வாகன நெரிசலை கருத்தில் கொண்டு சென்னை மயிலாப்பூர் லஸ் சாலையில் வரும் 28ந் தேதி முதல் போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது.
இது குறித்து சென்னை போக்குவரத்து போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்,
லஸ் சாலையில் ஏற்பட்டு வரும் போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு அங்கு சில போக்குவரத்து மாற்றங்கள் செய்யப்படுகிறது. இந்த மாற்றம் வரும் 28ந் தேதி (சனிக்கிழமை) காலை 7 மணி முதல் நடைமுறைக்கு வருகிறது. ஒரு மாத காலத்திற்கு மிகா வண்ணம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.
லஸ் சர்ச் சாலையானது, லஸ் சந்திப்பில் இருந்து ஆழ்வார்பேட்டை சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது. ராயப்பேட்டை நெடுஞ்சாலையானது, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, பி.எஸ்.சிவகாமி சாலையில் இருந்து லஸ் சந்திப்பை நோக்கி வாகனங்கள் செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
கற்பகாம்மாள் நகர் மற்றும் பி.எஸ்.சிவகாமி சாலையானது லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர் சந்திப்பில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை சந்திப்பு செல்லத்தக்க வகையில் ஒரு வழிப்பாதையாக மாற்றி அமைக்கப்படுகிறது.
இந்த மாற்றங்களின் விளைவாக லஸ் சந்திப்பை சுற்றியுள்ள சாலைகளில் கீழ்கண்டவாறு போக்குவரத்து மாற்றம் நடைமுறைப்படுத்தப்பட உள்ளது.இது வரை ஆர்.கே.மடம் சாலையல் இருந்து லஸ் சந்திப்பு வழியாக நேராக ராயப்பேட்டை நெடுஞ்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் லஸ் சந்திப்பில் இருந்து இடதுபுறம் திருப்பி லஸ் சர்ச் சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.
இதுவரை லஸ் அவென்யூ பகுதியில் இருந்து லஸ் சந்திப்பிற்கு, லஸ் சர்ச் சாலை வழியே சென்ற வாகனங்கள் இனிமேல் கற்பகாம்மாள்நகர், பி.எஸ்.சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.இதுவரை ஆழ்வார்பேட்டையில் இருந்து ஆலிவர் ரோடு, கற்பகாம்மாள்நகர் லஸ் சர்ச் சாலை வழியாக லஸ் சந்திப்பு சென்ற வாகனங்கள் இனி மேல் ஆலிவர்ரோடு, பி.எஸ்.சிவசாமி சாலை ராயப்பேட்டை நெடுஞ்சாலை வழியாக லஸ் சந்திப்பு செல்லலாம்.
இதுவரை நீலகிரீஸ் சந்திப்பில் இருந்து சிவசாமி சாலை, கற்பகாம்மாள்நகர் வழியாக லஸ் சர்ச்சாலை சென்ற வாகனங்கள் இனிமேல் சிவசாமி சாலை, ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பு வழியாக லஸ் சர்ச் சாலை செல்லலாம்.சாந்தோம் பகுதியில் இருந்து கச்சேரி சாலை வழியாக லஸ் சந்திப்பில் வலதுபுறம் திரும்பி ராயப்பேட்டை சென்ற வாகனங்கள் இனிமேல் கச்சேரி சாலை லஸ் சந்திப்பில் நேராக லஸ் சர்ச்சாலை, கற்பகாம்மாள் நகர், பி.எஸ்.சிவசாமி சாலை வழியாக ராயப்பேட்டை நெடுஞ்சாலை செல்லலாம்.
ராயப்பேட்டை நெடுஞ்சாலையில் இருந்து பி.எஸ்.சிவசாமி சாலை, கற்பகாம்மாள் நகர் வழியாக லஸ் சர்ச் சாலை சென்ற வாகனங்கள் இனி மேல் ராயப்பேட்டை நெடுஞ்சாலை, லஸ் சந்திப்பில் வலது புறம் திரும்பி லஸ் சார்ச் சாலை செல்லலாம் என்று கூறப்பட்டுள்ளது.
0 comments:
Post a Comment