Showing posts with label மழைக்கு. Show all posts
Showing posts with label மழைக்கு. Show all posts

தமிழகத்தில் மழைக்கு பலியானோர் 80 ஆக உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாகப் பெய்து வரும் கனமழை தொடர்பான சம்பவங்களில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 80ஐ எட்டியுள்ளது.
கன மழையின் காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததிலும், மழை வெள்ளத்தில் சிக்கியும், நிலச்சரிவு, அறுந்து கிடந்த மின்கம்பியை மிதித்ததிலும் இந்த உயிரிழப்பு ஏற்பட்டிருப்பதாக உயர் அதிகாரிகளை மேற்கோள்காட்டி தகவல்கள் தெரிவிக்கின்றன.
நீலகிரி மாவட்டத்தில் அதிகபட்சமாக 43 பேர் பலியாகி இருப்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன.இம்மாவட்டத்தில் மேலும் பலரது கதி என்னவென்று தெரியாததால், உயிரிழப்பு அதிகரிக்கக்கூடும் என்று அஞ்சப்படுகிறது.