மும்பையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல் தினமான நவம்பர் 26ஆம் தேதி வருவதையொட்டி தமிழகத்தின் தென்கிழக்கு கடலோர பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
மும்பையில் மீண்டும் தாக்குதலை நடத்த தீவிரவாதிகள் திட்டமிட்டு இருப்பதாக உளவுத்துறையினர் சமீபத்தில் விடுத்த எச்சரிக்கையை தொடர்ந்து தென் கிழக்கு கடலோரப் பகுதிகளில் இந்திய கடற்படையும், கடலோர காவல்படையினரும் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்திய கடல் எல்லைக்கு உட்பட்ட பாக்ஜலசந்தியில் இந்திய கடற்படையினரும், கடலோர காவல்படையினரும் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
உச்சிபுலியில் உள்ள விமான கண்காணிப்பு நிலையம் உஷார்படுத்தப்பட்டுள்ளது. மேலும் பாக்ஜலசந்தி, மன்னார் வளைகுடா பகுதியிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
மீனவர்கள் சர்வதேச எல்லையை தாண்ட வேண்டும் என்றும் தங்களுடைய அடையாள அட்டைகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment