மெரீனாவுக்கு கூட்டம் அலைமோதுவதால்காமராஜர் சாலையில் போக்குவரத்து மாற்றம்

கோடை விடுமுறையை யொட்டி, காமராஜர் சாலையில் இன்று முதல் போக்குவரத்து மாற்றங்கள் செய்யப் பட்டுள்ளன.
போக்குவரத்து காவல் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:கோடை விடுமுறையை யொட்டி, ஆயிரக்கணக்கான பொதுமக்கள் சென்னையில் பல இடங்களில் இருந்து மெரீனா கடற்கரைக்கு, மாலை பொழுதை இன்பமாக கழிக்க கூடுகின்றனர்.இதனால், காமராஜர் சாலையில், நேப்பியர் பாலம் முதல் கண்ணகி சிலை வரையில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.


போக்குவரத்து நெரிசலை குறைக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பு மற்றும் வசதியைக் கருதி இப்பகுதியில் போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல், மாலை 5 மணியில் இருந்து இரவு 8 மணி வரை, கோடை காலம் முடியும் வரையில் நடைமுறைப்படுத்தப்படுகிறதுஇதன் படி, காந்தி சிலையில் இருந்து வடசென்னை நோக் செல்லும் மாநகர பஸ்கள் உள்ளிட்ட அனைத்து வாகனங்களும் உழைப்பாளர் சிலை நோக்கி செல்ல அனுமதி கிடையாது.அவ்வாகனங்கள் கண்ணகி சிலையில் இடதுபுறமாக திரும்பி பாரதி சாலை வழியாக பெல்ஸ் ரோடு சென்று வலது புறம் திரும்பி வாலாஜா சாலை வழியாக காமராஜர் சாலையை சென்றடையலாம்.வடசென்னையில் இருந்து தென்சென்னை நோக்கி செல்லும் வாகனங்கள் போர் நினைவுச் சின்னத்தில் இருந்து காந்தி சிலைக்கு வழக்கம் போல் செல்லலாம்.போக்குவரத்து நெரிசலை குறைக்க, பெல்ஸ் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பாரதி சாலை சந்திப்பில் இருந்து செல்லலாம், வாலாஜா சாலையில் இருந்து செல்ல தடை செய்யப்பட்டுள்ளது.வாலாஜா சாலையின் ஒரு பகுதி பெல்ஸ் சாலை சந்திப்பில் இருந்து உழைப்பாளர் சிலை வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது.உழைப்பாளர் சிலையில் இருந்து வாலாஜா சாலை நோக்கி வாகனங்கள் செல்ல தடை செய்யப்படுகிறது.பாரதி சாலையின் ஒரு பகுதி கண்ணகி சிலையில் இருந்து பெல்ஸ் சாலை சந்திப்பு வரை ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. பெல்ஸ் ரோடு மற்றும் பாரதி சாலை சந்திப்பில் இருந்து பாரதி சாலை வழியாக கண்ணகி சிலை நோக்கி செல்வதற்கு தடைசெய்யப்படுகிறது.இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக் கப்பட்டுள்ளது.

0 comments: