பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு விடைத்தாள் மதிப்பீட்டு பணி ஏப்., 15ல் துவங்கி, ஏப்., 29ல் நிறைவடைந்தது. மதுரை மாவட்டத்தில் உள்ள விடைத்தாள்கள் கும்பகோணம் மையத்தில் மதிப்பீடு செய்யப்பட்டன. விடைத்தாளின் முதல் பக்கத்தில், வினா எண்களுடன், விடைகளுக்கான மதிப்பெண்கள் பதிவு செய்யப்படும்.
மதிப்பீடு செய்யும் பணியில் பணியில் ஈடுபட்டிருந்த ஆசிரியர் ஒருவர், ஒரு விடைத்தாளை எடுத்த போது அதிர்ச்சியடைந்தார். விடைத்தாள் மதிப்பீடு செய்யாமலே, முதல் பக்கத்தில் மதிப்பெண்கள் பதிவு செய்யப்பட்டிருந்தது. இது தொடர்பாக விடைத்தாள் திருத்தும் மைய அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், நடந்த விசாரணையில் மதுரை விக்கிரமங்கலம் பள்ளி மாணவருடைய விடைத்தாள் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த மாணவன் இதனை எழுதினாரா, அல்லது வேறு யாராவது எழுதினார்களா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது. இந்த தேர்வு மையத்தில் பணிபுரிந்த தேர்வு அதிகாரிகள், ஆசிரியர்களிடம் விசாரணை நடத்துவதற்காக சென்னைக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.
0 comments:
Post a Comment