மன்னார்குடியில் இலங்கை வாலிபர் கைது!

மன்னார்குடியில் இலங்கையைச் சேர்ந்த மர்ம நபர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அவனிடம் விசாரித்ததில் தனது பெயர் முகமது ரிபாக்(26) எனவும், தான் இலங்கையைச் சேர்ந்தவர் எனவும் தெரிவித்துள்ளார்.

இவர் கடந்த இரண்டு மாதங்களாக இப்பகுதியில் சுற்றி திரிந்துள்ளான். இப்பகுதியில் இருந்த சைக்கிள் கடையில் வாடகைக்கு சைக்கிள் எடுத்துச் சென்றுவிட்டு, திருப்பி விடுகையில் கடைக்காரர் பணம் கேட்டதற்கு, அவரை மிரட்டி உள்ளான்.
முகமது ரிபாக்கின் நடவடிக்கையில் சந்தேகம் வரவே, அப்பகுதியினர் ரிபாக்கை போலீசில் ஒப்படைத்துள்ளனர். அவனிடம் இருந்த பையை சோதனையிட்ட போது, அதில் 18 பெயர்களில் 18 விதமான கிரடிட் கார்டுகளும், 5 ரேஷன் கார்டுகளும், 2 அடையாள அட்டைகளும் இருந்துள்ளன.

ரிபாக் ஏதாவது பயங்கரவாத இயக்கத்தைச் சேர்ந்தவனா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சீமான் சென்னை திரும்பினார்

மரணம் அடைந்த விடுதலைப்புலிகளின் நினைவாக நேற்று மாவீரர் தினம் கடைபிடிக்கப்பட்டது. கனடாவில் நேற்று மாவீரர் தின நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் கலந்து கொண்டு பேசுவதற்காக டைரக்டர் சீமான் கனடா சென்றிருந்தார்.

இந்த நிகழ்ச்சிக்கு முந்தைய நாளில் இளைஞர் அமைப்பு ஒன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் டைரக்டர் சீமான் கலந்து கொண்டு பேசினார். அவர் சட்ட விரோதமாக பேசியதாக கூறி கனடா போலீசார் சீமானை கைது செய்தனர். அவரை குடியுரிமை அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை இந்தியாவுக்கு திருப்பி அனுப்பினார்கள். இன்று அதிகாலை டைரக்டர் சீமான் விமானம் மூலம் சென்னை திரும்பினார். விமான நிலையத்தில் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்கள் பிரபாகரன் படத்துடன் திரண்டனர். அவர்கள் ஈழத்துக்கு ஆதரவாகவும் இந்தியாவுக்கு எதிராகவும் கோஷம் போட்டனர்.


பிரபாகரனுக்கு ஆதரவாகவும் கோஷம் எழுப்பினார்கள். பின்னர் டைரக்டர் சீமான் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் மாவீரர் தினம் கொண்டாடப்படுகிறது. அதில் நான் எல்லா கூட்டங்களிலும் கலந்து கொண்டு பேசி வருகிறேன். இந்த ஆண்டு கனடாவில் மாவீரர் தின நிகழ்ச்சி நடந்தது. இதில் கலந்து கொள்ள கனடா சென்றிருந்தேன். கனடா நாட்டில் உள்ள ஒரு ஓட்டலில் நான் தங்கி இருந்தபோது அந்த நாட்டு போலீசார் எனது அறைக்கு வந்தனர். என்னை கைது செய்வதாக தெரிவித்தனர். மேலும் மாவீரர் தின கூட்டத்தில் நான் பேசக்கூடாது என்றும் உடனடியாக இந்தியா திரும்ப வேண்டும் என்றும் கூறி என்னை விமான நிலையத்துக்கு அழைத்து சென்றனர்.


விடுதலைப்புலிகளை கூண்டோடு அழித்துவிட்டதாக கூறிக் கொள்பவர்கள் மாவீரர் தின நிகழ்ச்சியை நடத்தவிடாமல் தடுப்பது ஏன்? இலங்கையில் இன்னும் தமிழர்கள் அவதிப்பட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் முள்வேலி முகாமில் மிகவும் துன்புறுத்தப்படுகிறார்கள். அவர்களை உடனடியாக முகாம்களில் இருந்து விடுவித்து சொந்த ஊர்களில் குடியமர்த்த வேண்டும். அதுவரை எங்கள் போராட்டம் ஓயாது. இவ்வாறு அவர் கூறினார்.

அதிக பெண்களுக்கு வேலை பெரிய நிறுவனங்கள் தயார்

சமூகத்தில் ஆண்&பெண் வேறுபாட்டை நீக்கும் முயற்சியாக, அதிக எண்ணிக்கையில் பெண்களை வேலைக்கு சேர்க்க பெரிய நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

குடும்ப சூழ்நிலை, உடல்நிலை பாதிப்புகள் காரணமாக பெண் ஊழியர்கள் அடிக்கடி விடுப்பு எடுக்கலாம் என்று கருதி பெண்களை வேலைக்கு சேர்க்க பெரிய நிறுவனங்கள் முன்பு தயக்கம் காட்டி வந்தன. அந்த நிலை இப்போது மாறி விட்டது. சமுதாயத்தில் ஆண்&பெண் பாகுபாட்டை நீக்கவும், அந்தஸ்தில் ஆணுக்கு நிகராக பெண்ணை உயர்த்தவும் தனியார் நிறுவனங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்படுகின்றன.

தகவல் தொழில்நுட்ப நிறுவனமான சிஎஸ்சி, வேலைக்கு பெண்ணை சிபாரிசு செய்யும் ஆண் ஊழியருக்கு சம்பள உயர்வை அறிவித்துள்ளது. பெண்களை தேர்வு செய்ய கல்லூரிகளில் கேம்பஸ் இன்டர்வியூ நடத்தவும் அது திட்டமிட்டுள்ளது.பெப்சி நிறுவன பெண் தலைமை அதிகாரியுமான இந்திரா நூயி கூறுகையில் ஒரு பெண், வேலைக்கு சேர்ந்த பிறகு சந்திக்கும் வருத்தங்கள், வேதனைகளுக்கு குறைவில்லை. அவர்களது துன்பங்களை அறிவேன். அதனால், எங்கள் நிறுவனத்தில் சிறந்த பணி சூழ்நிலையை உறுதி செய்துள்ளேன் என்றார்.

உற்பத்தி, கட்டமைப்புத் துறைகளில் காலம் காலமாக பெண் ஊழியர்கள் குறைந்த அளவே வேலை பெற்று வந்தனர். அந்த நிலை இப்போது மாறியுள்ளது. சில்லறை வர்த்தகம், உற்பத்தி நிறுவனங்களும் அதிகளவில் பெண்களை வேலைக்கு தேர்வு செய்கின்றன.

ரெனால்ட் &நிசான் கார் நிறுவன தலைமை அதிகாரி கார்லஸ் கோன் கூறுகையில், கார் டிசைன், கலர் தேர்வு செய்வதில் அதிக பெண் ஊழியர்களை பயன்படுத்துகிறோம். அவர்களின் திறமை ஆச்சரியம் அளிக்கிறது என்றார்.

வெளிநாடு வசூல் பாதிக்கும்

துபாயில் மிகப் பெரிய துபாய் வேர்ல்டு குழுமம் நிதி நெருக்கடியில் சிக்கியதால், இந்தி பட வசூல் பாதிக்கப்படும் என பாலிவுட் திரையுலகம் கலக்கம் அடைந்துள்ளது.

இந்தி திரைப்படங்களுக்கு உள்நாட்டுக்குப் பிறகு பாகிஸ்தான், வளைகுடா நாடுகளில் அதிக வரவேற்பு உள்ளது. அமெரிக்கா, இங்கிலாந்து அடுத்த இடம் வகிக்கின்றன. பாலிவுட் படங்களின் மொத்த வெளிநாட்டு வசூலில் வளைகுடா நாடுகள், அமெரிக்கா, இங்கிலாந்து மட்டும் 70 சதவீத பங்கு வகிக்கிறது. மொத்த வசூலில் வளைகுடா நாடுகள் மட்டும் 40 முதல் 45 சதவீத இடம் வகிக்கிறது.

ஷாரூக்கான், அமீர் கான், அமிதாபச்சன், அக்ஷய் குமார் ஆகிய டாப் ஹீரோக்கள் நடித்த படங்கள், வளைகுடா நாடுகளில் ரூ.35 கோடி முதல் ரூ.40 கோடி வசூலைக் குவிப்பது வழக்கம். எனவே, வளைகுடா நாடுகளில் படத்தை ரிலீஸ் செய்வது பாலிவுட் தயாரிப்பாளர்களுக்கு மிக முக்கியமாக உள்ளது. துபாயில் மட்டும் புதிய படங்கள் 40 முதல் 50 திரையரங்குகளில் வெளியிடப்படுகின்றன.

இப்போது நிதி நெருக்கடியால் பா, தே டனா டன், ரேடியோ, ராக்கெட் சிங் உட்பட ரிலீசுக்கு தயாராக உள்ள படங்களின் வெளியீடு தள்ளிப் போகும் எனத் தெரிகிறது.

கர்கரே அணிந்த புல்லட் புரூப் ஜாக்கெட் மாயம்

மும்பையில் கடந்த ஆண்டு தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியபோது துப்பாக்கி சண்டையில், மும்பை தீவிரவாத தடுப்பு படை தலைவர் ஹேமந்த் கர்கரே கொல்லப்பட்டார்.

அவர் அணிந்திருந்த புல்லட் புரூப் ஜாக்கெட் காணாமல் போனது. மாயமான புல்லட் புரூப் ஜாக்கெட்டை கண்டுபிடிக்கும்படியும், அது பற்றி விசாரிக்கும்படியும் போலீசுக்கு மாநில உள்துறை அமைச்சர் ஆர்.ஆர்.பாட்டீல் உத்தரவிட்டார்.

ரயில் தடம் புரண்டு 39 பேர் பரிதாப பலி

தண்டவாளத்தில் தீவிரவாதிகள் வைத்த குண்டு வெடித்ததில் அந்த வழியாக வந்த ரயில் சிக்கி நொறுங்கியது. 3 பெட்டிகள் பலத்த சேதம் அடைந்தன. இதில் 39 பயணிகள் உயிர் இழந்தனர்.

95 பேர் படுகாயம் அடைந்தனர். ரஷ்யாவில் இந்த கோரச் சம்பவம் நடந்துள்ளது. ரஷ்யாவில் மாஸ்கோவில் இருந்து செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் வரை செல்லும் நிவா எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று நவ்கோரட் பகுதியில் அடர்ந்த காடு வழியாக சென்று கொண்டிருந்தது.உக்லோவ்கா என்ற நகர் அருகே வந்தபோது தண்டவாளத்தில் வைக்கப்பட்டிருந்த வெடிகுண்டு டமார் என்ற சத்தத்துடன் பயங்கரமான வெடித்தது. இதில் 3 பெட்டிகள் தண்டவாளத்தில் இருந்து தூக்கி வீசப்பட்டன.

அடர்ந்த காடு என்பதால் உடனடியாக தொடர்பு கொள்ள முடியவில்லை. மீட்பு குழுவினர் செல்வதில் தாமதம் ஏற்பட்டது. மீட்பு குழுவினர் சென்றபோது பயணிகளின் உடல்கள் தண்டவாளத்தை விட்டு வெளியேயும், ரயில் பெட்டிகளுக்குள்ளும் சிதறிக் கிடந்தன.39 பயணிகள் உயிர் இழந்து இருப்பதாகவும். 95 பேர் படுகாயத்துடன் மீட்கப்பட்டதாகவும் ரஷ்ய நெருக்கடி கால அமைச்சர் ஷோய்கு கூறினார்.
தண்டவாளத்தில் குண்டு வெடித்ததற்கான தடயம் கிடைத்துள்ளது என்று ரஷ்ய ரயில்வே தலைவர் விலாடிமிர் யுகினின் கூறினார். இந்த சம்பவம் பற்றி முழு அளவில் விசாரணை நடத்துமாறு அதிபர் டிமித்ரி மேத்வதேவ் உத்தரவிட்டுள்ளார். நிவா எக்ஸ்பிரஸ் ஆடம்பர ரயில் ஆகும்.

புலிவேந்தலா தொகுதியில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டி

ஆந்திராவில் புலிவேந்தலா தொகுதியில் ராஜசேகர ரெட்டி மனைவி போட்டியிடுகிறார். 1ம் தேதி அவர் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.மறைந்த ஆந்திர முதல்வர் ராஜசேகர ரெட்டி, கடப்பா மாவட்டத்தில் உள்ள புலிவேந்தலா சட்டப்பேரவை தொகுதி உறுப்பினராக இருந்தார்.

இந்த தொகுதியில் வரும் 19ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. வேட்புமனு தாக்கலுக்கு வரும் 2ம் தேதி கடைசி நாள். இதில், ராஜசேகர ரெட்டியின் மனைவி விஜயலட்சுமியை போட்டியிடும்படி காங்கிரஸ் மேலிடம் கேட்டுக் கொண்டது. இதையடுத்து, புலிவேந்தலா ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் வரும் 1ம் தேதி அவர் மனு தாக்கல் செய்ய உள்ளார்.
இந்த தொகுதியில் பிரஜா ராஜ்யம் போட்டியிடாது என அந்த கட்சியின் தலைவர் சிரஞ்சீவி ஏற்கனவே அறிவித்துள்ளார். காங்கிரஸ் கேட்டுக் கொண்டால் போட்டியில் இருந்து விலகுவதாக தெலுங்கு தேசமும் கூறியுள்ளது.
ஆந்திராவில் சில ஆண்டுகளுக்கு முன்பு தெலுங்கு தேசம் ஆட்சியில் இருந்தபோது, அப்போதைய மக்களவை சபாநாயகர் பாலயோகி ஹெலிகாப்டர் விபத்தில் இறந்தார். இதையடுத்து காலியான அமலாபுரம் மக்களவை தொகுதியில் பாலயோகியின் மனைவி போட்டியிட்டபோது, தெலுங்கு தேசம் கேட்டுக் கொண்டதால் காங்கிரஸ் போட்டியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாசுகி முருகேசன் மறைவு,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,

கரூர் மாவட்ட திமுக செயலாளராக இருந்த வாசுகி முருகேசன்(46), நேற்று முன்தினம் கோவை சூலூர் அருகே கார் விபத்தில் இறந்தார். அவரது உடல், கரூர் அருகே உள்ள அவரது சொந்த ஊரான தளவாபளையத்திற்கு எடுத்து வரப்பட்டது.

பொது மக்கள் அஞ்சலிக்காக நேற்று அவரது வீட்டில், உடல் வைக்கப்பட்டது. காலை 9.30 மணிக்கு நிதி அமைச்சர் அன்பழகன், துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், சாந்தா ஸ்டாலின், கனிமொழி எம்.பி, மற்றும் ஆற்காடு வீராசாமி, வீரபாண்டி ஆறுமுகம் உள்பட அமைச்சர்களும், மத்திய அமைச்சர்கள் ஆ.ராசா, நெப்போலியன் உள்ளிட்டோரும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.

அப்போது வாசுகியின் கணவர் முருகேசன் மற்றும் குழந்தைகளை துணை முதல்வர் ஸ்டாலின் கட்டிப் பிடித்து கதறி அழுதார். இதை பார்த்து அங்கு திரண்டிருந்த திமுகவினரும் கதறி அழுதனர். பின்னர், வாசுகி முருகேசனின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு கிழக்கு தளவாபாளையத்தில் உள்ள காவிரியாற்றங்கரையில் 12.30 மணிக்கு தகனம் செய்யப்பட்டது.
அவரது மகன் விக்னேஷ்வரன் சிதைக்கு தீ மூட்டினார். தொடர்ந்து நடந்த இரங்கல் கூட்டத்தில், துணை முதல்வர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் பேசினர்.

பள்ளிகளில் நுழைவுத்தேர்வு கூடாது............

மெட்ரிக்குலேஷன் பள்ளிகள் இயக்குனர் மணி வெளியிட்டுள்ள அறிக்கை: மெட்ரிக். பள்ளிகளில் எல்கேஜி முதல் பிளஸ் 1 வரை 2010&11ம் கல்வி ஆண்டு முதல் மாணவர் சேர்க்கையின்போது கீழ்க்கண்ட நடைமுறைகளை பின்பற்ற அறிவுறுத்தப்படுகிறது: வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம், பள்ளி தகவல் பலகையில் மே மாதம் 2ம் வாரத்தில் அறிவிக்க வேண்டும்.

பிளஸ் 1, பிளஸ் 2 பாட தொகுதி வாரியாகவும், பயிற்று மொழி வாரியாகவும், இடங்களின் எண்ணிக்கையை தெரிவிக்க வேண்டும். வகுப்பு வாரியாக மாணவர் சேர்க்கை விவரம் மெட்ரிக். பள்ளி ஆய்வாளருக்கு அனுப்ப வேண்டும். மாணவர் சேர்க்கைக்கு விண்ணப்பம் வழங்குதல், பதிவு செய்தல் போன்ற பணிகளை மே 1ம் தேதி முதல் 15ம் தேதி வரை மேற்கொள்ளலாம். அனைவருக்கும் விண்ணப்பம் வழங்க வேண்டும்.

இதுகுறித்து பதிவேடு பராமரிக்க வேண்டும். மாணவர்களுக்கு நுழைவுத் தேர்வோ, பெற்றோர்களுக்கு நேர்முகத் தேர்வோ நடத்தக் கூடாது. எல்கேஜி முதல் 10ம் வகுப்பு வரை சேர்க்கை மே மாதம் 16ம் தேதி முதல் 30ம் தேதிக்குள் மேற்கொள்ளலாம். பிளஸ் 1 சேர்க்கைகள், 10ம் வகுப்பு தேர்வு முடிவு வெளியான 15 நாட்களுக்குள் நடைபெற வேண்டும். ஜூலை 31ம் தேதிக்கு பிறகு நடைபெறும் சிறப்பு சேர்க்கைகள் அரசு அறிவிக்கும் காலம் வரை மேற்கொள்ளலாம்.

மேல்நிலை பள்ளியில் 10ம் வகுப்பு தேர்ச்சி பெறும் மாணவர்களுக்கு, எக்காரணத்தாலும் பிளஸ் 1 சேர்க்கையை மறுக்க கூடாது. உள்ளூர் மாணவர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும்.

இடஒதுக்கீடு விதிகளை பின்பற்ற வேண்டும். சேர்க்கை முடிந்தவுடன் வகுப்பு வாரியாக சேர்க்கை செய்தோர் பட்டியலுடன் சேர்க்கை விண்ணப்பங்கள், சேர்க்கை நீக்கல் பதிவேடு ஆகிய ஆவணங்களை மெட்ரிக்பள்ளிகள் ஆய்வாளருக்கு அனுப்பி ஒப்புதல் பெற வேண்டும்.

எல்கேஜி, யூகேஜி வகுப்புகளுக்கு அனுமதி, அங்கீகாரம் வழங்க வழிகாட்டுதல்கள் வழங்கி அர சாணை வெளியிடப்பட்டுள்ளதால், தனியாக சேர்க்கை நீக்கல் பதிவேடு பராமரிக்க வேண்டும். 1&10, 11&12ம் வகுப்புகளுக்கு தனியாக சேர்க்கை நீக்கல் பதிவேடு பராமரித்து உரிய பதிவுகள் மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் குறித்த சுற்றறிக்கை அனைத்து மெட்ரிக். ஆய்வாளர்களுக்கும் அனுப்பப்பட்டுள்ளது.

வாஜ்பாயிக்கு தொடர்பில்லை !!!

கல்யாண்சிங் தனது அறிக்கையில் வாஜ்பாய் பெயர் இருப்பது சரியே என லிபரான் திட்டவட்டமாக அறிவித்துள்ளார். மேலும் நாட்டில் நடைபெற்ற பிரச்னைகளுக்கு அன்றைய தலைவர் வாஜ்பாயே பொறுப்பு எனவும் லிபரான் தெரிவித்துள்ளார்.

இதற்கு பாபர் மசூதி இடிப்பிற்கும் வாஜ்பாய்கும் எந்த தொடர்பும் இல்லை என பா.ஜ., முன்னாள் தலைவர் கல்யாண் சிங் மறுப்பு தெரிவித்துள்ளார் . மேலும் அரசியல் உள்நோக்கத்தின் காரணமாகவே லிபரான் அறிக்கையில் வாஜ்பாயின் பெயர் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் அவர் குற்றம் சாட்டி உள்ளார்.

கே‌ள்‌வி நேர‌ம் எ‌ன்றாலே அழ‌கி‌ரி மறை‌ந்து ‌விடு‌கிறா‌ர்

''நாடாளுமன்றத்தில் கேள்வி நேரம் என்றாலே மத்திய அமைச்சர் மு.க. அழகிரி மாயமாய் மறைந்து விடுகிறார்'' என்று அ.இ.அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக அவ‌ர் இ‌ன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், ''மத்திய ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சரும், முதலமைச்சரின் மகனுமான மு.க.அழகிரி மீண்டும் தனது துறை தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளிக்கும் சமயத்தில் நாடாளுமன்றத்தில் இல்லாதது குறித்து பத்திரிகைகளில் வந்துள்ள செய்தி மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது.

நாடாளுமன்றத்திற்கு வருகை தராததற்கு அழகிரி சொல்லும் காரணம் அவர் வகிக்கும் பொறுப்பான பதவியை அவமதிப்பதாக உள்ளது."தனிப்பட்ட முறையில் கலந்து கொள்ள வேண்டிய சொந்த நிகழ்ச்சி'' தன்னை நாடாளுமன்றத்தில் பங்கேற்க முடியாமல் செய்து விட்டது என்று அழகிரி தெரிவித்திருப்பதாக பத்திரிகைகளில் செய்தி வந்துள்ளது.

அந்த "தனிப்பட்ட நிகழ்ச்சி'' என்ன என்பதையும், எந்தவிதத்தில் அந்த சொந்த நிகழ்ச்சி நாடாளுமன்ற பணிகளில் கலந்து கொள்வதை விட முக்கியத்துவம் வாய்ந்தது என்பதையும் இந்த நாட்டிற்கு அழகிரி தெரிவிக்க வேண்டும்.நாடாளுமன்ற உறுப்பினராகவும், மத்திய அமைச்சராகவும் பணியாற்றுவதற்காகத் தான் லட்சக்கணக்கான மக்கள் அழகிரிக்கு வாக்களித்ததாகச் சொல்லப்படுகிறதே தவிர, தனிப்பட்ட சொந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக அல்ல. உண்மையிலேயே மக்களின் வாக்குகளை அழகிரி பெற்று இருப்பாரேயானால், வாக்களித்த மக்களுக்கு பதில் சொல்ல வேண்டிய பொறுப்பு அழகிரிக்கு இருக்கிறது."என்ன பெரிய கேள்வியை எதிர்க்கட்சியினர் கேட்டிருக்கிறார்களா?' என்றுஅழகிரி கேட்டிருப்பதாகவும் செய்திகள் வந்துள்ளன.

இதிலிருந்தே இந்திய நாட்டின் மிகப்பெரிய ஜனநாயக அமைப்பான நாடாளுமன்றத்தையும், எதிர்க்கட்சியினரையும் அழகிரி எந்த அளவுக்கு அவமதிக்கிறார் என்பது தெரிகிறது.எப்பொழுதெல்லாம் தனது துறை சம்பந்தமான கேள்விகள் கேட்கப்படுகின்றனவோ அப்பொழுதெல்லாம் தொடர்ந்து நாடாளுமன்றத்திலிருந்து மாயமாய் மறைந்துவிடுவதை அழகிரி வாடிக்கையாக வைத்திருப்பதால், இதை ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக கருத வேண்டுமே தவிர, ஏதோ ஒரு முறை நிகழ்ந்த நிகழ்வாகக் கருதி அப்படியே விட்டுவிட முடியாது.ரசாயனம் மற்றும் உரத்துறை தொடர்பான கேள்விகள் வரும்போதெல்லாம் மத்திய இணை அமைச்சர் ஸ்ரீகாந்த் ஜேனாவை களத்தில் இறக்க வேண்டிய சூழ்நிலைக்கு ஆளும் கூட்டணி தள்ளப்பட்டிருக்கிறது. இந்திய அரசமைப்புச் சட்டம் 120வது பிரிவின் கீழ் நாடாளுமன்றத்தின் ஆட்சி மொழிகளாக அங்கீகரிக்கப்பட்டு உள்ள இந்தி, ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் பேசுகின்ற திறமை அழகிரியினிடத்தில் இல்லாதது இதற்கு ஒரு முக்கியக் காரணம்.அழகிரியின் தந்தை கருணாநிதியோ தமிழ்மொழிக்கு "செம்மொழி'' தகுதியை தான் பெற்றுத் தந்ததாக தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கிறார்.

ஆனால், நாடாளுமன்றத்தில் தமிழ்மொழிக்கு இரண்டாம் தகுதிநிலை தரப்பட்டிருப்பது குறித்து கருணாநிதி அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை.அதேபோன்று, நாடாளுமன்றத்தில் தன்னுடைய மகனுக்கு மொழி முட்டுக்கட்டையாக இருப்பது குறித்தும் கருணாநிதி அக்கறை செலுத்துவதாக தெரியவில்லை என்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதிலிருந்து கருணாநிதியின் ஒரே நோக்கம், தனக்குத் தொல்லை தராதவாறு மாநில அரசியலிலிருந்து அழகிரியை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பது தெளிவாகிறது.

கருணாநிதியின் தன்னல நடவடிக்கை காரணமாக தங்களுடைய குறைகளை நாடாளுமன்றத்தில் சுட்டிக்காட்ட இயலாத ஒரு நாடாளுமன்ற உறுப்பினரை வைத்துக் கொள்ள வேண்டிய கட்டாயத்திற்கு மதுரை மக்கள் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

செயலற்ற ஒருவர் ரசாயனம் மற்றும் உரத்துறை அமைச்சராக இருப்பதை சகித்துக் கொள்ள வேண்டும் என்ற நிர்ப்பந்தம் இந்தியாவிற்கு ஏற்பட்டிருக்கிறது. இவை அனைத்தும் ஒரு குடும்பத்தில் அமைதி நிலவ வேண்டும் என்பதற்காக, எல்லாம் வல்ல இறைவன் இந்த நாட்டை காப்பாற்றுவாராக'' எ‌ன்று ஜெயல‌லிதா கூறியுள்ளார்.

இடை‌த்தே‌ர்த‌லி‌ல் பண‌ம்?

‌திரு‌ச்செ‌ந்தூ‌ர், வ‌ந்தவா‌சி ஆ‌கிய தொகு‌திக‌ளி‌ல் வா‌க்காள‌ர்களு‌க்கு பண‌ம் கொடு‌க்க‌ப்படுவதாக புகா‌ர் வ‌ந்து‌ள்ளதையடு‌த்து அவ‌ற்றை க‌ண்கா‌ணி‌த்து நடவடி‌க்கை எடு‌க்குமாறு தே‌‌ர்த‌ல் அ‌திகா‌ரிகளு‌‌க்கு தமிழக தலைமை தேர்தல் அதிகாரி நரேஷ்குப்தா உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளா‌ர்.

இது தொட‌ர்பாக திருவண்ணாமலை, தூத்துக்குடி மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு அவ‌ர் எழு‌தியு‌ள்ள கடித‌த்‌தி‌ல், திருமண மண்டபங்கள் மற்றும் பெரிய அரங்கங்களில் மக்களுக்கு பணம் வேஷ்டி, சேலை போன்ற பரிசு பொருட்கள், உணவு வினியோகம் செய்யப்படுவதாக கடந்த தேர்தலின் போது நிறைய புகார் வந்தது.இதை ஆரம்பத்திலேயே தடுக்க ஒவ்வொரு திருமண மண்டபங்களையும் அதிகாரிகள் கண்காணிக்க வேண்டும். என்னென்ன தேதியில் என்னென்ன நிகழ்ச்சி நடக்கிறது என்பதை விசாரித்து தெரிந்து கண்காணிக்க வேண்டும்.பிரசாரத்துக்காகவும், பண வினியோகத்துக்காகவும் மகளிர் சுய உதவிக்குழுவை பயன்படுத்துவதாக கடந்த தேர்தலில் புகார் வந்ததால் இந்த தேர்தலில் இப்புகார் வராத அளவுக்கு அதிகாரிகள் செயல்பட வேண்டும்.


பிரசாரத்துக்கு வரும் அரசியல் தலைவர்கள், வேட்பாளர்களுக்கு மக்கள் ஆரத்தி எடுக்கலாம் அது தவறில்லை. ஆனால் அதற்கு கைமாறாக பணம் அல்லது டோக்கன் வழங்கினால் அது குற்றமாகும்.
எனவே அதை தடுக்க வேண்டும்.பால் போடுபவர் அல்லது பேப்பர் பையன் மூலம் வீடு வீடாக பணம்- பரிசு பொருள் கொடுக்க ஏற்பாடு நடப்பதாகவும் ஒரு தகவல் கிடைத்துள்ளது. இதையும் முன்கூட்டியே கண்டறிந்து தடுக்க வேண்டும்.தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ் வேலை பார்ப்பவர்களுக்கு சம்பள பணத்துடன் கூடுதல் பணம் கொடுத்தால் அதை கண்டறிந்து தடுக்க வேண்டும்.தேர்தல் தினத்திலும், அதற்கு முந்தைய 3 நாட்களிலும் இந்த திட்டத்தின் கீழ் கூலி வழங்கப்படக்கூடாது.


அதற்கேற்ற வகையில் கூலி வழங்கும் தினத்தை மாற்றி அமைக்க வேண்டும் எ‌ன்று கடிதத்தில் நரேஷ்குப்தா கூறியுள்ளார்.

இள‌ங்கோவ‌ன் ‌‌வீடு ‌மீது கு‌ண்டு ‌வீ‌ச்சு

கா‌ங்‌கிர‌ஸ் க‌ட்‌சி‌யி‌ன் மூ‌த்த தலைவராக ஈ.‌வி.கே.எ‌ஸ்.இள‌ங்கோவ‌ன் ‌வீ‌டு ‌‌மீது பெ‌ட்ரோ‌ல் கு‌ண்டு ‌வீ‌‌‌‌சி தா‌க்குத‌ல் நட‌த்‌தியது தொட‌ர்பாக 3 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் கைது செ‌ய்து‌ள்ளன‌ர்.

மு‌ன்னா‌ள் ம‌த்‌திய அமை‌ச்‌ச‌‌ர் இள‌ங்கோவ‌‌ன் ‌வீ‌ட்டி‌ல் தா‌க்குத‌ல் நட‌த்‌தியவ‌ர்க‌ள் இய‌க்குன‌ர் ‌சீமா‌னி‌ன் 'நா‌ம் த‌மிழ‌ர்' இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்தவ‌ர்க‌ள் என காவ‌ல்துறை‌ ‌விசாரணை‌யி‌ல் தெ‌ரியவ‌ந்தது.இதையடு‌த்து அ‌ந்த இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த ‌மி‌த்ர‌ன், ம‌ணி, அரு‌ண் ஆ‌கியோரை கைது செ‌ய்‌திரு‌ப்பதாக காவ‌ல்துறை‌யின‌ர் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர். மேலு‌ம் அவ‌ர்‌க‌ளிட‌‌‌ம் இரு‌ந்து டா‌ட்டா சுமோ கா‌ர் ப‌றிமுத‌ல் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளது.

தா‌க்குத‌ல் தொட‌ர்பாக அ‌ந்த இய‌க்க‌த்தை சே‌ர்‌ந்த ‌விஜயகுமா‌ர் எ‌ன்பவ‌ர் உ‌ள்‌ளி‌ட்ட 5 பேரை காவ‌ல்துறை‌யின‌ர் தேடி வரு‌கி‌ன்றன‌ர்.

மசூதி இடிப்பு அறிக்கை வெளியீடு: லிபரான் மறுப்பு

பாபர் மசூதி இடிப்பு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் நீதிபதி எம்.எஸ். லிபரான் தலைமையிலான ஆணையத்தின் அறிக்கை பத்திரிகையில் வெளியானதால், மிகுந்த வருத்தத்தில் ஆழ்ந்த நீதிபதி லிபரான், அறிக்கையை பத்திரிகைகளுக்கு வெளியிடும் குணம் படைத்தவன் தான் அல்ல என்று குறிப்பிட்டுள்ளார்.
சண்டிகரில் தனது வீட்டில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், தனது அறிக்கை பத்திரிகைகளில் உள்ளதால் அதுகுறித்து தான் எதுவும் பேசப்போவதில்லை என்று கூறினார்.பத்திரிகைகளுக்கு அறிக்கையை கொடுத்தது யார் என்றும், எங்கிருந்து அவர்கள் அறிக்கையை பெற்றார்கள் என்றும் சம்பந்தப்பட்ட பத்திரிகைகளிடம் தான் கேட்டறிய வேண்டும் என்றார்.லிபரான் அறிக்கையை வேண்டுமென்றே மத்திய அரசு வெளியிட்டிருப்பதாக எதிர்க்கட்சிகள் குறைகூறுவது குறித்தும் கேட்டபோது, அவர் மிகுந்த எரிச்சல் அடைந்தார்.தனது குணாதிசயம் குறித்து சந்தேகப்பட வேண்டாம். நீங்கள் செல்லலாம் என்று செய்தியாளர்களைப் பார்த்து கோபத்துடன் கூறினார் லிபரான்.
லிபரான் அறிக்கை குறித்து ஊடகங்களுடன் பேசக்கூடிய நபர் தான் அல்ல என்றும், அதுபற்றி பேச விரும்பவில்லை என்றும் நீதிபதி லிபரான் தெரிவித்தார்.

காங்கிரசில் இணைகிறார் பால்தாக்ரே மருமகள் !

சிவசேனா கட்சித் தலைவர் பால் தாக்கரேவின் மருமகள் ஸ்மிதா தாக்கரே விரைவில் காங்கிரஸ் கட்சியில் இணைவார் என மராட்டிய காங்கிரஸ் கமிட்டியின் செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான ஹுசைன் தல்வாய் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பிடிஐ நிறுவனத்திற்கு ஹுசைன் தல்வாய் அளித்துள்ள பேட்டியில், “காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா எப்போது இணைவார் என்று என்னால் உறுதியாகக் கூற முடியாது. எனினும் காங்கிரஸில் இணைவதில் ஸ்மிதா உறுதியாக உள்ளார். காங்கிரஸ் கட்சியில் ஸ்மிதா இணைவதன் மூலம் சிவசேனாவில் பால் தாக்கரேவுக்கு பிறகு மக்களின் நம்பிக்கையைப் பெற்ற தலைவர் யாருமில்லை என்பது தெரிய வருகிறது” என்று கூறியுள்ளார்.

தற்போது 48 வயதாகும் ஸ்மிதா, மராட்டிய மக்களுக்கு சிவசேனா சரியான சேவையாற்றவில்லை எனக் கருதுவதாகவும், குறுகிய மனப்பான்மை கொண்ட சிவசேனாவின் கொள்கையில் அவருக்கு நம்பிக்கையில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஆஸ்கர் நாயகன் இசையில் ....

புகழ் பெற்ற கோவில்களுள் திருப்பதி ஏழுமலையான் கோவிலும் ஒன்று. ஏழுமலையானுக்கு காணிக்கையாக செலுத்தப்பட்ட நகைகளின் மதிப்பு பல ஆயிரம் கோடிகளை தாண்டி உள்ளது. இக்கோவில் பற்றி புகழ் பெற்ற இசையமைப்பாளர்கள், பாடகர்- பாடகிகள் பலர் பாடல்கள் பாடி உள்ளனர்.

பாடகி லதா மங்கேஷ்கர் சமீபத்தில் ஏழுமலையான் பற்றி 5 பாடல்கள் பாடி இருந்தார். இன்னும் அவர் 2 பாடல்கள் பாட வேண்டி உள்ளது. அதன் பிறகு அதை ஒரு ஆல்பமாக வெளியிட தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இந்நிலையில் பிரபல இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இசையில் ஏழுமலையான் பாடல்கள் தயாரிக்க முடிவு செய்துள்ளதாக தேவஸ்தான அறங்காவலர் குழு தலைவர் ஆதிகேசவலு நாயுடு தெரிவித்துள்ளார்.

அவர், இசை அமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் தமிழர் என்றாலும் அவர் மிகுந்த நாட்டுப்பற்று உடையவர்.அவரது இசையில் உருவான வந்தே மாதரம் பாடல் தேசிய ஒருமைப்பாட்டை கட்டிக்காக்கும் பாடலாக உருவெடுத்துள்ளது.
ஆஸ்கார் விருதுகளை வென்ற ஏ.ஆர். ரகுமானிடம் ஏழுமலையான் பக்தி பாடல்களுக்கு இசையமைத்து தரும்படி கேட்க உள்ளோம். விரைவில் அவர் இதற்கு ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கிறோம் என்று .தெரிவித்துள்ளார்.

முதலிரவில் மணமகன் தற்கொலை

சேலம் மணக்காடு பகுதியை சேர்ந்தவர் தாமோதரன் (29). சென்னை நந்தனத்தில் உள்ள வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றி வந்தார்.

இவருக்கும், சேலம் அஸ்தம்பட்டியை சேர்ந்த பூர்ணிமாவுக்கும் நேற்று காலை ஏற்காடு மலை அடிவாரத்தில் உள்ள கோயிலில் திருமணம் நடந்தது.

மணமக்கள் மணப்பெண் பூர்ணிமா வீட்டிற்கு அழைத்து செல்லப்பட்டனர். நேற்று இரவு அவர்களுக்கு முதலிரவு நடந்தது.

இன்று அதிகாலை மணப்பெண் எழுந்து பார்த்தார். அப்போது தாமோதரன் வீட்டில் உள்ள மின்விசிறியில் வேட்டியில் தூக்கில் தொங்கினார். இதைப்பார்த்து மணமகள் கதறினார்.

அவர் அறையை விட்டு வெளியே ஓடி வந்து உறவினர்களிடம் தெரிவித்தார். தாமோதரனின் உடலை பார்த்து அவர்கள் கதறி அழுதனர்.

பின்னர் அவர்கள் தாமோதரனின் உடலை மணமகன் வீட்டிற்கு எடுத்து சென்றனர். திருமணம் ஆன முதல் நாள் இரவில் தாமோதரன் ஏன் தற்கொலை செய்து கொண்டார்? என்று தெரியவில்லை. அவரது உறவினர்களிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மணமகன் தாமோதரன் செல்போனை அவரது உறவினர்கள் எடுத்து பார்த்தனர்.

அதில் ஐலவ் யூ பூர்ணிமா. ஐ ஏம் சாரி... என டைப் அடித்து வைக்கப்பட்டு இருந்தது. அனைவரின் கண்களிலும் கண்ணீரை வரவழைத்தது .

வைகோ வாழ்த்து ...

பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு ம.தி.மு.க சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ கூறியுள்ளார்.இது தொட‌ர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வா‌‌ழ்‌த்து‌ச் செ‌ய்‌தி‌யி‌ல்,

லட்சக்கணக்கான மக்களிடையே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை மக்களிடையே எந்வித பேதத்திற்கும் எள்ளவும் இடம் இல்லையென உலகிற்கு அறிவித்தது.

அதனை நினைவுகூரும் இப்பொன்னாளில் சமய நல்லிணக்கம் தழைக்கவும், சமூக ஒற்றுமை நிலைக்கவும் இஸ்லாமும் தமிழ்நெறியும் வலியுறுத்தும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வினைப் பேணி வளர்க்கவும் பாடுபடுவோம். இந்நாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் எ‌ன்று வைகோ கூ‌றியு‌ள்ளா‌ர்.

அதிமுக தேர்தலில் மோதல் .

நெல்லையில் நடந்த அ.தி.மு.க., உட்கட்சி தேர்தலில் உட்கட்சி மோதல் வெடித்தது . அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவுகிறது.

நெல்லை மாநகர மாவட்ட அ.தி.மு.க., செயலாளர் கோஷ்டியினருக்கும் எதிர் தரப்புக்கும் இடையே நடந்த மோதலில், தேர்தல் நடைபெறும் இடத்தில் இருந்த சேர்கள் வெளியில் தூக்கி எறியப்பட்டன. இதில் இரு தரப்புக்கும் இடை‌யே கடும் வாக்குவாதம் நடந்தது.
இதனால் அங்கு சற்று பரபரப்பான சூழல் நிலவியது .

மாவீரர் தினம் !

விடுதலைப் புலிகளின் மாவீரர் தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி இலங்கை கடந்த தமிழ் ஈழ அரசுக்கான செயற்குழுத் தலைவர் ருத்திரகுமாரன் அறிக்கை வெளியிட்டுள்ளதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
‘’தமிழ் ஈழப் போராட்டத்தில் உயிர்த் தியாகம் செய்த மாவீரர்களின் லட்சியத்தை நிறைவேற்ற தொடர்ந்து பாடுபடுவோம்.

மாவீரர்களின் தியாகமும், வீரமும் தமிழ் நெஞ்சங்களில் என்றும் நிலைத்து நிற்கும். நாடு கடந்த தமிழ் ஈழ அரசை வரும் புத்தாண்டில் உருவாக்கி, அதன் வழியே எங்கள் மாவீரர்களின் லட்சியங்களை நிறைவேற்ற, அவர்களது கனவுகளை நனவாக்க அனைவரும் உழைப்போம் என இந்நாளில் உறுதி எடுத்துக்கொள்வோம்’’என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஒபாமா கடிதம்....

சிங்கள அரசுக்கு எதிராகவும், விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாகவும் செயல்பட்டதாக இலங்கை பத்திரிக்கையாளர் திசநாயகம் ராஜபக்சே உத்தரவினால் கைது செய்யப்பட்டார்.

பலவேறு தரப்பினரும் அவரை விடுதலை செய்யக்கோரி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். கொஞ்சம் கூட ராஜபக்சே அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காததால் திசநாயகம் இன்றும் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார்.
இந்நிலையில் அமெரிக்க அதிபர் ஒபாமா அவரை விடுதலை செய்யக்கோரி இலங்கை அதிபர் ராஜபக்சேவுக்கு கடிதம் எழுதியுள்ளார்.

இது குறித்து இலங்கை செய்தியாளர்களிடம் ராஜபக்சே, ’’சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள ஊடகவியலாளர் திசநாயகத்தை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு கோரி அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கடிதம் அனுப்பியுள்ளார். திசநாயகத்தை தொடர்ந்து ஏன் தடுத்து வைத்துள்ளீர்கள் என்று அந்த கடிதத்தில் ஒபாமா கேள்வியெழுப்பியுள்ள்ளார்’’என்று தெரிவித்துள்ளார்.

மேலும் ராஜபக்சே, ‘’ஊடகங்கள் மீதான அடக்குமுறை குற்றச்சாட்டுக்கள் என்மீது சுமத்தப்படுகின்றன. குற்றவாளி என நீதிமன்றம் தீர்மானித்ததன் அடிப்படையில் திசநாயகத்திற்கு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக எத்தகைய நடவடிக்கைகளை எடுக்கலாம் என்பது குறித்து அரசு தலைமை வழக்கறிஞரிடம் நான் ஆலோசனை கோரியுள்ளேன்.

முன்பு ஒருமுறை என்மீது படுகொலை குற்றச்சாட்டு சுமத்தப்பட்டிருந்தது. ஆனால், நான் உரிய முறையில் வழக்கறிஞர் மூலம் வாதிட்டமையினால் அந்த குற்றச்சாட்டிலிருந்து விடுதலைப் பெற்றேன். எனக்கு எதிராக சாட்சியளித்தவர்கள் பொய் சாட்சி சொன்னமைக்காக சிறைத் தண்டனை அனுபவிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இதேபோல் திசநாயகமும் தனது தீர்ப்புக்கெதிராக மேல்முறையீடு செய்ய முடியும். அதன் மூலம் அவர் உரிய பரிகாரத்தை தேடிக்கொள்ளலாம். இதனை விடுத்து திசநாயகம் விவகாரத்தை வைத்து அரசியல் நடத்த எவரும் முனையக்கூடாது.
திசநாயகத்தை விடுவிக்குமாறு ஒபாமா மட்டுமே என்னிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நானாக இதற்கு நடவடிக்கை எடுத்தால் நீதிமன்றத்தை அவமதித்தாக அமைந்துவிடும்’’என்று தெரிவித்துள்ளார்.

இளையராஜாவுக்கு கேரள அமைச்சர் விடுத்த எச்சரிக்கை

மம்முட்டி-சரத்குமார் நடித்த பழசிராஜா படத்திற்கு மிகச்சிறப்பாக இசையமைத்துள்ளார் இளையராஜா. இது என் முதல் படமாக அமைந்திருக்கக்கூடாதா என்று இந்த படம் பற்றி ராஜாவே புகழ்ந்துதள்ளினார்.இப்படத்தின் பாடல்களும் பின்னணி இசையும் எல்லோராலும் பாரட்டப்பட்டுக்கொண்டிருக்கிறது. ஆனால் கேரள அமைச்சர் பேபி மட்டும் ராஜா மீது மன வருத்தத்தில் உள்ளார்.இதற்கு காரணம், சமீபத்தில் நடந்த பழசிராஜா படத்தின் நிகழ்வில் ராஜா பேசும் போது, ’’பழஸி ராஜா என்ற மலையாளப் படத்துக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். அந்தப் பாடல்கள் பெரும் வெற்றியடைந்துள்ளன.இதன் பாடல்கள் வெளியீட்டு விழாவில் இளையராஜா பங்கேற்றுப் பேசினார்.அப்போது படத்துக்கு பாடல் எழுதிய மலையாளக் கவிஞர் ஓ.என்.வி.குரூப், உணர்ச்சியற்ற வரிகளை எழுதித்தர, அதை அந்தப் படத்தின் தன்மைக்கேற்ப உணர்ச்சிப்பூர்வமாக தான் மாற்றியது குறித்து விவரித்தார்.இத்தனைக்கும் அவர் தவறாக அந்தக் கவின பற்றிச் சொல்லவில்லை. கவிஞர்கள் படத்தின் தன்மைக்கேற்ப பாடல்களை எழுத வேண்டும்’’ என்று கூறினார்.இது பற்றி அறிந்த கேரள மாநிலத்தின் அமைச்சர், ’’ஓ.என்.வி.குரூப்பும் பெரிய சாதனையாளர்தான். இதை மறந்துவிட்டாரா இளையராஜா?ஒருவேளை இளையராஜாவுக்கு மறதிநோய் இருக்கலாம். இதனால்அவர் பழசிராஜா பாடல்கள் குறித்து விமர்சனம் எழுப்பி இருக்கலாம். இது நல்லதல்ல...’’என்று தெரிவித்தார்.

மும்தாஜ் வேடத்தில் ஐஸ்வர்யா!

ராணி மும்தாஜ் வேடத்தில் நடிக்கிறார் முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய். பென் கிங்ஸ்லி ஹீரோவாக நடிக்கிறார்.


ஜோதா அக்பர் என்ற பெயரில் மாமன்னர் அக்பர் வாழ்க்கையின் ஒரு பகுதி படமாக்கப்பட்டு, அது உலக அளவில் பெரிதும் பேசப்பட்ட படமானது. இந்தப் படத்தில் அக்பரின் இந்து ராணி ஜோதாவாக நடித்து அந்தப் பாத்திரத்துக்கே உயிர் கொடுத்தார் ஐஸ்வர்யா ராய்.


அடுத்து மொகலாய சக்கரவர்த்தி ஷாஜகானின் வரலாறு இப்போது திரைவடிவம் பெறுகிறது. சரித்திரப்படி அக்பரின் பேரன்தான் இந்த ஷாஜகான். அவருக்கும் அவரது மனைவி மும்தாஜுக்கும் இடையிலான காதல் வாழ்க்கை சரித்திரப் பிரசித்தி பெற்றது. மனைவியின் மீதிருந்த அளவற்ற காதலைக் காட்டவே, தாஜ் மஹால் என்ற உலக திசயத்தை எழுப்பினார் ஷாஜகான்.


இந்தக் காதல்தான் மும்தாஜ் மஹால் என்னும் பெயரில் படமாகிறது.


ஹாலிவுட் நிறுவனம் பல கோடி ரூபாய் செலவில் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. இதில் ஷாஜகான் வேடத்தில் பிரபல ஹாலிவுட் நடிகர் பென் கிங்ஸ்லி நடிக்கிறார். இவர்தான் காந்தி படத்தில் மகாத்வாகவே வாழ்ந்தவர். அதற்காக ஆஸ்கர் விருதினையும் வென்றவர்.

பக்ரீத் கொண்டாட்டம்

துபாயில் இன்று தியாகத் திருநாள் எனப்படும் பக்ரீத் திருநாள் சிறப்பாக கொண்டாடப்பட்டது.


துபாய் உள்ளிட்ட அரபு நாடுகளில் இன்றே பக்ரீத் கொண்டாடப்பட்டது. இதையொட்டி காலை 7 மணிக்கு பள்ளிவாசல்களில் சிறப்புத் தொழுகைகள் நடத்தப்பட்டன. பல்வேறு நாட்டு முஸ்லீம் பெருமக்கள் இதில் கலந்து கொண்டனர்.


பின்னர் ஒருவருக்கு ஒருவர் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர்.


இதையடுத்து குர்பானி கொடுப்பது நடைபெற்றது. ஒட்டகங்கள், ஆடுகள், மாடுகள் ஆகியவை பலியிடப்பட்டன.


கேரளத்திலும் இன்று பக்ரீத் கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

கடன் நெருக்கடியில் துபாய்...

பெரும் கடனில் சிக்கித் தத்தளிக்கிறது துபாய். இதன் விளைவு, உலகம் முழுக்க எதிரொலிக்கத் துவங்கியுள்ளது.


சர்வதேச பங்குச் சந்தைகள் கடும் சரிவைச் சந்தித்துள்ளன.


துபாய் அரசுக்குச் சொந்தமான துபாய் வேர்ல்டு கார்ப்பரேஷனின் கடன் அளவு 80 பில்லியன் டாலர்களைத் தாண்டி நிற்கிறது. இந்தத் தொகை மற்றும் வட்டியை அந்த நாட்டால் உடனடியாகக் கட்ட முடியவில்லை. அடுத்த மே மாதம் வரை அவகாசம் வேண்டும் என சர்வதேச நாடுகளிடம் கேட்டுள்ளது துபாய்.


இந்தச் செய்தி பரவியதும் உலகப் பங்குச்சந்தைகள் ஆட்டம் காணத் துவங்கியுள்ளன. காரணம், சர்வதேச அளவில், அதுவும் செல்வம் கொழிக்கும் நாடு என வர்ணிக்கப்படும் துபாய்க்கு 80 பில்லியன் டாலர் என்பது சுமாரான தொகைதான்.


இந்தத் தொகை மற்றும் அதற்கான வட்டியைக்கூட கட்ட முடியாத மோசமான நிலையில் துபாய் அரசு இருக்கிறதா? என்ற கேள்வியின் விளைவு, துபாய்க்கு கடன் தந்துள்ளவர்களை துணுக்குற வைத்துவிட்டது.


இதனால் பங்குச் சந்தைகளில் முதலீட்டாளர்கள் தங்கள் பங்குகளை விற்கத் துவங்க, தடதடவென ஆரம்பித்துவிட்டது சரிவு.


சர்வதேச நாணயங்களின் மதிப்பிலும் மாற்றங்களை ஏற்படுத்தத் தொடங்கியுள்ளது இந்த துபாய் சரிவு.

ஜெட்டாவில் பெரும் வெள்ளம்

கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிக மோசமான வெள்ளப் பெருக்கு ஜெட்டாவில் ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி 77 பேர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் பெரும் தவிப்புக்குள்ளாகியுள்ளனர்.


வியாழக்கிழமை காலை முதல் ஜெட்டாவில் பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள் அனைத்தும் வெள்ளக்காடாகியுள்ளன. பல்வேறு பகுதிகள் கடல் போல வெள்ளம் ஓடிக் கொண்டிருக்கிறது.


மேலும் ஜெட்டாவுக்கு வரும் சாலைகள் அனைத்திலும் வெள்ளக் காடாக காணப்படுவதால் ஆயிரக்கணக்கான ஹஜ் யாத்ரீகர்கள் ஆங்காங்கு தவித்துக் கொண்டிருக்கின்றனர்.


ஜெட்டாவில் ஒரு வருடத்தில் மொத்தமே 2.76 இன்ச் மழைதான் பெய்யும். ஆனால் அந்த அளவு மழை ஒரே நாளில் பெய்து தீர்த்து விட்டது. இதனால்தான் பெரும் வெள்ளக்காடாகியுள்ளது ஜெட்டா.


பெரும் மழைக்கு ஜெட்டாவில் 73 பேரும், மெக்காவில் 4 பேரும் இறந்துள்ளனர். 900 பேர் மழை, வெள்ளத்திலிருந்து மீட்கப்பட்டனர்.


பெரும் மழை, வெள்ளம் காரணமாக ஏராளமான வீடுகள் சேதமடைந்துள்ளன. நூற்றுக்கணக்கான கார்கள் அடித்துச் செல்லப்பட்டன. ஜெட்டா நகரமே ஸ்தம்பித்துப் போயுள்ளது.


நெடுஞ்சாலைகளிலும் ஜெட்டா நகர சாலைகளிலும் வெள்ளம் தேங்கிக் கிடப்பதால் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. பல சாலைகள் சேதமடைந்துள்ளன. பாலங்கள், கட்டங்களும் சேதமடைந்துள்ளன.


புனித ஹஜ் யாத்திரைக்காக லட்சக்கணக்கான மக்கள் ஜெட்டாவில் குவிந்துள்ளனர். இவர்கள் அனைவரும் பெரும் சிரமத்திற்குள்ளாகியுள்ளனர்.


ஹரமெயின் நெடுஞ்சாலையில் உள்ள ஜாமியா பல்கலைக்கழக பாலம் சேதமடைந்துள்ளது. பாதி பாலம் உடைந்து விட்டது. இதையடுத்து இந்தப் பாலம் வழியாக போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ளது.


ஜெட்டாவுக்கு கிழக்கில் உள்ள அல் ரகமா, அல் அஜவித், அல் சமீர், அல் தெளபீக் ஆகியவையும் மழை வெள்ளத்தால் ஜெட்டாவிடமிருந்து துண்டிக்கப்பட்டுள்ளன.


மெக்கா, மெதீனா, ஜெட்டா ஆகிய நகரங்கள் , மேற்கு மாகாண நகரங்கள் ஆகியவற்றில் சில மணி நேரம் மின்சாரமும் துண்டிக்கப்பட்டதால் மக்கள் பேரவதிக்குள்ளானார்கள்.


ஜெட்டாவில் வெள்ளத்தில் சிக்கியுள்ளவர்களை மீட்க 120 மீட்புப் படையினர் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.


மேலும் தெருக்களில் தேங்கியுள்ள தண்ணீரை வெளியேற்ற 130 தண்ணீர் லாரிகள் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. 1000 ஊழியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.

முத்துக்குமரன் படத்துக்கு அஞ்சலி!

திருச்சி காந்தி மார்க்கெட் அருகில் உள்ள தாழ நல்லூரில் தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பின் சார்பில் மாவீரர் நாள் தினம் அனுசரிக்கப்பட்டது. தமிழின விடுதலைக்காக தமிழ்நாட்டில் தன்னுடலை தீயினால் பொசுக்கி உயிர் நீத்த தியாகி முத்துக்குமரனின் படம் மற்றும் போரில் உயிர் நீத்த விடுதலைப்புலிகளின் படங்களுக்கு அஞ்சலி செலுத்தினர். நிகழ்ச்சியில் வீர வணக்கம் வீர வணக்கம் என்று கோஷம் எழுப்பட்டது. தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் விடுதலை முன்னணி அமைப்பின் இளவழகன் தலைமையில் நடந்த இந்த நிகழ்ச்சியில் சுமார் 50 பேர் கலந்து கொண்டனர்.

தொழில் அதிபர் மீது டி.வி. நடிகை ஆர்த்தி புகார்!

கடந்த 2 வருடமாக தன்னை தொடர்ந்து தொல்லைக் கொடுத்து வருவதாக தொழில் அதிபர் பூதபாண்டி என்பவர் மீது டி.வி.நடிகை ஆர்த்தி போலீசில் புகார் கொடுத்துள்ளார்.

ஆனந்தம், கஸ்தூரி உள்ளிட்ட பல தொலைக்காட்சித் தொடர்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருப்பவர் நடிகை ஆர்த்தி (வயது 22). தற்போது சினிமாவில் கதாநாயகியாக நடித்து வருகிறார். போரூரில் வாடகை வீட்டில் வசிக்கும் இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட்டிடம் புகார் மனு ஒன்று கொடுத்தார்.


சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்தவர் பூபாண்டியன். இவரது மகன் சுகுமாரும், எனது தம்பி அரசும் நண்பர்கள். அந்த வகையில், எங்கள் குடும்ப நிகழ்ச்சிகளுக்கு பூபாண்டியனும் வருவார். 2 வருடங்களுக்கு முன்பு எனது வீட்டில் இருந்து காசோலை புத்தகத்தை எடுத்துச் சென்று விட்டார். எனது தாயார் தேவைக்கு என்று காசோலையில் கையெழுத்து போட்டு வைத்திருந்தேன்.

அதை பயன்படுத்தி நான் அவரிடம் ரூ.20 லட்சம் பணம் வாங்கியதாக அவராக பத்திரம் தயார் செய்து கொண்டார். அந்த காசோலைகளை ரூ.5 லட்சம், ரூ.3 லட்சம், ரூ.2 லட்சம் என்று வங்கியில் போட்டு பணம் எடுக்கவும் முயற்சித்தார். காசோலை திருடுப்போனதாக வங்கியில் தகவல் தெரிவித்ததால், அத்தனை காசோலையும் பணம் இல்லாமல் திரும்பி அனுப்பப்பட்டது.

நான் கடன் வாங்கி கொண்டு ஏமாற்றுவதாக பொய் புகார் செய்தார். இது சம்பந்தமான வழக்கு விசாரணை பூந்தமல்லி கோர்ட்டில் நடந்து வருகிறது. நான் எனது அம்மாவுடன் கோர்ட்டுக்கு செல்லும் போதெல்லாம் ரவுடிகளை விட்டு மிரட்டுகிறார். விடாமல் தொல்லை தருகிறார். ஒருமுறை எனது காரை சேதப்படுத்தினார்.

பின்னர் நாங்கள் வாடகைக்கு இருக்கும் வீட்டு உரிமையாளர்களை மிரட்டி காலி செய்ய வைக்கிறார். கடந்த 2 வருடத்தில் அவர் கொடுத்த தொல்லைகளாலும் மிரட்டலுக்கும் பயந்து இதுவரை 5 வீடுகள் காலி செய்து விட்டோம். தற்போது போரூரில் கடந்த 5 மாதமாக வசித்து வருகிறோம்.

தினந்தோறும் வெவ்வேறு நபர்களை அனுப்பி பூபாண்டியன் மிரட்டி வருகிறார். “நீ மகாராணி போல வாழ வேண்டியவள். நான் சொல்வது போல் அனுசரித்து போ. பெரிய கதாநாயகி ஆக்கி காட்டுகிறேன் என்றும் தொல்லை செய்கிறார். அவர் மீது கொடுத்த புகார்கள் மதுரவாயல் போலீஸ் நிலையத்தில் நிலுவையில் உள்ளது.

பூபாண்டியனின் தொடர் தொல்லைகளால் எனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. எனவே உரிய விசாரணை நடத்தி தீராத தொல்லை தரும் பூபாண்டியன் மற்றும் அவரது ரவுடிகளிடம் இருந்து எனக்கு பாதுகாப்பு தர வேண்டும் என்று கூறியுள்ளார்.

புகார் மனு மீது நடவடிக்கை எடுக்க திருவேற்காடு இன்ஸ்பெக்டர் துரைராஜனுக்கு போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் தொழில் அதிபர் பூபாண்டியனிடம் விசாரணை நடத்தி வருகின்றார்.

எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க ஆசை


எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க ஆசைப்படுவதாக நடிகர் சத்யராஜ் கூறினார். எனக்கு பிடித்த 10 நடிகர்களில் 1 முதல் 10வது இடம் வரை எம்.ஜி.ஆர். தான் உள்ளார். நான் மதிக்கும் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க வேண்டும் என்பது நீண்ட நாள் ஆசை. எல்லோரும், எல்லா வேடத்திலும் நடித்துவிட முடியாது ஆனால் எம்.ஜி.ஆர். வேடத்தில் நடிக்க எனக்கு ஆசை என்றும் சத்யராஜ் கூறினார்.

திமுகவுக்கு ஆதரவு: ஏ.சி.சண்முகம்

வந்தவாசி, திருச்செந்தூர் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுகவுக்கு நீதிக் கட்சி ஆதரவு அளிக்கும் என கட்சியின் நிறுவனர் ஏ.சி.சண்முகம் கூறினார்.


ஆரணியில் ஜவுளி பூங்காவை மத்திய அரசு ஏற்படுத்த வேண்டும். மத்திய அரசு நிர்ணயிக்கும் கொள்முதல் விலையைவிட கூடுதலாக விலை அளிக்க மாநில அரசு விரும்பினால் அதனை மாநில அரசுகளே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டத்தை திருத்தி புதிய மசோதா கொண்டுவர வேண்டும்.


நீதிக்கட்சியின் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் டிச.6 ல் ஆரணியில் நடக்கிறது. கூட்டத்தில் வந்தவாசி இடைத்தேர்தலில் கட்சியினர் பணி செய்வது குறித்து ஆலோசனை நடத்தப்படும்.


மீனவர்களின் வாழ்வாதாரத்துக்கு எதிரான மீன் பிடித் தொழிலுக்கு கொண்டு வந்த ஒழுங்குமுறை மற்றும் மேலாண்மை சட்டத்தை அமல்படுத்தக் கூடாது என்றார்.

குர்பானிக்கு ஒட்டகங்கள்

பக்ரீத் பண்டிகையை யொட்டி, ராஜஸ்தானிலிருந்து தாம்பரத்திற்கு இரண்டு ஒட்டகங்கள், குர்பானிக்காக கொண்டு வரப்பட்டுள்ளன.

பக்ரீத் பண்டிகையை யொட்டி, மனித நேய மக்கள் கட்சியின் மாவட்ட செயலர் யாக்கூப் ஏற் பாட்டின் கீழ், காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு ராஜஸ் தானிலிருந்து 27 ஒட்டகங்கள் கொண்டு வரப்பட் டுள்ளன. இவற்றில் இரண்டு ஒட்டகங்கள் தாம்பரத் திற்கு லாரி மூலம் வந்து சேர்ந்தன.

இந்த ஒட்டகங் கள் ஒவ்வொன்றும் தலா 40 ஆயிரம் ரூபாய். மதுரையிலிருந்து ஆடுகள் வந்தன: பக்ரீத் பண்டிகையை ஒட்டி, "குர்பானி' கொடுப் பதற்காக மதுரையிலிருந்து வண்ண வண்ண செம்மறி ஆடுகள் சென்னைக்கு வந்தன.

பக்ரீத் பண்டிகைக்காக ஆண்டு தோறும் ஆந்திரா, வேலூர் ஆகிய பகுதிகளில் இருந்து சென்னைக்கு அதிக அளவில் செம்மறி மற்றும் வெள்ளாடுகள் விற்பனைக்கு வருவது வழக்கம்.

இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் பெய்த பலத்த மழை, வெள்ள பாதிப்பு காரணமாக, மேற்கண்ட பகுதிகளில் இருந்து ஆடுகளின் வரத்து குறைந்தது. இந்த ஆண்டு, மதுரை கொட்டாம்பட்டி சுற்று வட்டாரப் பகுதிகளில் இருந்து, ரோமங்களில் வண்ணம் பூசிய செம்மறி ஆடுகள் சென்னைக்கு கொண்டு வரப்பட்டன.

அவை மாதவரம் ரவுண் டானா பாலம் அருகே விற்பனை செய்யப்பட்டன. 15 முதல் 18 கிலோ வரை எடை கொண்ட ஒவ்வொரு ஆடும், 6,000 ரூபாய் முதல் 8,000 ரூபாய் வரை விற்கப்பட்டது. சென்னையின் சுற்று வட்டாரப்பகுதிகளில் இருந்து பலரும் வந்து வாங்கிச் சென்றனர்.

வீட்டு வசதி வாரிய நிலத்தில் கட்டப்பட்ட வீடுகள் இடிப்பு

கடந்த 2003ம் ஆண்டில், நெல்லை மாவட்டம், பாளையங்கோட்டை கே.டி.சி.நகர் அருகே கீழநத்தம் பகுதியில் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் 50 ஏக்கர் நிலம் கையகப்படுத்தப்பட்டது.

அங்கு ஓய்வு பெற்ற எஸ்.ஐ தங்கபெருமாள், அரசு டிரைவர் வடிவேல், வருவாய் ஆய்வாளர் முத்துசாமி உட்பட 8 பேர் வீடு கட்டி வசித்தனர். வீடுகளை காலி செய்யுமாறு வீட்டுவசதி வாரியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. இதற்கு ஐகோர்ட்டில் தடை உத்தரவு பெற்றனர்.

பின்னர் அந்த தடை நீக்கப்பட்டது.இதையடுத்து, வீடுகளை இடிப்பதற்காக நேற்று முன்தினம் வீட்டு வசதி வாரிய செயற்பொறியாளர் நடேசன் உள்ளிட்ட அதிகாரிகள், ஜேசிபி இயந்திரத்துடன் அங்கு சென்றனர். அவர்களை அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் திரும்பிச் சென்றனர். இந்நிலையில், நேற்று காலையில், நடேசன், ஆர்.டி.ஓ. தமிழ்செல்வி உள்ளிட்டோர் போலீசாருடன் அங்கு வந்தனர்.

அப்போது, ஜேசிபி இயந்திரம் முன்பு மக்கள் படுத்து மறியல் செய்தனர்.போலீசார் எச்சரித்தும் அவர்கள் கலையாததால், தடியடி நடத்தி விரட்டினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர், ஜேசிபி இயந்திரம் மூலம் வீடுகள் இடிக்கப்பட்டன.

அங்கு பதற்றம் நிலவுவதால் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். தற்கொலை முயற்சிடிரைவர் வடிவேல் மனைவி விமலா, ஜேசிபி இயந்திரம் முன்பு படுத்து தனது வீட்டை இடிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தார். ஆனால், அதிகாரிகள் வீட்டை இடிக்கமுயன்றனர். உடனே, வீட்டுக்குள் சென்ற விமலா, மின் விசிறியில் தூக்கு போட்டு கொள்ள முயன்றார்.

போலீசார், வீட்டு கதவை உடைத்து விமலாவை காப்பாற்றினர். மயங்கி விழுந்த அவரை ஆம்புலன்ஸ் மூலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

சீமான் வெளிநாடுகள் செல்ல தடை வருமா?

மாவீரர் தினமான இன்று (நவம்பர் 27) உலகின் பல்வேறு நாடுகளில் நடைபெறும் விடுதலைப் புலிகளின் மாவீரர் தின நிகழ்ச்சியில் தமிழின உணர்வாளர்கள் கலந்து கொண்டு உரையாற்றவிருக்கிறார்கள்.


அந்த வகையில் கனடாவில் நடைபெறும் மாவீரர் தின நிகழ்ச்சியில் விடுதலைப்புலிகளின் தீவிர ஆதரவாளரான சிறப்பு பேச்சாளராக நாம் தமிழர் இயக்கத் தலைவரும், இயக்குனருமான சீமான் அழைக்கப்பட்டிருந்தார்.


அழைப்பை ஏற்று கடந்த 25ஆம் தேதி கனடா ஸ்காப்ரோவில் நடைபெற்ற மாவீரர் தின நிகழ்ந்ச்சியில் சீமான் மிகவும் உணர்ச்சிபூர்வமாக பேசினார்.


இந்தக் கூட்டத்தில் சீமான் பேச்சு அரங்கம் முழுவதும் திரண்டு இருந்த தமிழர்களை கவர்ந்தது. கூட்டம் நடந்த மறுநாளான 26ஆம் தேதி காலை கனடாவில் உள்ள டொரொண்டாவில் அந்நாட்டு சட்டத்துக்கு புறம்பாக பேசியதாக திரைப்பட இயக்குநர் சீமான் கைது செய்யப்பட்டார். மேலும் கைது செய்யப்பட்ட சீமானை இந்தியாவுக்கு அனுப்ப அந்நாட்டு அரசு நடவடிக்கை எடுத்தது.


இந்நிலையில் அழைப்பின் பேரில், பிரபாகரன் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் ஆகியவற்றில் பங்குபற்றுவதற்காக கனடா சென்ற சீமான் கனடா போலீசாரால் விசாரணைக்கு அழைத்துச் செல்லப்பட்ட பின், டொரொண்டா விமான நிலையத்திலிருந்து தாமாகவே விரும்பி தமிழ்நாடு திரும்பியுள்ளார். சென்னை விமான நிலைத்தில் சீமானின் ஆதரவாளர்கள் அவரை வரவேற்க தயாராக உள்ளனர்.


கனடா போலீசார் சீமானை தமிழகத்துக்கு திருப்பி அனுப்பியதையடுத்து, இனி சீமான் வெளிநாடுகளுக்கு போக முடியாத சூழ்நிலை ஏற்பட்டள்ளதாக தெரிகிறது.


இனி அவர் இந்தியாவில் இருந்து வெளிநாடுகள் செல்லும்போது, இந்திய பாஸ்போர்ட் அதிகாரிகள் சோதனையில் அவர் கனடா போலீசாரால் திருப்பி அனுப்பட்டதை சுட்டிக் காட்டப்பட்டு அவரது பயணம் தடைபடக் கூடும் என்றும் செய்திகள் வெளியாகி உள்ளன

காமராஜர் பல்கலையில் மலேசிய இலக்கியத் தமிழாய்வு மையம்

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இந்தாண்டுக்குள் மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் அமைக்கப்படும் என்று பல்கலைக்கழக துணைவேந்தர் இரா. கற்பககுமாரவேல் தெரிவித்தார்.


காமராஜர் பல்கலைக்கழகம் சார்பில் நடந்த மலேசிய தமிழாசிரியர்களுக்கான பயிலரங்கு துவக்க விழாவில் துணைவேந்தர் கற்பககுமாரவேல் பேசுகையில்,


'தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களுக்கு மலேசியா, சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் உள்ள தமிழ் இலக்கியங்களை முழுவதும் தெரிந்துகொள்ள வாய்ப்பில்லாத நிலை உள்ளது. குறிப்பாக, மலேசியத் தமிழ் இலக்கியத்தைப் பற்றி நம் தமிழர்களும், மாணவர்களும் அறிந்துகொள்ள வேண்டும்.


எனவே இதற்காக மலேசிய இலக்கியத் தமிழ் ஆய்வு மையம் ஒன்றை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த ஆண்டிலேயே, ஆய்வுமையம் நிறுவப்படும் வாய்ப்புள்ளது' என்றார்.


விழாவில், குன்றக்குடி தவத்திரு பொன்னம்பல அடிகளார், மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கத் தலைவர் பெ.ராஜேந்திரன், மலேசியத் தமிழாசிரியர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

செலவு ரூ.31 கோடி

மும்பை தாக்குதல் தீவிரவாதி அஜ்மல் கசாபை உயிருடன் பாதுகாக்க கடந்த ஒரு ஆண்டில் மகாராஷ்டிர அரசு ரூ.31 கோடி செலவு செய்துள்ளது. மும்பை தாக்குதல் சம்பவத்தில் பிடிபட்ட கசாபை பாதுகாக்க மும்பை ஆர்தர் சாலையில் உள்ள சிறையில் சிறப்பு அறை கட்டப்பட்டது. இதற்கு மிகப் பெரும் தொகை செலவிடப்பட்டது.

வெடிகுண்டு லாரி மோதினாலும் சேதமடையாத வகையில் அறை உருவாக்கப்பட்டது. கசாபுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டால் அவனுக்கு சிகிச்சை அளிக்கும் வகையில் ஜே.ஜே. மருத்துவமனையிலும் பாதுகாப்பு அறை கட்டப்பட்டது. குண்டு துளைக்காத இந்த அறை கட்ட ரூ.1 கோடி செலவானது.

ஆனால், இதுவரை கசாப் இங்கு ஒருநாள்கூட தங்கியதில்லை. அவன் உடல்நிலை பாதிக்கும்போது சிறைக்கே டாக்டர்களை வரவழைத்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுவரை 24 டாக்டர்கள் அவனுக்கு சிகிச்சை அளித்துள்ளனர்.

இதன்மூலம், தீவிரவாதி கசாபுக்காக மொத்தம் ரூ.31 கோடி செலவிடப்பட்டுள்ளது.கடந்த மே மாதம் தொடங்கிய கசாப் மீதான வழக்கு விசாரணை இன்னும் முடியவில்லை. இது முடிய இன்னும் 2 அல்லது 3 மாதங்கள் ஆகும் என அரசு வக்கீல் உஜ்வல் நிகாம் தெரிவித்துள்ளார்.

முதல்வர் சவான் சூளுரை: மும்பை தீவிரவாத தாக்குதல், மும்பை புறநகர் ரயில்களில் 2006ல் நடத்தப்பட்ட தொடர் வெடிகுண்டு தாக்குதலில் பலியானவர்களுக்கு இந்திய வர்த்தக சம்மேளனம் சார்பில் தெற்கு மும்பை சர்ச்கேட்டில் நினைவகம் கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல்லை முதல்வர் அசோக் சவான் நாட்டினார்.அப்போது, ‘‘மகாராஷ்டிராவில் இனிமேல் எப்படிப்பட்ட தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டாலும் அதை முறியடிக்க முழு அளவில் தயாராக உள்ளோம்.

இதற்கான நம்பிக்கையை மக்களிடம் ஏற்படுத்துவதற்காக டிரைடென்ட் ஓட்டலில் இருந்து கிர்காவ் சவுப்பாத்தி வரை கொடி அணிவகுப்பு நடத்தப்பட்டது. இதில், மாநில அரசு புதிதாக உருவாக்கியுள்ள ‘போர்ஸ் ஒன்’ படை கமாண்டோக்களும், தேசிய பாதுகாப்பு படை கமாண்டோக்களும் பங்கேற்றனர்’’ என்றார்

டிசம்பர் 6ல் ரயில் மறியல்: இந்து முன்னணி

முக்கிய நகரங்களில் டிசம்பர் 6ல் காவிக்கொடி ஏந்திக்கொண்டு இந்து முன்னணியினர் ரயில் மறியல் செய்ய இருப்பதாக மாநில அமைப்பாளர் முருகானந்தம் தெரிவித்தார்.


பாபர் மசூதி இடிப்பு வழக்கு சுப்ரீம் கோர்ட்டில் நடக்கிறது. இதன் தீர்ப்பு தாமதம் ஆவதற்கு காங்., ஆட்சி தான் காரணம். டிசம்பர் 6ல் தமிழகத்தில் போலீசாரால் ஏக கெடுபிடி நடக்கிறது. இதனால் பொதுமக்கள் மிகுந்த சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர்.


டிசம்பர் 6 அன்று இந்து முன்னணி சார்பில் காவிக்கொடி ஏந்திக்கொண்டு முக்கிய நகரங்களில் ரயில் மறியலும், பிற ஊர்களில் ஆர்ப்பாட்டம் செய்ய இருக்கிறோம். லிபரான் கமிஷன் அறிக்கை வெளியானது மத்திய அரசின் கையாலாகதனத்தை காட்டுகிறது. இதற்கு பொறுப்பான அமைச்சர் ப.சிதம்பரம் பதவி விலக வேண்டும். ராமேஸ்வரம் கோயிலில் ஸ்படிகலிங்க பூஜைக்குரிய கட்டணத்தை நீக்க வேண்டும். இல்லையென்றால் பக்தர்களை திரட்டி, கோயிலுக்குள் நுழைந்து நாங்களே பூஜை செய்து கொள்வோம். கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன் பிடிக்கும் உரிமையை அரசு ஏற்படுத்தி தரவேண்டும் என்றார்.

கடித்த குதிரை அடித்துக் கொலை

ஈரோடு மாவட்டம், கோபி பஸ் நிலையத்தில் நேற்று காலை 11 மணியளவில் வெறிபிடித்த நிலையில் திரிந்த பெண் குதிரை, திடீரென மக்களை விரட்டி கடித்தது. பலர் காயமடைந்தனர். மக்கள் அலறி ஓடினர்.

அங்கும் இங்கும் ஓடிய குதிரை அப்பகுதியில் இருந்த பூக்கடைகளை சேதப்படுத்தியது. இதனால் ஆத்திரமடைந்த கடைக்காரர்களும், அப்பகுதியில் இருந்தவர்களும் தடி, கற்களால் குதிரையை விரட்டினர்.

பஸ்நிலையத்தில் இருந்து வெளியேறிய குதிரை, சாலையில் நடந்து சென்றவர்களையும், பைக்கில் சென்றவர்களையும் விரட்டி கடித்தது. இதில் சுமார் 50 பேர் வரை காயமடைந்தனர். அப்போது சில ஆட்டோ டிரைவர்கள் நீண்ட கயிறுகளை எடுத்து வந்து குதிரையின் கழுத்து, கால்களில் கயிற்றை வீசி குதிரையை கீழே சாய்த்தனர். பின்னர், எல்லோரும் தடிகளால் சரமாரியாக குதிரையை அடித்தனர். இதில் குதிரை இறந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடியிருப்பு பகுதிகளில் விலங்குகள் புகுந்து அட்டகாசம் செய்யும் போது, வனத்துறைக்கு தகவல் கொடுப்பதே வழக்கம்.
புளூகிராஸ் அமைப்புகளுக்கு தொடர்பு கொண்டால் கூட, அவர்களே போலீசாருக்கும், வனத்துறைக்கும் தகவல் கொடுத்து வரவழைப்பார்கள். அப்படி செய்யாமல், மக்களே குதிரையை அடித்து கொன்றதை பார்க்கவே பரிதாபமாக இருந்தது.

அமைச்சர் கோ.சி. மணி மகன் காலமானார்

தமிழக கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ.சி. மணியின் மூத்த மகன் மதியழகன் இன்று காலமானார்.
51 வயதான மதியழகன், உடல் நலம் சரியில்லாமல் நீண்ட நாட்களாக சென்னையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை மதியழகன் காலமானார்.
தஞ்சாவூர் மாவட்டம் குத்தாலம் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவராக உள்ள மதியழகனுக்கு, கஸ்தூரி என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இறுதிச் சடங்குகள் சொந்த ஊரில் நாளை நடைபெறுகிறது.

விமான நிலையத்தில் வெடிகுண்டு?

சென்னை விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு போன் செய்த மர்ம ஆசாமி விமான நிலையத்தில் வெடிகுண்டுகள் வெடிக்கும்' என கூறி போனை துண்டித்துவிட்டான். விமான நிலையத்தின் அனைத்து பகுதிகளிலும் மோப்ப நாய்களுடன் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனையில் ஈடுபட்டனர்.

விமானத்தில் செல்லும் பயணிகளும் பலத்த சோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டனர். சுமார் 2 மணி நேர சோதனைக்கு பின் வெடிகுண்டு எதுவும் இல்லை என கண்டுபிடிக்கப்பட்டது. போனில் பேசிய அந்த ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மும்பை நகரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதில் நூற்றுக்கணக்கானோர் பலியானார்கள். இன்று அதெ நாள் என்பதால் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தக்கூடும் என்று உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனால் சென்னை விமான நிலையத்தில் ஏற்கனவே பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

காவல‌ர் ப‌ணி‌க்கு உட‌ல்‌திற‌ன் தே‌ர்வு

இர‌ண்டா‌ம் ‌நிலை காவல‌ர்களு‌க்கான உட‌ல்‌திற‌ன் தே‌ர்வு டிச‌ம்ப‌ர் 10ஆ‌ம் தே‌தி 15 மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல் நடைபெறு‌கிறது எ‌ன்று தமிழ்நாடசீருடபணியாளரதேர்வாணையம் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.


இது தொட‌ர்பாக தமிழ்நாட
சீருடபணியாளரதேர்வாணையம் வெ‌ளிய‌ி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், 2009ஆ‌ம் ஆ‌ண்டி‌ற்கான 4 ஆ‌யிர‌ம் இர‌ண்டா‌ம் ‌நிலை ஆ‌ண், பெ‌ண் காவல‌ர்க‌‌‌ள் தே‌ர்வு‌க்கான எழு‌த்து‌த்தே‌ர்‌வி‌ல் தே‌ர்‌ச்‌சி பெ‌ற்றவ‌ர்க‌ளி‌ன் அச‌ல் சா‌ன்‌றித‌ழ்க‌ள் ச‌ரிபா‌ர்‌த்த‌ல், உட‌ல் தா‌ங்கு‌ம் ‌திறன‌றி‌த்தே‌‌ர்வு ம‌ற்று‌ம் உட‌ல் ‌திற‌ன் தே‌ர்வு ஆ‌‌கியவை டிச‌ம்ப‌ர் 10ஆ‌ம் தே‌தி முத‌ல் 15 மாவ‌ட்ட‌ங்‌க‌ளி‌ல் நடைபெறு‌கிறது.


இ‌தி‌ல் தூ‌‌த்து‌க்குடி மாவ‌ட்டமு‌ம் ஒ‌ன்று. ‌ஆனா‌ல் ‌சில‌ ‌‌நி‌ர்வாக காரண‌த்‌தினா‌ல் தூ‌த்து‌க்குடி‌க்கு ப‌திலாக நாக‌ர்கோ‌யி‌லி‌ல், தூ‌த்து‌க்குடி, க‌ன்‌னியாகும‌ரி மாவ‌ட்ட‌ங்களை சே‌ர்‌ந்தவ‌ர்களு‌க்கு இ‌த்தே‌ர்வு நடைபெறு‌ம் எ‌ன்று‌ கூற‌ப்ப‌ட்டு‌ள்ளது.

கில்லி.. இந்தியில் பிரபுதேவா ரீமேக்!

விஜய் நடித்து பெரும் வெற்றி பெற்ற கில்லி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார் பிரபு தேவா. ரீமேக் கிங் என்ற பட்டம் ஜெயம் ராஜாவுக்குப் பிறகு, இன்றைய தேதிக்கு பிரபு தேவாவுக்குதான் சரியாகப் பொருந்தும். தமிழ் அல்லது தெலுங்கி்ல் வெற்றி பெற்ற படங்களை அப்படியே ரீமேக்கி பெரிய இயக்குநராகிவிட்டார். தெலுங்கு போக்கிரியை தமிழ்ப் போக்கிரியாக்கி, இந்தியிலும் சல்மான் கானை வைத்து வான்டட்-ஆக மாற்றி வெற்றி பெற்றார். இதே பாணியில் இப்போது தமிழில் விஜய் நடித்து வெற்றி பெற்ற கில்லியை இப்போது இந்தியில் அபிஷேக் பச்சனை வைத்து ரீமேக் செய்கிறாராம் (அபிஷேக் அங்கேயும் கபடிதான் ஆடுவாரா... அதாவது செமி பைனலில் தோற்றுவிட்டு பைனலுக்கு வரும் சூப்பர் கபடி!!) தமிழில் ஜெயம் ரவியை வைத்து பிரபுதேவா இயக்கும் 'பாரீஸ்' படம் முடிந்த பிறகு, 2010-ல் இந்தி கில்லி தொடங்குமாம்.

சினிமாவில் தோன்றும் அப்துல் கலாம்!

முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜெ அப்துல்கலாம் ஒரு திரைப்படத்தில் நடிக்கிறார். ஆனால் ஏதோ பொழுதுபோக்கிற்காகவும், பப்ளிசிட்டிக்காகவும் இதை அவர் செய்யவில்லை.


இளைஞர்களின் கனவு மேம்படவும், அந்தக் கனவு செயல் வடிவம் பெற என்ன செய்ய வேண்டும் என்ற கருத்தை வலியுறுத்தவும் இந்தப் படத்தில் நடிக்கிறார் கலாம்.


மாதவ் பண்டா இயக்கும் இந்தப் படத்துக்கு நான் அப்துல் கலாம் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. யுனிசெப் உதவியுடன், இந்திய - பிரான்ஸ் கூட்டுத்தயாரிப்பாக உருவாகிறது இந்தப் படம்.


'இளஞர்களே கனவு காணுங்கள்' என்று அடிக்கடி கூறும் கலாமின் பேச்சை ஒரு நிகழ்ச்சியில் கேட்கும் இளம் சிறுவன் ஒருவன், அவனது கனவை விவரிக்கும் சினிமாவாக இது தயாராகிறது.

கதையைக் கேட்டதும், மன நிறைவுடன் நடிக்க சம்மதித்துள்ளார் கலாம். ஆனால் ஒரு நிபந்தனை விதித்தாராம். அது- பணம் வேண்டாம் என்பது தான்!

கோவையில் தாவரவியல் பூங்கா

கோவையில் 2010 ஜூன் திங்கள் 23 27 தேதிகளில் நடைபெறவுள்ள உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டின் நினைவாக கோவை மாநகரத்தின் மையப் பகுதியில் உலகத் தரம் வாய்ந்த ஒரு தாவரவியல் பூங்கா அமைப்பது என முதலமைச்சர் கருணாநிதி முடிவு செய்துள்ளார்.


இத்தாவரவியல் பூங்கா, இப்பகுதியில் வளரக்கூடிய தாவரங்கள், பூச்செடிகள், செடிகொடிகள் மற்றும் மரங்கள் போன்றவற்றைக் கொண்டு மிகப்பெரிய அளவிலும் உலகத் தரம் வாய்ந்ததாகவும் இருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தி உள்ளார்.


கோவையில் தற்போதுள்ள மத்திய சிறைச்சாலையைப் படிப்படியாக வேறு இடத்திற்கு மாற்றிவிட்டு, இப்பகுதியில் இந்த தாவரவியல் பூங்கா அமைக்கப்படும் என்றும் முதல்வர் ஆணையிட்டுள்ளார் என்று கூறப்பட்டுள்ளது.

மீனவர்கள் டெல்லியில் போராட்டம்

மீனவர்களுக்கு எதிராக மத்திய அரசு புதிதாக கொண்டு வர முயலும் "மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2009'ஐ வாபஸ் பெற வலியுறுத்தி வரும் 30ந் தேதி டெல்லியில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சங்கங்க ளின் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.


தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர் சங்கங்களின் கூட்டமைப்பு கூட்டம் இன்று சாந்தோமில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு பர்வத ராஜகுள மீனவர் சங்கத்தின் தலைவர் அப்பாராஜ், தமிழ்நாடு பரதர் நலப்பேரவை தலைவர் மைக்கேல் பர்னாண்டோ ஆகியோர் செய்தியாளர்களிம் பேசுகையில்,


மத்திய அரசு கொண்டு வரவிருக்கும் மீன்பிடி ஒழுங்குமுறை சட்டம் 2009 சட்டத்தை எதிர்த்து மீனவர்கள் அதிருப்தி தெரிவித்து உள்ளனர். இச்சட்டத்தைக் கண்டிக்கும் வகையில் பல மாவட்டங்களில் கருப்புக்கொடி ஏற்றப்பட்டுள்ளது.


ஒட்டுமொத்த மீனவர்கள் இந்த சட்ட முன்வடிவினை எதிர்த்தும், மீனவர் சமுதாய நலனை முன்னிட் டும் வரும் 30ந் தேதி (திங்கள்) காலை 7 மணி முதல் மாலை 5 மணி வரை புதுடெல்லியில் நாடாளுமன்றம் அருகே ஜந்தர் மந்தர் பகுதியில் ஆர்ப்பாட்டம் மற்றும் தர்ணா நடத்த இருக்கிறோம். இதில் தமிழகத்திலிருந்து சுமார் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்க இருக்கின்றனர்.


இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் மத்திய அரசு இச்சட்டத்தை வாபஸ் பெறவில்லை என்றால், விசைப்படகு, நாட்டுப்படகு உள்ளிட்ட அனைத்து படகுகளையும் கடலில் நிறுத்தி வெளிநாட்டுக்கப்பலை செல்ல விடாமல் மறியல் போராட்டம் நடத்த தீர்மானித்துள்ளோம்.


அதையும் மீறிஇச்சட்டம் வாபஸ் பெறவில்லை என்றால், மீனவர்கள் வேலை நிறுத்தம் செய்து பெரிய அளவிலான போராட்டத்தை நடத்த இருக்கிறோம் என்று தெரிவித்தனர்.

கவிஞர் சல்மாவின் துரித நடவடிக்கை

சேலம் மாவட்டம் குப்பனூர் கிராமத்தைச் சேர்ந்த தீபா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற 14 வயது சிறுமியை கட்டாய திருமணம் செய்யப் பெற்றோர்களால் முடிவு செய்யப்பட்டிருந்தது.


சிறுமி கல்வி பயிலும் பள்ளித் தலைமை ஆசிரியரின் மூலம் இத்தகவல் தமிழ்நாடு சமூக நல வாரிய தலைவி கவிஞர் சல்மா அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து சேலம் மாவட்ட ஆட்சியருக்கு, இக்குழந்தை திருமணம் பற்றிய முழு விபரத்தையும் கவிஞர் சல்மா தெரியப்படுத்தினார்.


ஆட்சியரின் உத்தரவின் பேரில் சேலம் மாவட்ட சமூக நல அலுவலர் நடக்கவிருந்த குழந்தைத் திருமணத்தை தடுத்து நிறுத்தி, சிறுமி தொடர்ந்து கல்வி பயில வழிவகை செய்யப்பட்டது.


இதுகுறித்து கவிஞர் சல்மா கூறுகையில், இப்பொழுது அந்த சிறுமி மகிழ்ச்சியாக பள்ளி சென்று வருகிறாள். தலைமை ஆசிரியரின் செயல் பாராட்டுக்குறியது. இதுபோன்ற ஒவ்வொரு தலைமை ஆசிரியரும் செயல்பட்டால், குழந்தை திருமணம் என்ற சட்ட விரோத செயல் நம் நாட்டைவிட்டே ஒழிக்கப்படும். பெண் கல்வியும் காப்பாற்றப்படும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

தேமுதிக வேட்பாளர்கள் அறிவிப்பு

நடக்கவிருக்கும் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி சட்டமன்றத் தொகுதிகளுக்கான தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் அறிவித்துள்ளார்.


தமிழகத்தில் திருச்செந்தூர் மற்றும் வந்தவாசி ஆகிய இரு சட்டமன்ற தொகுதிகளுக்கு வரும் டிச.19 ந் தேதி இடைதேர்தல் நடைபெறுகிறது. இதற்காக, வேட்புமனுத்தாக்கல் நேற்று தொடங்கியது.


திமுக வேட்பாளர்களாக அனிதா ராதாகிருஷ்ணன் திருச்செந்தூர் தொகுதியிலும், கமலக்கண்ணன் வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி அறிவித்திருந்தார்.


இதேபோல் அதிமுக வேட்பாளர்களாக அம்மன் நாராயணன் திருச்செந்தூர் தொகுதியிலும், முனுசாமி வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச்செயலாளருமான ஜெயலலிதா அறிவித்திருந்தார்.


இந்நிலையில் தேமுதிக வேட்பாளர்களை அக்கட்சித் தலைவர் விஜயகாந்த் இன்று அறிவித்துள்ளார். கோமதி ஆ.கணேசன் திருச்செந்தூர் தொகுதியிலும், என்.ஜனார்த்தனன் வந்தவாசி தொகுதியிலும் போட்டியிடுவார்கள் என்று இன்று அறிவித்தார்.

ராஜிவ்காந்தி கொலை வழக்கு நாளை விசாரணை

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி, கடந்த 1991ல் ஸ்ரீபெரும்புதூரில் நடந்த பொதுக்கூட்டத்தில் மனித வெடிகுண்டுக்கு பலியானார். இந்த படுகொலை தொடர்பாக, விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரன், பொட்டு அம்மன், நளினி உள்ளிட்ட 41 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

இந்த வழக்கு, பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தலை மறைவு குற்றவாளிகள் என்று பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் மீதான வழக்கு தனியாக பிரிக்கப்பட்டது. மீதமுள்ளோரில் 26 பேர் மீதான வழக்கு மட்டும் விசாரிக்கப்பட்டு 1998ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது. இந்நிலையில், இந்த வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்ட பிரபாகரன், பொட்டு அம்மன் ஆகியோர் தொடர்பாக மேல் விசாரணை நடத்த வேண்டும் என்ற ஜெயின் கமிஷன் பரிந்துரையின் அடிப்படையில், பல்நோக்கு புலனாய்வு குழுவிடம் அந்த பணி ஒப்படைக்கப்பட்டது.

இந்த வழக்கு சிறப்பு நீதிமன்றத்தில் (முதலாவது கூடுதல் செஷன்ஸ்) விசாரணையில் உள்ளது. வழக்கு நாளை மீண்டும் விசாரணைக்கு வருகிறது. இலங்கையில் போர் முடிவடைந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மன் தொடர்பான முக்கிய தகவல்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்படுகிறது.

பயணம் திருப்தியளிக்கிறது''''''

அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவுடன் தான் நடத்திய சந்திப்பும், தனது அமெரிக்கப் பயணமும் திருப்தியளிக்கிறது என்று பிரதமர் மன்மோகன் சிங் கூறியுள்ளார்.

அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு இந்தியா புறப்பட இருந்த நிலையில் வாஷிங்டனில் செய்தியாளர்களிடம் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், “இரு நாடுகளுக்கு இடையிலான இராஜதந்திர உறவை மேம்படுத்திக்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் ஒன்றிணைந்து பலவற்றை சாதிக்க முடியும் என்ற திருப்தியுடன் நான் நாடு திரும்புகிறேன்” என்று கூறியுள்ளார்.

“எனது பயணம் இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர புரிந்துணர்வை அதிகரித்துள்ளது மட்டுமின்றி, இரு நாடுகளின் தேச நலன்களை மேம்படுத்திக் கொள்ளும் வகையில் இராஜதந்திரக் கூட்டாண்மையை வலுப்படுத்த உதவும் என்ற நிறைவும் உள்ளது” என்று கூறிய மன்மோகன் சிங், “21ஆம் நூற்றாண்டின் சவால்களை எதிர்கொள்ள இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய பங்களிப்பைச் செய்திட முடியும் என்பதை அதிபர் ஒபாமா அங்கீகரித்துள்ளார். உலக அமைதிக்காவும், நிலைத்தன்மையை காப்பாற்றவும், ஒத்தக் கருத்து,ஒத்துழைப்பு ஆகியவற்றை மேம்படுத்துவதில் இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் வரலாற்று முக்கயத்துவம் வாய்ந்த வாய்ப்புள்ளதையும் உணர்ந்துள்ளோம்” என்று கூறியுள்ளார்.

அமெரிக்க தொழில் முனைவர்களுடன் பேசிய பிரதமர் மன்மோகன் சிங், அவர்கள் தங்களுடைய தொழிலை இந்தியாவிற்கும் விரிவுபடுத்துவதில் ஆர்வம் காட்டியதாகக் கூறியுள்ளார்.

பிரபாகரன் பிறந்தநாள்: டி ஆர் வாழ்த்து !

விடுதலைப்புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரனுக்கு இன்று 55வது பிறந்தநாள்.இதை முன்னிட்டு டி.ராஜேந்தர் அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். ’’ஒவ்வொரு பூவுக்கும் ஒரு வாசம் இருக்கிறது. அதே போல் ஒவ்வொரு நாளுக்கும் ஒரு சிறப்பு இருக்கிறது. அதை எண்ணிப்பாருங்கள்.
இந்த நாள் எந்த நாள்..இனிய நாள், பொன்னாள், நன்நாள்..எதனால்..அது மாவீரன் பிறந்தநாள்.

நான் எம்.ஏ. வரலாறு படித்தவன். அதனால் எனக்கு மாவீரன் என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியும். உலகத்தில் இருக்கும் அனைத்து மக்கள் மனத்திலும் இருக்கும் ஒரே தலைவன், ஒரே மாவீரன் அவர்தான் பிரபாகரன். அவருக்கு என் பிறந்த நாள் வாழ்த்துக்கள்’’என்று தெரிவித்துள்ளார்.

லிபரான் கமிஷன் அறிக்கை ரகசியமாக வெளியானது பற்றி விசாரணை

பாபர் மசூதி இடிப்பு பற்றி விசாரணை நடத்திய லிபரான் கமிஷன் அறிக்கை முன்கூட்டியே ரகசியமாக வெளியானது பற்றி விசாரணை நடத்தப்படும் என்று, பிரதமர் மன்மோகன்சிங் அறிவித்தார்.


அமெரிக்காவில் சுற்றுப்பயணம் செய்துவரும் பிரதமர் மன்மோகன்சிங், வாஷிங்டன் நகரில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.


அப்போது அவர், லிபரான் கமிஷன் அறிக்கை பாராளுமன்றத்தில் தகாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு வெளியானது வருந்தத்தக்கது. நான் டெல்லி திரும்பியதும், இந்த விவகாரம் தொடர்பாக உள்துறை மந்திரி ப.சிதம்பரம் மற்றும் மந்திரிகளுடன் கலந்து பேசி, தகுந்த விசாரணை நடத்தப்படும்'' என்று தெரிவித்தார்.


மும்பை தாக்குதல் ஓராண்டு நினைவு தினத்துக்கு முந்தைய தினமான நேற்று அது தொடர்பான கேள்விகளுக்கு பதில் அளித்த மன்மோகன்சிங், மும்பை தாக்குதல் தீவிரவாதிகளுக்கு தண்டனை பெற்றுத்தரும் வரை ஓயமாட்டோம் என்று உறுதியாக அறிவித்தார்.


மற்றொரு கேள்விக்கு பதில் அளித்த மன்மோகன்சிங், அணுசக்தி ஒப்பந்தத்தை முழுமையாக அமல்படுத்த உறுதிபூண்டுள்ளதாக அமெரிக்கா வாக்குறுதி அளித்து இருப்பதால், இந்த ஒப்பந்த விவகாரத்தில் உள்ள சிறு பிரச்சினைகளுக்கு இரண்டு வாரத்தில் தீர்வு காணப்பட்டுவிடும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.


இந்தியா-பாகிஸ்தான் பேச்சுவார்த்தை தொடர்பாக வெளியான சீனா-அமெரிக்கா கூட்டறிக்கை சர்ச்சை பற்றிய கேள்விக்கு மன்மோகன்சிங் பதில் அளித்தார். அப்போது அவர், இந்தியா-பாகிஸ்தான் இடையே நடைபெறும் பேச்சுவார்த்தையில் 3-வது நாட்டுக்கு பங்கு இல்லை என்பதை ஒபாமா தன்னிடம் ஒப்புக்கொண்டதாக குறிப்பிட்டார்

தினம் 85 லட்சம் செலவு

மும்பையில் கடந்த ஆண்டு இதே நாளில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் கொலை வெறி தாக்குதல் நடத்தி 200 பேரை கொன்றனர். தாக்குதலில் ஈடுபட்ட 10 தீவிரவாதிகளில் 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர்.


அஜ்மல் அமீர் கசாப் என்ற தீவிரவாதி மட்டும் உயிருடன் பிடிபட்டான். 21 வயதாகும் கசாப்பை மும்பையில் பலத்த பாதுகாப்புடன் ஜெயிலில் வைத்துள்ளனர். அவன் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவன் மீதான விசாரணையை நடத்த ஆர்தர் ரோடு ஜெயிலில் சிறப்பு கோர்ட்டு உருவாக்கப்பட்டுள்ளது.

கடந்த மே மாதம் முதல் கசாப் மீதான வழக்கு விசாரணை தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் 3 மாதங்களில் கசாப் மீதான விசாரணை முடிந்து விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தீவிரவாதி கசாப்புக்கு ஜெயிலுக்குள் கேட்பது எல்லாம் கொடுக்கப்படுகிறது. தினமும் சிக்கன் பிரியாணி வேண்டும் என்று அடம் பிடித்து கேட்டு வாங்கி சாப்பிடுகிறான். இது போல அவனுக்காக அரசு பல விஷயங்களில் பணத்தை செலவு செய்கிறது.

இவை தவிர இவன் பாதுகாப்புக்கு என்று தனி அதிரடிப்படை ஏற்படுத்தப்பட்டு இருக்கிறது. அதற்கும் நிறைய செலவாகிறது. இதுவரை 31 கோடி ரூபாயை கசாப்புக்காக மராட்டிய அரசு செலவிட்டுள்ளது.

தீவிரவாதி கசாப்பை நல்ல உடல் நலத்துடன் வைத்துக் கொள்ள வேண்டியது அவசியமாகிறது. இதனால் இவனுக்காக தினமும் 85 லட்சம் ரூபாயை மராட்டிய அரசு தேவை இல்லாமல் செலவு செய்ய வேண்டியதுள்ளது.

கசாப்புக்கு மருத்துவ மனையில் தங்கி சிகிச்சை பெறுவதற்காக ஜெ.ஜெ. மருத்துவமனையில் தனி செல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செல்லை குண்டு துளைக்காத அறையாக மாற்றி உள்ளனர். இதற்கு மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது.

நடிகர் குணாலை கொன்றது எப்படி?

நடிகர் குணால் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகையின் மீது சந்தேகம் அதிகமாகி இருக்கிறது. போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘காதலர் தினம்’ உட்பட சில தமிழ் படங்களில் நடித்தவர் குணால் சிங். திருமணமான இவர், மனைவியை பிரிந்து மும்பை புறநகரில் அந்தேரி வர்சோவாவில் வாடகை வீட்டில் தனியாக தங்கியிருந்தார். கடந்த ஆண்டு பிப்ரவரியில், தனது வீட்டில் உள்ள மின் விசிறியில் குணால் தூக்கில் பிணமாக தொங்கினார். போலீசார் இதை தற்கொலை வழக்காக பதிவு செய்து விசாரணையை முடித்தனர்.


ஆனால், தனது மகன் கொலை செய்யப்பட்டு இருப்பதாக குணாலின் தந்தை குற்றம் சாட்டினார். இது தொடர்பாக மும்பை உயர் நீதிமன்றத்தில் அவர் தாக்கல் செய்த மனுவில், ‘குணாலின் கழுத்து, கைகளில் காயங்கள் இருந்தன. அவரை யாரோ கொலை செய்து தூக்கில் தொங்கவிட்டு இருக்கின்றனர். எனவே, எனது மகனின் சாவு குறித்து மறு விசாரணை நடத்த போலீசுக்கு உத்தரவிட வேண்டும்’ என்று கூறியிருந்தார்.


இதை விசாரித்த நீதிமன்றம், வழக்கை மீண்டும் விசாரிக்கும்படி வர்சோவா காவல் நிலைய போலீசாருக்கு கடந்த ஆகஸ்டில் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து விசாரணையை முடுக்கி விட்ட போலீசார், குணால் தற்கொலை செய்த தினத்தன்று அவருடைய வீட்டில் இருந்த நடிகை லவீனா பாட்டியாவை கடந்த ஞாயிறன்று திடீரென கைது செய்தனர்.


அவரை 28ம் தேதி வரை போலீஸ் காவலில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
இந்த வழக்கில் லவீனா ஆரம்பத்தில் இருந்தே பொய் தகவல்களை கூறி வந்திருப்பது விசாரணையில் உறுதியாகி இருக்கிறது. பாலிவுட்டில் அதிகம் பிரபலம் இல்லாத லவீனா, ‘யோகி’ என்ற போஜ்புரி படத்தில் குணாலுக்கு ஜோடியாக நடித்துள்ளார்.


அப்போது நெருங்கிய தொடர்பு ஏற்பட்டு இருவரும் காதலித்து வந்துள்ளனர். இதன் பிறகே குணால் தனது மனைவியை பிரிந்துள்ளார். எனவே, லவீனாவிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பள்ளி வாகனங்களில் அதிக மாணவர்களை ஏற்றினால் உ‌ரிம‌ம் ரத்து:

பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனங்களின் உ‌ரிம‌ம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான மச்சேந்திரநாதன் எச்சரித்துள்ளா‌ர்.

இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படவேண்டுமென்று பலமுறை அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 2006ஆம் ஆண்டு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு தொடர்ந்து.

அனைத்து பள்ளி வாகனங்கள் மேற்கண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் மேற்கண்ட அறிவுரைகளுக்கு மாறாக, சில பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தபடி உள்ளது.

இத்தகைய செயல், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிராக இருப்பதுடன் விபத்துகள் நடக்க வழிவகை செய்கிறது.எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகை வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வாகனத்தை கையகப்படுத்தி அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் தமக்கென்று சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்ளாமல், தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும்போது நல்ல திறமையான ஓட்டுனர்களை நியமித்து அவற்றை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.

பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை முறையாக தினசரி சோதனை செய்ய வேண்டுமென்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று மச்சேந்திரநாதன் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

டே‌ங்க‌ர் ல‌ா‌ரி மீது கா‌ர் மோத‌லி‌ல் எ‌ரி‌ந்தது

திண்டுக்கல் - மதுரை நான்கு வழிச்சாலையில் கொடைரோடு அருகே டீச‌ல் டே‌ங்‌க் லாரி மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்தது. இதில் காருக்குள் இருந்த வங்கி அதிகாரி, மனைவி, மகனுடன் உடல் கருகி பலியானார்.

சேலம் இரும்பாலை கிளை ஸ்டேட் வங்கி மேலாளராக பணியாற்றியவர் ராமபாண்டியன் (50). இவரது மனைவி சண்முகவள்ளி (45). இவர் கல்லூரி பேராசிரியையாக இருந்தார்.

இவர்களது மகன் ஜாய்மதன் (18) பொ‌றி‌யிய‌ல் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார்.வங்கி அதிகாரி ராமபாண்டியன் தனது குடும்பத்துடன் காரில் திருநெல்வேலி சென்றார். பின்னர் அங்கிருந்து சேலம் புறப்பட்டார். காரை திருநெல்வேலி மாவட்டம் அம்பாசமுத்திரம் மேலப்பாளையத்தை சேர்ந்த ரமேஷ் (30) என்பவர் ஓட்டி வந்தார்.

இவர்கள் வந்த கார் நேற்‌றிரவு 7 மணி அளவில் திண்டுக்கல் நோக்கி வந்த போது கொடைரோடு அருகே ஜல்லிப்பட்டி பிரிவில் விபத்தில் சிக்கியது.நான்கு வழிச்சாலை பணிக்கு பயன்படுத்தப்படும் லாரி, ஜல்லிப்பட்டி கிராமத்திற்குள் சென்றுவிட்டு ‌பிரதான சாலை‌யி‌ல் திரும்பிக்கொண்டிருந்தது. இந்த சமயத்தில் வேகமாக வந்த கார், லாரி ‌மீது மோதியது.இதில் லாரியின் டீசல் டேங்க் வெடித்து லாரியும், காரும் தீப்பிடித்து எரி‌ந்தது.


லாரி ஓ‌ட்டுந‌ர், கிளீனர் ஆகியோர் கீழே குதித்து உயிர் தப்பிவிட்டனர்.காருக்குள் உயிருக்கு போராடிக் கொண்டிருந்த 4 பேரையு‌ம் அ‌ந்த பகு‌தி பொதும‌க்க‌ள் மீட்க முயன்றனர். ஆனா‌ல் கார் ஓ‌ட்டுந‌ர் ரமேஷ் என்பவர் மட்டும் மீட்கப்பட்டார். சுமார் 1 மணி நேர போராட்டத்துக்கு பின்பு தீ அணைக்கப்பட்டது. இருப்பினும் லாரியும், காரும் தீயில் எரிந்து சாம்பலானது.இந்த கோர விபத்தில் காருக்குள் இருந்த வங்கி மேலாளர் ராமபாண்டியன், அவரது மனைவி சண்முகவள்ளி, மகன் ஜாய்மதன் ஆகியோர் உடல் கருகி கரிக்கட்டைகளாக காருக்குள்ளேயே இறந்து கிடந்தனர். அவர்கள் உடல் அடையாளம் தெரியாத அளவுக்கு தீயில் எரிந்து காணப்பட்டது.

ஏழை மாணவிகள் 9ம் வகுப்பில் சேர்ந்தால் ரூ.3,000 டெபாசிட்

8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 9ம் வகுப்பில் சேரும் ஏழை மாணவிகளுக்கு உயர்கல்வி ஊக்கத் தொகையாக தலா ரூ.3,000 வங்கியில் டெபாசிட் செய்யும் திட்டத்துக்காக தமிழகத்திற்கு ரூ.36 கோடியே 38 லட்சம் ஒதுக்கப்பட்டுள்ளது.


பெண்களுக்கான உயர்கல்வி ஊக்கத்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்தாண்டு அறிமுகப் படுத்தியது. இத்திட்டத்தின் படி, எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று ஒன்பதாம் வகுப்பில் சேரும் மாணவிகளின் பெயரில் ரூ.3,000 வங்கியில் டெபாசிட் செய்யப்படும்.


மாணவி 18 வயது நிறைவு செய்யும் போது இப்பணத்தை வங்கியிலிருந்து எடுத்துக்கொள்ளலாம். அல்லது உயர்கல்வியில் சேரும் சமயத்தில் பயன்படு்த்திக் கொள்ளலாம்.


ஒன்பதாம் வகுப்பில் சேரும்போது 16 வயதுக்கு மிகாத அனைத்து ஆதிதிராவிட, பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த மாணவிகளும் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறலாம்.


அல்லது, கஸ்தூரிபா காந்தி பாலிகா வித்தியாலயாக்களில் எட்டாவது தேர்ச்சி பெற்று, அரசு பள்ளிகள், உதவி பெறும் பள்ளிகள் அல்லது உள்ளாட்சி பள்ளிகளில் ஒன்பதாவது சேர்ந்துள்ள பெண்கள் திட்டத்தில் பயனடையலாம்.


தனியார் பள்ளிகள் மற்றும் மத்திய அரசின் இதர பள்ளிகளில் படிக்கும் பெண்கள், இத்திட்டத்தில் பயன்பெற முடியாது. இத்திட்டத்துக்காக தமிழகத்திற்கு ரூ.36 கோடியே 38 லட்சம் மத்திய அரசு ஒதுக்கீடு செய்துள்ளது. விரைவில் இத்தொகை வங்கியில் வரவு வைக்கப்படும் என பள்ளிக் கல்வி இயக்குனரக அதிகாரிகள் தெரிவித்தனர்.

சாகஸ சுற்றுலா செல்வோர் விண்ணப்பிக்கலாம்!

கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு பரம்பிக்குளம், டாப்சிலிப், கோவை குற்றாலம் பகுதிகளுக்கு சாகஸ சுற்றுலா செல்ல ‌விரு‌ம்புவோ‌ர் த‌மிழக சுற்றுலா வளர்ச்சிக் கழக‌த்தை தொட‌ர்பு கொ‌‌ள்ளலா‌ம்.


இதுகுறித்து சுற்றுலா வளர்ச்சிக் கழக நிர்வாக இயக்குனர் வெளியிட்டுள்ள அறிக்கை: கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் டாப்சிலிப், பரம்பிக்குளம், கோவை குற்றாலம் போன்ற பகுதிகளுக்கு சாகஸ சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்கிறது. டிச‌ம்ப‌ர் 24ஆ‌ம் தேதி மாலை 6 மணிக்கு சென்னையில் இருந்து புறப்பட்டு, டிச‌ம்ப‌ர் 25ஆ‌ம் தேதி பரம்பிக்குளம் சென்றடையும். டிச‌ம்ப‌ர் 25ஆ‌ம் தேதி காலை 9 மணி முதல் 4 மணி வரை மலையேற்ற பயணம் தொடரும்.


இரவு பரம்பிக்குளம் தங்கி மறுநாள் காலை, டிச‌ம்ப‌ர் 26ஆ‌ம் தேதி, டாப்சிலிப்பில் இருந்து காட்டுவழி பயணம் தொடங்கும். அன்றிரவு கோவையில் தங்கலாம். மறுநாள், கோவை குற்றாலம் கண்டுகளித்தபிறகு, கோவையில் இருந்து மாலை புறப்பட்டு, மறுநாள் காலை சென்னை வந்தடையலாம். இதற்கான கட்டணம் ரூ.3 ஆயிரம். இதில், தங்குமிடம், உணவு, போக்குவரத்து வசதி ஆகியவை அடக்கம்.


தங்கள் பெயரை பதிவு செய்ய விரும்புவோர், பொது மேலாளர், சுற்றுச்சூழல் சுற்றுலா பிரிவு, தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம், சென்னை- 2, என்ற முகவரியை தொடர்பு கொள்ளவேண்டும்.


இதில் பங்கேற்க விரும்பும் இளைஞர்கள் கால்சட்டை, பனியன், டிரெக்கிங் காலணிகள், தொப்பி, குளிர் கண்ணாடி போன்ற பொருட்களையும், பைனாகுலரையும் கொண்டு வரலாம். இப்பயணத்தில் பங்கு பெறுவோர் 6 முதல் 7 மணி நேரம் வரை நடக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.


விருப்பமுள்ளவர்கள், சென்னையில் உள்ள சுற்றுலா வளர்ச்சிக் கழக அலுவலகங்களை 25383333, 25384444, 25389857 அல்லது 25384356, 25382916 என்ற தொலைபேசி எண்களிலும் தொடர்பு கொள்ளலாம்.

ஒபாமா அலுவலகத்தில் மகாத்மா காந்தி படம்

அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனம் கவர்ந்த தலைவர், நமது தேசத் தந்தையான மகாத்மா காந்தி ஆவார். காந்தியின் அகிம்சை வழியில் அமெரிக்காவில் கறுப்பின மக்களின் உரிமைக்காக போராடியவர், மார்ட்டின் லூதர்கிங்.


தற்போது அமெரிக்காவின் முதல் கறுப்பின அதிபராக பதவி ஏற்றுள்ள ஒபாமாவும், மார்ட்டின் லூதர்கிங்கைப் போல், காந்தியை தனது `உண்மையான ஹீரோ'வாக கருதி வருகிறார். இதை உணர்த்தும் வகையில், வெள்ளை மாளிகையில் உள்ள அதிபர் ஒபாமாவின் அலுவலத்தில், மகாத்மா காந்தி படம் இடம் பெற்றுள்ளது.


இந்த தகவலை நிருபர்களிடம் வெளியிட்ட ஒபாமாவின் மனைவி மிச்செலி, அமெரிக்க அதிபராவதற்கு முன்பு ஒபாமா எம்.பி.யாக இருந்தபோதும் அவருடைய அறையில் மகாத்மா காந்தியின் படம் இடம் பெற்று இருந்ததாக குறிப்பிட்டார்.

பிரதமர் அஞ்சலி

மும்பை தாக்குதலில் உயிரிழந்தவர்களுக்காக பிரதமர் மன்மோகன் சிங் அஞ்சலி செலுத்தி உள்ளார்.


அஞ்சலியின் போது அவர், மும்பை தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அவர்களை பாகிஸ்தான் அரசு தண்டிக்கும் வரை ஓயப்போவதில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் மும்பை தாக்குதலுக்கு காரணமான 7 பேர் மீது பாகிஸ்தான் அரசு வழக்குப்பதிவு செய்திருப்பது வரவேற்கத்தக்கது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாபர் மசூதி இடிப்பிற்கு 68 பேர் பொறுப்பு,

பாபர் மசூதி இடிக்கப்பட்டது குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அறிக்கையின் அடிப்படையில், அதற்கு 68 பேர் பொறுப்பு என்று நடவடிக்கை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்றும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
1992ஆம் ஆண்டு டிசம்பர் 6ஆம் தேதி தகர்க்கப்பட்ட பாபர் மசூதி குறித்து விசாரணை நடத்திய நீதிபதி லிபரான் அளித்த அறிக்கை இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.இந்த அறிக்கையின் மீது நடந்த விவாதங்களி்ல் எழுப்பப்பட்ட கேள்விகளுக்கு பதிலளித்த மத்திய சட்டத் துறை அமைச்சர் வீரப்ப மொய்லி, நீதிபதி லிபரான் ஆணையம் அளித்த அனைத்துப் பரிந்துரைகளையும் அரசு ஏற்கிறது என்றும், அவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறினார்.“லிபரான் ஆணையத்தின் எந்தப் பரிந்துரையையும் நாங்கள் நிராகரிக்கவில்லை.
அனைத்துப் பரிந்துரைகளும் ஏற்கப்பட்டுள்ளது. அந்தப் பரிந்துரைகளின் மீது அரசு உரிய நடவடிக்கை எடுக்கும்” என்று வீரப்ப மொய்லி கூறினார்.இவ்வாறு கூறியது மட்டுமின்றி, “ விசாரணை ஆணையம் பரிந்துரைகளையும் தாண்டி அரசு செல்லும்” என்றும் வீரப்ப மொய்லி கூறினார்.
“பாபர் மசூதி இடிப்பு தொடர்பான உண்மைகளை விசாரணை ஆணையம் கண்டுபிடித்துள்ளது. அவைகள் மீது ஒவ்வொரு அமைச்சகமும் நடவடிக்கை எடுக்கும். அந்த அடிப்படையில் தான் நடவடிக்கை தொடர்பான விவர அறிக்கை உருவாக்கப்பட்டுள்ளது” என்று கூறிய மொய்லி.
“நடவடிக்கை அறிக்கையில் 68 பேர் பாபர் மசூதி இடிப்பிற்கு பொறுப்பாக்கப்பட்டுள்ளனர், அவர்கள் செய்த குற்றங்கள் என்ன என்பது குறித்தும் அறிக்கையில் தொகுக்கப்பட்டுள்ளது, இவைகளின் மீது அரசு நடவடிக்கை எடுக்கும்” என்று கூறினார்.

ரயிலில் பிறந்த குழந்தைக்கு பெயர் லாலு !!!

பீகார் மாநிலம் வழியே செல்லும் லோகித் எக்ஸ்பிரசில் நிறைமாத கர்ப்பிணி பெண் காயத்ரி (20) பயணம் செய்தார்.

ரயில் தேசிரி நிலையம் அருகே காசிபூர் பசாபர் இடையே வரும் போது அவருக்கு ஆண் குழந்தை பிறந்தது. தனது குழந்தைக்கு அந்த பெண் லாலுபிரசாத் என பெயர் சூட்டுவேன் என கூறினார்.
ஏழைகள் மீதான அவரது அக்கறையான பேச்சு தனக்கு மிகவும் பிடிக்கும் என்றார்.


காய்த்ரி லாலுபிரசாத் வெற்றிபெற்ற பாராளுமன்ற தொகுதியில் உள்ள ஒரு கிராமத்தில் வசிக்கிறார். தனது கணவர் வேலைபார்க்கும் மேற்கு வங்காள மாநிலம் சிலிகுரில் இருந்து சொந்த ஊருக்கு செல்லும் போது தான் இவருக்கு குழந்தை பிறந்தது.

அதிக மாணவர்களை ஏற்றினால் உ‌ரிம‌ம் ரத்து: த‌மிழக அரசு எச்சரிக்கை

பள்ளி வாகனங்களில் அதிக அளவில் மாணவ, மாணவிகளை ஏற்றிச் சென்றால், அந்த வாகனங்களின் உ‌ரிம‌ம் ரத்து செய்யப்படும் என்று போக்குவரத்துத்துறை ஆணையரும், முதன்மை செயலாளருமான மச்சேந்திரநாதன் எச்சரித்துள்ளா‌ர்.


இது தொடர்பாக அவ‌ர் வெளியிட்டுள்ள செய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், உச்ச நீதிமன்றம் வழங்கிய வழிகாட்டுதலின்படி பள்ளி வாகனங்கள் இயக்கப்படவேண்டுமென்று பலமுறை அரசால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து 2006ஆம் ஆண்டு அனைத்து பள்ளி நிர்வாகத்தினருக்கும் அறிவுரை வழங்கப்பட்டு தொடர்ந்து, அனைத்து பள்ளி வாகனங்கள் மேற்கண்ட உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி இயக்க வேண்டுமென்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.இருப்பினும் மேற்கண்ட அறிவுரைகளுக்கு மாறாக, சில பள்ளி வாகனங்களில் அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட அதிகமான மாணவர்களை ஏற்றிச் செல்வதாக புகார்கள் வந்தபடி உள்ளது. இத்தகைய செயல், பள்ளி குழந்தைகள் பாதுகாப்பு மற்றும் நலனுக்கு எதிராக இருப்பதுடன் விபத்துகள் நடக்க வழிவகை செய்கிறது.எனவே, உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலை கடைபிடிக்காமல் அளவுக்கு அதிகமாக பள்ளி மாணவர்களை ஏற்றிச் செல்லும் அனைத்து வகை வாகனங்கள் சோதனை செய்யப்பட்டு வாகனத்தை கையகப்படுத்தி அனுமதி சீட்டு ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.பள்ளிகள் தமக்கென்று சொந்தமாக வாகனங்களை வைத்துக்கொள்ளாமல், தனியார் வாகனங்களை ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு எடுக்கும்போது நல்ல திறமையான ஓட்டுனர்களை நியமித்து அவற்றை இயக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.பள்ளி மாணவர்களை ஏற்றிச்செல்லும் அனைத்து வகை வாகனங்களையும் முறையாக பராமரித்து இயக்க வேண்டும் என்றும், வாகனங்களை முறையாக தினசரி சோதனை செய்ய வேண்டுமென்றும் போக்குவரத்துத்துறை அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது எ‌ன்று மச்சேந்திரநாதன் தெரிவி‌த்து‌ள்ளா‌ர்.

சென்னை சுற்றுலா நட்பு ஆட்டோ வாகன ஓட்டுநர்களுக்கு அனுமதி

செ‌ன்னை‌யி‌ல் சு‌ற்றுலா ந‌ட்பு ஆ‌ட்டோ வாகன ஓ‌ட்டுந‌ர்களு‌க்கு த‌மிழக அரசு அனும‌தி அ‌ளி‌த்து ஆணை ‌பிற‌ப்‌பி‌‌த்து‌ள்ளது.


சென்னை மாநகரில் இயங்கும், 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்க
ு (Tourist Friendly Auto Drivers) நடைமுறையில் உள்ள தடை ஆணை, நிபந்தனைகளைத் தளர்த்தி ஆட்டோ ஓட்டுநர் அனுமதி ஆணை (Permit) வழங்குமாறு, சுற்றுலா பண்பாட்டுத் துறையின் கோரிக்கையின் பேரில் போக்குவரத்து ஆணையரஅரசுக்கு பரிந்துரைத்திருந்தார்.


இந்த 39 ஆட்டோ ஓட்டுநர்கள் நல்லமுறையில் பயிற்ச
ி பெற்றுள்ளார்கள் என்றும், கடந்த 11 மாதங்களாகத் தங்களது சுற்றுலா நட்பு ஆட்டவாகனம் மூலம் சிறப்பாகப் பணியாற்றி, சுற்றுலா பயணிகளிடம் நற்பெயரஎடுத்துள்ளதாகவும் அவர் தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தார்.


ஆட்டோ ர
ி‌க் ஷா அனுமதி ஆணை (Permit) மானியத் திட்டத்தின் ‌கீ‌ழ் அனுமதி வழங்க போதிய காலியிடம் இல்லாததால், மேற்காணும் 39 ஆட்டோ ரி‌க் ஷா ஓட்டுநர்களுக்கு மானியம் அல்லாத திட்டத்தின் கீ‌ழ் (Non Subsidy Scheme) பரிசீலனை செ‌ய்யலாம் எனவும் கருத்து தெரிவிக்கப்பட்டது.


போக்குவரத்து ஆணையரின் பரிந்துரையை அரசு ஏற்று, 39 சுற்றுலா நட்பு ஆட்டோ ஓட்டுநர்களுக்கு (
Tourist Friendly Auto Drivers) தற்போது நடைமுறையில் உள்ள தடை ஆணையில் குறிப்பிட்டுள்ள வயது, கல்வித்தகுதி போன்ற சில நிபந்தனைகளை, அவைகளை நிறைவு செ‌ய்யாத விண்ணப்பதாரர்கள் சார்பாக தளர்த்தி, அரசு மானியம் அல்லாத ஆட்டோ ரி‌க் ஷா அனுமதி ஆணை (Permit under Non-subsidy Scheme) வழங்க அரசு ஆணையிட்டுள்ளது.