இதுகுறித்து கனரக வாகனங்கள் துறை அமைச்சகத்தின் செயலாளர் பீ.எஸ்.மீனா கூறுகையில்,
நாட்டின் பொருளாதாரத்தில் ஏற்பட்டு வரும் அதிவேக வளர்ச்சியால், கார்கள், இருசக்கர வாகனங்கள் மற்றும் வர்த்தக வாகனங்கள் விற்பனை வரலாறு காணாத அளவில் அதிகரித்து வருகிறது. மோட்டார் வாகனங்கள் உற்பத்தியில் ஏற்பட்டுள்ள எழுச்சிக்கு இதுவே முக்கிய காரணமாகும்.
கடந்த 2005-06ஆம் நிதி ஆண்டில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி 97.44 லட்சம் எண்ணிக்கைகளாக இருந்தது. இது, சென்ற 2009-10ஆம் நிதி ஆண்டில் சுமார் இரண்டு மடங்கு அதிகரித்து, 1.41 கோடியாக அதிகரித்துள்ளது. முந்தைய நிதி ஆண்டுடன் ஒப்பிடும்போது இது, 25 சதவீதம் (1.12 கோடி வாகனங்கள்) அதிகமாகும். நடப்பு நிதி ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மோட்டார் வாகனங்கள் உற்பத்தி, சென்ற நிதி ஆண்டின் இதே காலத்தைக் காட்டிலும் 32.4 சதவீதம் அதிகரித்துள்ளது.
அடுத்த 10 ஆண்டுகளில் வாகனங்கள் விற்பனை நான்கு மடங்கு அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அப்போது ஆண்டிற்கு பயணிகள் வாகனங்கள் விற்பனை 90 லட்சம் எண்ணிக்கையாகவும், இருசக்கர வாகனங்கள் விற்பனை 3 கோடியாகவும் உயரும் என முன்னறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து வரும் 2020ஆம் ஆண்டுக்குள் வாகனங்கள் உற்பத்தியில் முன்னிலை வகிக்கும் ஐந்து நாடுகளுள் ஒன்றாக இந்தியா உருவெடுக்கும் என மீனா மேலும் தெரிவித்தார்.
0 comments:
Post a Comment