இன்னமும் அமெரிக்காவில் வேலையில்லாத் திண்டாட்டம் தொடர்வதால், தனி நபர் வருமானம் சிறப்பாக இல்லை. தேசிய பொருளாதாரம் வலுப்படவில்லை. சிறிய மற்றும் நடுத்தர வங்கிகள் சமாளிக்க முடியாமல் மூடப்படுகின்றன. வெஸ்டர்ன் பாங்க் ப்யூரிடோ ரிகோ, சி.எப்., பாங்க் கார்பரேஷன், ஆர்-ஜி பிரிமியர் பாங்க் ஆகியவை சமீபத்தில் மூடப்பட்டன.கடந்த மார்ச் மாதம் மட்டும் 19 வங்கிகள் மூடப்பட்டன. பிப்ரவரியில் 15 வங்கிகள் மூடப்பட்டன. கடந்த ஆண்டில் பொருளாதார பாதிப்பு ஏற்பட்ட போது மூடப்பட்ட வங்கிகள் எண்ணிக்கை 140. நடப்பாண்டின் முதல் மூன்று மாதங்களில் அமெரிக்க பொருளாதாரம் 3.2 சதவீத வளர்ச்சி கண்டிருப்பதால் இனி அபாயம் அதிகம் வராது என்று கூறப்படுகிறது.
அமெரிக்காவில் 64 வங்கிகள் மூடல்
அமெரிக்காவில் வங்கிகள் ஸ்திரத்தன்மை இழந்து மூடுவது அதிகரித்து வருகிறது. நடப்பு ஆண்டில் 64 வங்கிகள், பலமிழந்து செயல்படாமல் மூடப்பட்டிருக்கின்றன.உலகம் முழுவதும் ஏற்பட்ட பொருளாதார மந்த நிலை பாதிப்பு இன்னமும் தொடர்கிறது. இதில், அமெரிக்கா முதலில் பாதிப்பிற்கு உள்ளானதும், பெரிய வங்கிகள் மூடப்பட்டன.கிரெடிட் கார்டு கலாசாரத்தில் மூழ்கிய அமெரிக்காவில் பொருளாதார பாதிப்பு வந்ததும் முதலில் அடிவாங்கியது வங்கித் துறைகள் தான். அதை நிமிர்த்த ஒபாமா நிர்வாகம், லட்சக்கணக்கான கோடிகள் ஊக்குவிப்பை அள்ளி வழங்கின.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment