகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில், கடலில் கிழக்கிலிருந்து மணிக்கு 45 - 55 கி.மீ., வேகத்தில் பலத்த காற்று வீசும். எனவே மீனவர்கள் கடலுக்குப் போவதைத் தவிர்க்க வேண்டும்.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என்றார்.

மழைக்கு இதுவரை 22 பேர் பலி..

மழைக்கு இதுவரை தமிழகத்தில் 22 பேர் உயிரிழந்துள்ளனர். திருநெல்வேலி , விழுப்புரத்தில் தலா ஆறு பேரும், கோவை, தூத்துக்குடி ராமநாதபுரத்தில் தலா இருவரும், மதுரை, திருச்சி, பெரம்பலூர், விருதுநகரில் தலா ஒருவரும் என 22 பேர் பலியாகியுள்ளனர்.

பள்ளிகளுக்கு விடுமுறை...

தொடர்ந்து மழை பெய்து வருவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், விழுப்புரம், ஈரோடு, ராமநாதபுரம், கோவை, திருப்பூர், தேனி, சிவகங்கை, நீலகிரி, திண்டுக்கல், கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை விடப்படும் என மாவட்ட கலெக்டர்கள் அறிவித்துள்ளனர்.

இதேபோல புதுச்சேரியிலும் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வுகள் ஒத்திவைப்பு...

கோவை பாரதியார் பல்கலைக்கழக தேர்வுகள் அனைத்தும் இன்று ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக நிர்வாகம் தெரிவித்துள்ளது.

சென்னையில் சற்றே ஓய்ந்த மழை...

சென்னை நகரில் கடந்த நான்கு நாட்களாக விளாசித் தள்ளிய கனமழை நேற்று சற்று ஓய்ந்தது. நேற்று காலை முதல் லேசான மழை, அவ்வப்போது மட்டும் பெய்து வருகிறது.

இருப்பினும் நான்கு நாட்கள் பெய்த மழையால் தேங்கிய மழை நீர் வெள்ளம் இன்னும் பல பகுதிகளில் வடியவில்லை. இதனால் பல பகுதிகளிலும் இயல்பு நிலை திரும்பவில்லை. மழை மட்டும்தான் ஓய்ந்திருக்கிறதே தவிர மழை வெள்ளம் இன்னும் வடியாமலேயே உள்ளது.

வடசென்னை மற்றும் தென்சென்னை பகுதியில் உள்ள தாழ்வான பகுதியில் வெள்ளநீர் சூழ்ந்ததால் நூற்றுக்கணக்கான வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்தது. இதனால், வீடுகளில் இருந்தவர்கள் வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கினர்.

மழை குறைய வாய்ப்பு

கன்னியாகுமரி கடல் பகுதியில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காலை 8.30 மணியளவில் மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவுகளுக்கு அருகில் மையம் கொண்டிருப்பதால் தமிழகத்தில் படிப்படியாக மழை குறைய வாய்ப்பிருக்கிறது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

இந்த காற்றத்தழுத்த நிலையால் நேற்று தமிழகத்தில் 98% இடங்களில் பலத்த மழை பெய்ததாக அறிவித்த வானிலை ஆய்வு மையம், தற்போது குமரிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு நிலை மேற்கு நோக்கி நகர்ந்து லட்சத்தீவுகளுக்கு அருகில் மையம் கொன்டுள்ளது என்று அறிவித்துள்ளது.இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் ரமணன் கூறியதாவது:- குமரி கடலில் நிலை கொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி மேற்கு நோக்கி நகர்ந்து இன்று காலை 8.30 மணி அளவில் அரபிக் கடலில் உள்ள லட்சத்தீவு பகுதிகளில் தீவிர காற்றழுத்த தாழ்வு நிலையாக நீடிக்கிறது.

இதனால் தமிழ்நாட்டில் மழை குறைய வாய்ப்பு உள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாடு முழுவதும் நல்லமழை பெய்துள்ளது. வரும் 24 மணி நேரத்தில் தமிழ்நாடு புதுச்சேரியில் அனேக இடங்களில் மழை பெய்யும். ஓரிரு இடங்களில் கன மழை இருக்கும். சென்னையில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் மழை இருக்கும்.

தமிழகத்தில் அதிக அளவாக சீர்காழி, சிவகிரியில் 24 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. நீலகிரியில் 21 செ.மீ., பரங்கிபேட்டையில் 18 செ.மீ., குன்னூரில் 19 செ.மீ. சிதம்பரத்தில் 17 செ.மீ., சென்னை, செம்பரம்பாக்கத்தில் 15 செ.மீ., நுங்கம்பாக்கத்தில் 12 செ.மீ. மழை பதிவாகி உள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சென்னை‌க்கு வரு‌ம் இரயில்கள் தாமதம்

தொட‌ர் மழை காரணமாக த‌ண்டவாள‌ங்க‌‌ள் மழை ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌ப்பதா‌ல் தெ‌ன் மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் இரு‌ந்து செ‌ன்னை‌க்கு வரு‌ம் இர‌யி‌ல்க‌‌ள் இர‌ண்டு முத‌ல் மூ‌ன்று ம‌ணி நேர‌ம் தாமதமாக வரு‌கி‌ன்றன.

கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக பெய்து வரு‌ம் கன மழை‌க்கு த‌ண்டவாள‌ங்க‌ளி‌ல் ‌நீ‌‌ரி‌ல் மூ‌ழ்‌கி ‌கிட‌க்‌கி‌ன்றன. இதனா‌ல் செ‌ன்னை‌க்கு வரு‌ம் இரயில்கள் தாமதமாக வந்தன.

சென்னை எழும்பூருக்கு வழக்கமாக வரவேண்டிய மலைக்கோட்டை ‌விரைவு இர‌யி‌ல், சேலம் இரயில் தவிர மற்ற அனைத்து இரயில்களும் 2 மணி நேரம் முதல் 3 மணி நேரம் வரை தாமதமாக வந்து சேர்ந்தன.

இதே போல திருச்சி, மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில் சென்ற இரயில்களும் இன்று தாமதமாக போய் சேர்ந்தன. இரயில் பயணிகளும் அவர்களை வரவேற்க வந்தவர்களும் பெரும் சிரமத்திற்கு ஆளானார்கள்.

இத‌னிடையே கும்பகோணத்தில் இருந்து புறப்பட்டு சென்னை நோக்கி வந்த மலைக்கோட்டை ‌வி‌ரைவு இரயில் திருச்சியை அடுத்த கல்லிடை அருகே ந‌ள்‌ளிரவு 12 ம‌ணி‌க்கு சென்றபோது தண்டவாளத்தில் பயங்கர சத்தம் கேட்டது. இது ப‌ற்‌றி ஓ‌ட்டுன‌ர் திருச்சி இரயில் நிலையத்துக்கு தகவல் தெரிவித்தா‌ர்.

இதையடுத்து இரயில்வே ஊழியர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டு இருந்ததை கண்டுபிடித்தனர். இதனால் அந்த வழியாக செல்லும் அனைத்து இரயில்களும் வழியில் நிறுத்தப்பட்டன.

சென்னைக்கு வந்த இரயில்களும், நெல்லை நோக்கி சென்ற இரயில்களும் இருபுறமும் நிறுத்தப்பட்டதால் பயணிகள் பாதிக்கப்பட்டனர். தற்காலிகமாக தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசலை ஊழியர்கள் சரி செய்தனர். இதனால் 2 மணி நேரத்திற்கு மேலாக இரயில்கள் நின்றன. தண்டவாளம் சரி செய்யப்பட்ட பிறகு இரயில்கள் ஒவ்வொன்றாக இரு மார்க்கமும் புறப்பட்டு சென்றன.

மழை: த‌மிழக‌ம் முழுவது‌ம் 14 பே‌ர் ப‌லி

செ‌ன்னை உ‌ள்பட த‌மிழக‌ம் முழுவது‌ம் கட‌ந்த இர‌ண்டு நா‌ட்களாக தொட‌ர்‌ந்து ‌விடிய ‌விடிய மழை பெ‌ய்து வரு‌கிறது. இதனா‌ல் ம‌க்க‌ளி‌ன் இய‌ல்பு வா‌ழ்‌க்கை கடுமையாக பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. மழை‌க்கு இதுவரை 14 பே‌ர் பல‌ியா‌கியு‌ள்ளன‌ர்.

சென்னையில் நே‌ற்று முத‌ல் விடிய, விடிய பலத்த மழை பெ‌ய்து வரு‌கிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடி‌கிறது.

வேளச்சேரி, விஜயநகரம், திருவான்மியூர், வில்லிவாக்கம், கொளத்தூர், வியாசர்பாடி உள்ளிட்ட இடங்களில் சாலைகள் மற்றும் சுரங்கப் பாதைகளில் மழை நீர் தேங்கியுள்ளது.

இதனா‌ல் சாலைக‌ளி‌ல் போ‌க்குவர‌த்து கடுமையாக பா‌‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளது. ஆமைபோ‌ல் வாகன‌ங்க‌ள் ஊ‌ர்‌ந்து செ‌ல்‌கி‌ன்றன. 20 ‌நி‌மிட‌ங்க‌ளி‌ல் வர வே‌ண்டிய இட‌‌த்து‌க்கு குறை‌ந்தது ஒரு ம‌ணி நேர‌‌த்‌தி‌ற்கு‌ம் கூடுதலாக ஆ‌கி ‌விடு‌கிறது.

நேற்றிரவு பெய்த தொடர் மழையால் வட சென்னையில் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி உள்ளது.திருவொற்றியூரில் கார்கில் நகர், ராஜாஜி நகர், வடிவாம்பிகை நகர், பிருந்தாவன் நகர் ஆகிய பகுதிகளில் மழை நீர் தேங்கி உள்ளது.

கூவம் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் இப்பகுதிகளில் உள்ள மழை நீர் வழிந்தோட வழியில்லாமல் தேங்கி கிடக்கின்றன.

கொருக்குப்பேட்டை, எழில்நகர், சிகரஞ்சி பாளையம், எம்ஜிஆர் நகர் ஆகிய பகுதிகளிலும், வியாசர்பாடி, கணேசபுரம் மேம்பாலத்தின் அடியில் மழைநீர் தேங்கி கிடக்கின்றன. இப்பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது.

வியாசர்பாடி இரயில்வே மேம்பாலம் கீழே மழைநீர் தேங்கி கிடப்பதால் அப்பகுதியில் வாகனங்கள் மெதுவாக ஊர்ந்து செல்கின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இங்குள்ள வெள்ள நீரை சென்னை மாநகராட்சி மோட்டார் மூலம் வெளியேற்றி வருகிறது.

வெள்ளச் சேதம், இழப்பு குறித்து தகவல் அளிக்க சென்னை சேப்பாக்கம் எழிலகத்தில் உள்ள வருவாய் நிர்வாக ஆணையர் அலுவலகத்தில் 24 மணி நேரம் செயல்படக் கூடிய கட்டுப்பாடு அறையில் இலவச தொலைபேசி எண் 1070 இயங்கி வருகிறது.

மாவட்டங்களின் தலைமையிடத்தில் 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறையின் இலவச தொலைபேசி எண் 1077 மூலம் அந்தந்த மாவட்டங்களின் நிலவரம் குறித்து அறிந்து கொள்ள முடியும் என்று வருவாய்த் துறைச் செயலாளர் பழனியப்பன் கூறினார்.

இந்த இலவச தொலைபேசி எண்கள் மூலமாக மழை, வெள்ளம் குறித்த தகவல்களைக் கேட்டுப் பெறலாம். பொது மக்களும் தங்களிடம் உள்ள தகவல்களைத் தெரிவிக்கலாம் என்று‌ம் பழ‌னிய‌ப்ப‌ன் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் பலத்த மழை,பள்ளிகளுக்கு விடுமுறை

தமிழகம் முழுவதும் கடலோர மாவட்டங்களில் விடிய விடிய மழை பெய்ததது. இன்னும் தொடர்ந்து நிற்காமல் மழை பெய்து வருவதால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை மேலும் வலுவடைந்திருப்பதால், தமிழக கடலோர மாவட்டங்களிலும், தென் மாவட்டங்களிலும் மேலும் 2 நாட்களுக்கு மழை கொட்டித் தீர்க்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுவரை மழைக்கு தமிழகத்தில் 14 பேர் பலியாகியுள்ளனர். தமிழக கடலோர மாவட்டங்களிலும், சென்னை நகரிலும், புதுச்சேரியிலும் இயல்பு வாழ்க்கை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

மன்னார் குடாவில் ...

மன்னார் வளைகுடாப் பகுதியில் தற்போது காற்றழுத்தத் தாழ்வு நிலை மையம் கொண்டுள்ளது. தமிழகத்தையொட்டி தென் மேற்கு வங்கக் கடல் வழியாக இது நிலை கொண்டுள்ளது.

மன்னார் வளைகுடாப் பகுதியில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வு நிலை ஏற்பட்ட காலங்களில் தமிழகத்தில் பலத்த மழை பெய்துள்ளதாக வானிலை ஆய்வு மைய இயக்குநர் [^] எஸ்.ஆர்.ரமணன் தெரிவித்துள்ளார். எனவே இந்த முறையும் பலத்த மழையை தமிழகம் சந்திக்கும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

தமிழ்நாட்டிலும், புதுச்சேரியிலும் அடுத்த 24 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் கண்டிப்பாக மழை பெய்யும். ஒருசில இடங்களில் மிக பலத்த மழை பெய்யும். உள் மாவட்டங்களில் அநேக இடங்களில் மழை பெய்யும். சில இடங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் தெரிவித்தார்.

மிதக்கும் சென்னை புறநகர்கள்..

சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. குறிப்பாக புறநகர்ப் பகுதிகளில் நேற்று இரவு முழுவதும் விடாமல் மழை பெய்தது. இன்று காலையும் மழை நிற்காமல் வெளுத்துக் கட்டி வருகிறது.

தொடர் மழை காரணமாக, காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்றே பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. ஆனால் மிகவும் கால தாமதமாக விடுமுறை அறிவிக்கப்பட்டதால் பல பள்ளிகள் விடுமுறை விடப்படாமல் இயங்கின. அரசுப் பள்ளிகளுக்கு சென்ற மாணவர்கள் [^], விடுமுறை குறித்த தகவலை அறிந்து கொட்டும் மழையில் மீண்டும் வீடு திரும்பினர்.

சென்னைப் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் பல பகுதிகள் நீரில் மிதக்கின்றன. பல பகுதிகளில் வீடுகளில் நீர் புகுந்துள்ளது. சில பகுதிகளில் மின் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன. பல இடங்களில் மரங்கள் சாய்ந்துள்ளன.

நேற்று அதிகாலை முதல் சென்னையில் விட்டு விட்டு மழை பெய்தது. இதனால் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதன்காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. தொடர்மழையின் காரணமாக சென்னையில் மாநகராட்சி, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை அறிவிக்கப்பட்டது.

வட சென்னை கணேசபுரம் ரயில்வே சுரங்கப்பாதையில் வழக்கம் போல் மழைநீர் குளம் போல் தேங்கி காணப்படுகிறது. இதனால் வியாசர்பாடி பகுதி உள்பட வடசென்னையே துண்டிக்கப்பட்ட பகுதியாக மாறியுள்ளது.

பெரம்பூரில் மழையின் காரணமாக நேற்று காலையில் கடும் போக்குவரத்து [^] நெரிசல் ஏற்பட்டது. வாகனங்கள் தண்ணீரில் மிதந்தபடியே வந்தன. சென்னை நகர் முழுவதும் மேடு பள்ள சாலைகளில் வெள்ள நீர் சூழ்ந்து காணப்பட்டதால் வாகன ஓட்டிகளுக்கு மிகப்பெரிய சிரமம் ஏற்பட்டது.

கண்ணதாசன் நகர் பஸ் நிலையம் முழுவதும் வெள்ளநீரால் சூழப்பட்டு குளம் போல் காட்சியளித்தது. இது தவிர வட சென்னையில் உள்ள மாநகராட்சி பூங்காக்கள், மாநகராட்சிகள் அனைத்தும் மழைநீரால் சூழப்பட்டு இருந்தது.

விருகம்பாக்கம் காந்திநகர், கொளத்தூர், வில்லிவாக்கம், அயனாவரம் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைநீர் தேக்கம் காணப்பட்டது. குடிசைப்பகுதிகளிலும் மழைநீர் சூழ்ந்ததால் பலர் வீட்டை விட்டு வெளியேறி பிளாட்பாரங்களில் தஞ்சம் அடைந்த காட்சிகளை பார்க்க முடிந்தது.

விருகம்பாக்கம் சின்மயாநகரில் கார் ஒன்றின் மீது மரக்கிளை விழுந்தது.

சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி, சேறும், சகதியுமாக காணப்பட்டது. கோடம்பாக்கம், தியாகராயநகர், வடபழனி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சாலைகளிலும், தாழ்வான பகுதிகளிலும் மழைநீர் குளம் போல் தேங்கி நின்றது.

சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை, மிïசியம் சாலை, புரசைவாக்கம், மோட்சம் தியேட்டர் அருகே உள்ள சாலை, ஓட்டேரி, பெரம்பூர் பேப்பர் மில்ஸ் சாலை வீனஸ் பகுதி ஆகிய இடங்களில் மழைநீர் தேக்கம் காணப்பட்டது.

சென்னை மெரினா கடற்கரையில் மழைநீர் ஆங்காங்கே தேங்கி குட்டி குளம் போல் காணப்பட்டது. இதில் சிறுவர்கள் குதித்து குதித்து விளையாடிய காட்சிகளை பார்க்க முடிந்தது. மழையின் காரணமாக மெரினா கடற்கரைக்கு பொது மக்கள் வரத்து குறைந்திருந்த போதிலும் காதலர்களின் வருகை அதிகமாகவே இருந்தது.

மெரினா கடற்கரையில் தேங்கியிருந்த மழைநீரில் பலர் தங்களது இரு சக்கர வாகனங்களை கழுவிய காட்சிகளை காண முடிந்தது.

மிதக்கும் வேளச்சேரி பகுதிகள்...

அடையார், திருவான்மிïர், பெசன்ட்நகர், வேளச்சேரி, தரமணி ஆகிய பகுதிகளிலும் மழைநீர் ஆங்காங்கே தேங்கி நின்றது.

வேளச்சேரி ரயில்நிலையம், அதனையொட்டிய பகுதிகள், இணைப்பு சாலை பகுதிகள் ஆகிய இடங்களில் மழைநீர் தேங்கிக் கிடக்கிறது. அவற்றை அகற்றும் பணியில், மாநகராட்சி ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர்.

ராமேஸ்வரம், புதுச்சேரியில் கடல் கொந்தளிப்பு...

புதுச்சேரியில் விடாமல் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. அத்தோடு கடல் கொந்தளிப்பும் காணப்படுகிறது. இதனால் அங்கு இயல்பு வாழ்க்கைப் பாதிக்கப்பட்டுள்ளது.

இதேபோல ராமேஸ்வரத்திலும் கடல் கொந்தளிப்புடன் காணப்படுகிறது. இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்குப் போகவில்லை.

ராமேஸ்வரம் கடல் கொந்தளிப்புடன் காணப்படுவதால் பாம்பன் ரயில் பாலத்தில் செல்லும் ரயில்கள் மிக மிக மெதுவாக ஊர்ந்து செல்கின்றன.

டெல்டா மாவட்டங்கள் ..

காவிரி டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் விவசாயிகள் மனம் குளிர்ந்துள்ளனர்.

நாகை மாவட்டத்தில் ஒரு இடங்களில் வாய்க்கால்களில் கரைபுரண்டு ஓடும் வெள்ளநீர் கரைகளை உடைத்து கொண்டு சம்பா சாகுபடி செய்துள்ள வயல்களுக்குள் புகுந்துள்ளது.

கடைமடை பகுதியான தலைஞாயிறு மற்றும் கீழையூர் ஒன்றிய பகுதியில் அரிச்சந்திரா ஆறு, வெள்ளையாறு, அடப்பாறு, நல்லாறு ஆகியவற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது.

நேற்று முன்தினம் இரவு முதல் நாகை மீனவர்கள் [^] கடலுக்கு மீன் பிடிக்க செல்லவில்லை. இதனால் நாகை துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் 500-க்கும் மேற்பட்ட விசைபடகுகள், பைபர் படகுகள் துறைமுகம் மற்றும் கடற்கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்களும், மீன்பிடி தொழில் சார்ந்த தொழிலாளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். சில சுனாமி குடியிருப்பு பகுதிகள் மழை நீரால் சூழப்பட்டுள்ளன.

உலர் மீன் தொழிலாளர்கள் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளனர். கருவாடு உற்பத்தி பாதிக்கப்பட்டு நாமக்கல் உள்ளிட்ட வெளிமாவட்டங்களுக்கு செய்யப்படும் ஏற்றுமதி முற்றிலும் பாதிக்கப்பட்டு ரூ.1 கோடிக்கு மேல் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.

ராமநாதபுரத்தில் ...

நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய 12 சென்டி மீட்டர் அளவுக்கு மழை கொட்டியது. பாம்பன், மண்டபம், பரமக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் கனமழை பெய்தது. ராமநாதபுரத்தில் நேற்று காலையும் அடைமழை தொடர்ந்தது.

ராமநாதபுரம் சுவார்ட்ஸ் மேல்நிலைப்பள்ளி அருகே நேற்று காலை சாலையோரம் உள்ள வேப்பமரம் அங்கு நிறுத்தப்பட்டிருந்த கார் மீது சாய்ந்தது. காரில் ஆட்கள் யாரும் இல்லாததால் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது. தொடரும் மழை காரணமாக ராமநாதபுரம் மாவட்டத்தில் நேற்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டது.

மதுரை நகரில் நேற்று முன்தினம் இரவு மழை கொட்டியது. சிவகங்கை மாவட்டத்திலும் நேற்று காலை 6 மணி வரை லேசான மழை பெய்தது. பகலில் மேகமூட்டமாக காணப்பட்டது.

சேலம் மாவட்டத்தில் நேற்று பரவலாக லேசான மழை பெய்தது. வேலூர் மாவட்டத்தில் வேலூர், ஆம்பூர், அரக்கோணத்தில் விட்டு, விட்டு மழை பெய்தது.

கோவை, நீலகிரி மாவட்டங்களில் நேற்று பரவலாக மழை பெய்தது.

இப்படி தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் நல்ல மழை பெய்து வரும் நிலையில், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மழை இல்லை.