இன்னமும் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதால், தனி நபர் வருமானம் சிறப்பாக இல்லை. தேசிய பொருளாதாரம் வலுப்படவில்லை. சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் சமாளிக்க முடியாமல் மூடப்படுகின்றன. வெஸ்டர்ன் பாங்க் ப்யூரிடோ ரிகோ, சி.எப்., பாங்க் கார்பரேஷன், ஆர்-ஜி பிரிமியர் பாங்க் ஆகியவை சமீபத்தில் மூடப்பட்டன.கடந்த மார்ச் மாதம் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டன. பிப்ரவரியில் 15 வங்கிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட போது மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 140. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதால் இனி அபாயம் அதிகம் வராது என்று கூறப்படுகிறது.
Showing posts with label வங்கி. Show all posts
Showing posts with label வங்கி. Show all posts
அமெரிக்காவில் 64 வங்கிகள் மூடல்
அமெரிக்காவில் வங்கிகள் ஸ்திரத்தன்மை இழந்து மூடுவது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 64 வங்கிகள், பலமிழந்து செயல்படாமல் மூடப்பட்டிருக்கின்றன.உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. இதில், அமெரிக்கா முதலில் பாதிப்பிற்கு உள்ளானதும், பெரிய வங்கிகள் மூடப்பட்டன.கிரெடிட் கார்டு கலாசாரத்தில் மூழ்கிய அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு வந்ததும் முதலில் அடிவாங்கியது வங்கித் துறைகள் தான். அதை நிமிர்த்த ஒபாமா நிர்வாகம், லட்சக்கணக்கான கோடிகள் ஊக்குவிப்பை அள்ளி வழங்கின.
Labels:
வங்கி
10 ரூபாய் நாணயங்களை பத்திரப்படுத்தும் பொதுமக்கள்
ரிசர்வ் வங்கி கோடிக்கணக்கில் 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டுள்ளது. ஆனால், சந்தை புழக்கத்தில் இதுவரை ஒரு நாணயம் கூட வரவில்லை.ரிசர்வ் வங்கி, இந்த ஆண்டு ஜூன் மாதம் புதிய 10 ரூபாய் நாணயங்களை வெளியிட்டது. இவை வழக்கமான நாணயங்கள் போல் இல்லாமல் இரு வகையான உலோகங்களில் செய்யப்பட்டிருந்தது.
வெளிவட்டம் செம்பு உலோகத்திலும், உள்வட்டம் நடுவில் தேனிரும்பிலும் செய்யப்பட்டுள்ளது. இந்த நாணயம் ஒன்றில் சூரியனும், இன்னொன்றில் குறுக்கு கோடுகள் என இரண்டு விதமான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டன.
ரிசர்வ் வங்கியில் வைக்கப்பட்டுள்ள தானியங்கி இயந்திரங்கள் மூலம் ரூ.50, 100 ரூபாய் செலுத்தி, 10 ரூபாய் நாணயங்களை பெறலாம். அதேபோல் சிறப்பு மையங்கள் மூலம் ரூ.500, ரூ.1000 மதிப்புக்கும் நாணயங்களை வாங்கலாம். இப்படி சென்னை ரிசர்வ் வங்கி மூலம் இதுவரை ரூ.100 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் விடப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை சந்தையில் 10 ரூபாய் நாணயங்கள் புழக்கத்தில் இல்லை.
இந்த 10 ரூபாய் நாணயங்கள் வித்தியாசமாக, மக்களை கவரும் விதத்தில் பழங்கால பொற்காசுகளை போன்று இருப்பதால் வாங்கும் பொதுமக்கள், கடைக்காரர்கள் பத்திரப்படுத்தி விடுகிறார்கள். தமிழகத்தில் மட்டுமின்றி மற்ற மாநிலங்களிலும் இதே நிலைமைதான்.
நாடு முழுவதும் அக்டோபர் மாதம் வரை ரூ.3300 கோடி மதிப்பிலான 10 ரூபாய் நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன.
Labels:
வங்கி
கள்ள நோட்டு சிக்கினார் வாலிபர் !
சென்னை தியாகராயநகர் துரைசாமி ரோட்டில் உள்ள ஒரு ஜவுளிக்கடைக்கு வெளி மாநில வாலிபர் ஒருவர் துணி வாங்கி சென்றார். துணிகளை வாங்கி விட்டு ரூ. 500 ஐ கடைக்காரரிடம் கொடுத்தார்.அப்போது கடைக்காரருக்கு 500 ரூபாய் மீது சந்தேகம் ஏற்பட்டது. மாம்பலம் காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்தார். போலீசார் உடனடியாக கடைக்கு வந்து 500 ரூபாயை சோதனை செய்தனர். அப்போது அது கள்ள நோட்டு என்பது தெரிய வந்தது. உடனே அந்த வெளிமாநில வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவனது பெயர் சாதிக் (29). மேற்கு வங்காளத்தைச் சேர்ந்தவன் என்பது தெரிந்தது.
அங்கிருந்து கள்ள நோட்டுக்களை எடுத்து சென்னையில் புழக்கத்தில் விட்டேன். மேலும் அவனிடம் நடந்திய விசாரணையில், அபில் சாதிக் என்பவனையும் போலீசார் கைது செய்தனர். மேலும் அபில்சாதிக் வைத்திருந்த பையில் ரூ. 30 ஆயிரத்துக்கு 500 ரூபாய் கள்ள நோட்டுகள், மற்றும் ஒரிஜினல் ரூபாய் 4,300 இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர்.
Labels:
வங்கி
Subscribe to:
Posts (Atom)