காரைக்குடி : வங்கி கடன் கிடைக்காததால், பி.எட்., தேர்வு எழுத முடியாமல் காரைக்குடி மாணவி ரோஸ்பானு பரிதவிக்கிறார்.காரைக்குடி செஞ் சையை சேர்ந்த இவரது தந்தை கூலி தொழிலாளி. திருப்புத்தூர் அருகே தனியார் கல்லூரியில், கடந்த ஆக., 19 ம் தேதி, பி.எட்., வகுப்பில் சேர்ந்தார்.கடந்த ஆக., 29 ம் தேதி, காரைக்குடி இந்தியன் வங்கியில் கல்வி கடனுக்காக மனு செய்தார். ஆனால், விண் ணப்பத்தை பெறாமல் வங்கி அதிகாரிகள் அலைக்கழிக்கின்றனர். தொடர்ந்து, கல்வி கடனுக்காக போராடி வருகிறார்.இந்நிலையில், வரும் 17ம் தேதி தேர்வு நடக்கவுள்ளது. கட்டணம் செலுத்தாததால், தேர்வு எழுதுவது கேள்விக்குறியாகியுள்ளது.
மாணவி கூறுகையில், ''வசதி படைத்த மாணவர்களுக்கு தான் கல்வி கடன் வழங்கப்படுகிறது. ஏழ்மையான மாணவர்களுக்கு கடன் வழங்க தயங்குகின்றனர்,'' என் றார்.
இந்தியன் வங்கி முதன்மை மேலாளர் முத்தையா கூறுகையில், ''மாணவியிடம் இருந்து கடந்த 15 நாட்களுக்கு முன் தான், விண்ணப்பம் பெறப்பட்டது. கடன் விரைவில் வழங்கப்படும். தேர்வு கட்டண தாமதம் குறித்து, கல்லூரி முதல்வரிடமும் பேச தயாரக உள்ளோம்,'' என்றார்.
0 comments:
Post a Comment