குஜராத், மகாராஷ்டிரா மாநிலங்களில் கனமழை

அரபிக் கடலில் இருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை , தீவிர காற்றழுத்த மண்டலமாக மாறியுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி 12ம் தேதி குஜராத்துக்கும், கொங்கன் கடற்கரைக்கும் இடையே கரையைக் கடக்கும் .என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயல் சின்னம் தற்போது மங்களூருக்கு மேற்கே 470 கிலோமீ்ட்டர் தொலைவிலும், கோவாவுக்கு 470 கிலோமீட்டர் தொலைவிலும், மும்பைக்கு தெற்கு - தென் மேற்காக 700 கிலோமீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து புயலாக மாறி, வடக்கு - வட மேற்காக நகர்ந்து, நாளை ( நவம்பர் 12ம் தேதி ) அதிகாலை பொழுதில் தெற்கு குஜராத் - வடக்கு கொங்கன் கடற்கரைப் பகுதியில், மஹுவா மற்றும் தஹானு இடையே கரையைக் கடக்கும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இந்த புயலுக்கு பயான் என பெயரிடப்பட்டுள்ளது.

65 கி. மீட்டர் வேகத்தில் காற்று : இதன் காரணமாக குஜராத் , மகாராஷட்டிரா, ஆந்திர தெற்கு கடலோர பகுதிகள், கேரள கடற்கரையோர பகுதிகள், கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் மழை பெய்யும். குஜராத் பகுதியில் கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என அஞ்சப்படுகிறது. கேரளா, கர்நாடகா, கோவா, மகாராஷ்டிரா கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 55 முதல் 65 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும். கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிராவில் அடுத்த 48 மணி நேரத்திற்கு மிக பலத்த மழை பெய்யும். கடலோர கர்நாடகா, கேரளா, லட்சத்தீவு ஆகிய பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிக பலத்த மழையும், சில இடங்களில் பலத்த மழையும் பெய்யும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தமிழகத்தில் மேலும் 24 மணி நேரம் மழை: தமிழகம் மற்றும் புதுச்சேரியில் 24 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இது குறித்து நேற்று நிருபர்களுக்கு பேட்டியளித்த சென்னை வானிலை மைய இக்குநர் குழந்தைவேலு கூறுகையில் : தமிழகத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வந்த மழை இப்போது புயலாக உருமாறி குஜராத், மகாராஷட்டிரா உள்ளிட்ட மாநிலங்களை தாக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக பெய்த மழை காரணமாக தமிழகத்தில் இதுவரை 70 பேர் பலியாகியுள்ளனர் என்றார்.

0 comments: