மதுரை புதிய விமான நிலையத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு விமானப் போக்குவரத்து விரைவில் தொடங்கவேண்டும் என்று மத்திய அமைச்சர் மு.க.அழகிரி விடுத்த கோரிக்கையை அடுத்து விரைவில் விமான சேவை தொடங்கப்படும் என்று மத்திய விமான போக்குவரத்து துறை இணை அமைச்சர் பிரபுல் படேல் தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலையத்தின் ஓடுபாதை நீடிக்கப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது. அத்துடன் 128 கோடி ரூபாய் செலவில் பிரமாண்டமாக முனையக் கட்டிடம் கட்டப்பட்டுள்ளது. நவீன வடிவமைப்பிலான இந்த கட்டிடம் 17 ஆயிரத்து 700 சதுரஅடி பரப்பில் அமைந்துள்ளது. இந்த தரம் உயர்த்தப்பட்ட புதிய விமான நிலைய கட்டிடத் திறப்பு விழா நேற்று மாலை நடந்தது.
சிங்கப்பூர், இலங்கை, துபாய் போன்ற அயல்நாடுகளுக்கு நேரடியாக மதுரையில் இருந்து செல்வதற்கு விமான சேவை இல்லை. சென்னை, திருச்சி போன்ற இடங்களுக்கு சென்று தான் அந்த நாடுகளுக்கு செல்லவேண்டி உள்ளது. அவ்வாறு இல்லாமல் நேரடியாக விமான சேவை இருக்கவேண்டும் என்று தெரிவித்துள்ளார். மிக விரைவில், மதுரை விமான நிலையத்தில் இருந்து அயல்நாட்டிற்கு விமானம் இயக்கப்படும். அது பயணிகள் போக்குவரத்து மட்டுமல்லாமல் சரக்குகள் போக்குவரத்தும் தொடங்கப்படும் என்று பிரபுல் பட்டேல் தெரிவித்துள்ளார்.
0 comments:
Post a Comment