சென்னை மேற்கு முகப்பேர் பகுதிகளில் குளுகுளு 'ஏசி' பொருத்தப்பட்ட பெரிய, பெரிய கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மீன், மாட் டிறைச்சி மற்றும் அழுகிய பழங் களை, அம்பத்தூர் நகராட்சி அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். அம்பத்தூர் நகராட்சிக்குட் பட்ட கடைகள், சூப்பர் மார்க் கெட்களில் நகராட்சி சுகாதாரத் துறையினர், கடந்த இரண்டு நாட் களாக சோதனையிட்டு வருகின்றனர். நேற்று முகப்பேர் மேற்கு பகுதிகளில் உள்ள பிரஸ் அண்ட் பிரஸ், ஸ்பென்சர்ஸ், ரிலையன்ஸ், மோர் போன்ற சூப்பர் மார்க்கெட்கள், காய்கறி, இறைச்சி விற்பனை கடைகளில் நகர் நல அலுவலர் டாக்டர் மணிமாறன், உணவு ஆய்வாளர் வெங்கடேசன், சுகாதார ஆய்வாளர் தங்கராஜ் உள்ளிட்ட குழுவினர், அதிரடி சோதனை மேற்கொண்டனர். குளுகுளு 'ஏசி' பொருத்தப் பட்ட, அதிநவீன சூப்பர் மார்க் கெட்டுகளில் சோதனை நடத்திய சுகாதாரக் குழுவினர் அதிர்ச்சியடைந்தனர். விற்பனை பிரிவில் இருந்த மீன்களில் பல கெட்டுப் போய் துர்நாற்றம் அடித்தது. அதை கையால் எடுத்து சோதனை செய்ததில், 'பிசுபிசு'வென இருந்தன. மற்றொரு கடையில் விற் பனைக்காக வைக்கப்பட்டிருந்த மாட்டிறைச்சியும் கெட்டுப் போய், துர்நாற்றம் வீசியது. கெட்டுப்போனது தெரியாமல் மறைக்க ஐஸ் கட்டிகளை நிரப்பியிருந்தனர். கெட்டுப்போன மீன் மற்றும் மாட்டு இறைச்சிகளை சுகாதாரக் குழுவினர் பறிமுதல் செய்தனர். அதேபோல், அழுகிப்போன காய்கறிகள், பழங்கள், காலாவதியான பிஸ்கட், எண்ணெய் போன்ற உணவுப் பொருட்களையும் பறிமுதல் செய்தனர். சுகாதாரக் குழுவினரின் சோதனையைப் பார்த்த வாடிக்கையாளர் ஒருவர், அங்கிருந்த பிளேடு பாக்கெட்டை எடுத்துக் காட்டினார். அதில் கடந்த 2007ம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக இருந்தது. இதையடுத்து, அந்த பாக்கெட் களையும் சுகாதாரக் குழுவினர் பறிமுதல் செய்தனர்.
இந்த அதிரடி நடவடிக்கை மேலும் தொடரும் என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
0 comments:
Post a Comment