2050ல் இந்தியா உலகின் 3வது பொருளாதார சக்தியாகும்!

வரும் 2050-ம் ஆண்டு உலகின் மூன்றாவது பெரிய பொருளாதார சக்தியாக இந்தியா திகழும் என்று சர்வதேச அமைப்பு ஒன்று தெரிவித்துள்ளது.Carnegie Endowment for International Peace என்ற அமைப்பு தனது நவம்பர் மாத தகவலறிக்கையில் இதனை வெளியிட்டுள்ளது. இதில் வெளியாகியுள்ள கட்டுரையில், டாடுஷ் மற்றும் பென்னட் ஸ்டான்சில் ஆகிய பொருளாதார அறிஞர்கள் கூறியிருப்பதாவது: "சீனா, இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய மூன்று நாடுகளும்தான் இந்த உலகின் பொருளாதாரத்தை நிர்ணயிக்கும் சக்திகளாக உருவெடுக்கப் போகின்றன.

இதற்கு இன்னும் 40 ஆண்டுகள் ஆகும். வரும் 2050-ல் இந்த மூன்று நாடுகளின் மொத்த உற்பத்தி, இப்போதைய ஜி20 நாடுகளின் உற்பத்தியில் 70 சதவிகிதமாக இருக்கும்..." என்று குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தியாவுக்குதான் இவ்வளவுகாலம் தேவையாம். ஆனால் சீனாவோ வரும் 2032லேயே உலகின் முதல் நிலை பொருளாதசார சக்தியாக மாறிவிடுமாம். அதுவும் அமெரிக்காவைவிட 20 சதவிகிதம் பலம் பொருந்திய நாடாக சீனா உருவெடுத்துவிடும் என்றும் இக்கட்டுரை குறிப்பிடுகிறது.

0 comments: