ஹெல்மெட் அணிந்திருந்ததால் உயிர் தப்பினேன்: பஸ்சில் மோதி உயிர் பிழைத்த வாலிபர் மெய்சிலிர்ப்பு

''ஹெல்மெட் அணிவது எவ்வளவு முக்கியம் என்பதை இப்போது தான் உணர்ந்தேன். ஹெல்மெட் அணிந்திருந்ததால் தான் இவ்வளவு பெரிய விபத்து நடந்தும், சிறு காயத்துடன் உயிர் பிழைத்தேன்,'' என ஆவடி அருகே நின்றிருந்த பஸ்சின் பின் பகுதியில், பைக்கில் மோதி விபத்துக்குள்ளான வாலிபர் மெய்சிலிர்த்தபடி கூறினார்.


சென்னை நகரில் நாளுக்கு நாள் வாகனங்களின் எண் ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்கிறது. அதற்கேற்ப, விபத் துக்களும் அதிகமாக நடக்கிறது. 'விபத்துக் களை தவிர்க்க போக்குவரத்து விதிமுறைகளை கடைப் பிடியுங்கள்; காரில் செல்லும் போது 'சீட் பெல்ட்' அணியுங் கள். பைக்கில் செல்பவர்கள் கட் டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும்' என போக்குவரத்து போலீசார் தொடர்ந்து அறிவுறுத்தி வருகின்றனர்.


நாளொன்றுக்கு குறைந்தது 10 விபத்துக்களாவது நடக்கின்றன. வாரத்தில் நான்கைந்து பேர் சாலை விபத்தில் உயிரிழக்கின்றனர். கடந்த 5ம் தேதி, சென்னையில் இருந்து ஆவடி நோக்கிச் சென்ற பைக் ஒன்று, தனியார் பாலிடெக்னிக் எதிரே, நின்று கொண்டிருந்த தனியார் பஸ்சின் பின்பகுதியில் மோதி விபத்துக் குள்ளானது. இந்தக் காட்சியைப் பார்த்தவர்கள் அனைவரும், பைக்கில் சென்றவர் கட்டாயம் உயிரிழந்திருப்பார் என்றே நினைத்தனர். ஆனால், விபத்தில் சிக்கிய பைக் ஓட்டி, அதிர்ஷ்டவசமாக லேசான காயத்துடன் உயிர் தப்பினார். இக்காட்சியை பார்த்தவர்கள் அனைவரும் ஆச்சரியப்பட்டனர்.


நடந்த சம்பவத்தை, விபத்தில் சிக்கிய வாலிபரே விளக்கி கூறுகிறார்.எனது பெயர் கதிர்வேல் (21). எனது அப்பா பெயர் பழனிசாமி. நான், ஆவடி, காந்திநகர் முதல் குறுக்குத் தெருவில் வசித்து வருகிறேன். தவணை முறையில் துணி விற்பனை செய்து வருகிறேன்.பைக்கில் எங்கு சென்றாலும் தலையில் ஹெல்மெட் அணிந்து தான் செல்வேன். கடந்த 5ம் தேதியும் ஹெல்மெட் அணிந்து, பைக்கில் சென்னை, சேத்துப் பட்டுக்கு ஒரு வேலையாக சென்றேன்.


வேலையை முடித்து விட்டு, வீட்டிற்கு திரும்பினேன்.மதியம் 11.30 மணியளவில் ஆவடி, தனியார் பாலிடெக்னிக் எதிரே வந்தபோது, கடும் வெயில் காரணமாக, கண்கள் இருட்டி, மயக்கம் வருவது போல் இருந்தது. அப்புறம், என்ன நடந்தது என்பதே எனக்குத் தெரியவில்லை. எனது பைக், சாலையோரம் நின்றிருந்த ஒரு பஸ்சின் பின்பகுதியில் மோதியிருந்தது. நான் பைக் அருகே சாலையோரம் விழுந்து கிடந்தேன். அவ்வழியாக சென்றவர்கள் என்னை அருகில் இருந்த மரத்தடியில் அமர்த்தி, தண்ணீர் கொடுத்தனர்.


ஹெல்மெட் அணிந்திருந்ததால் தலையில் காயம் எதுவும் இல்லை. மூக்கில் இருந்து சிறிது ரத்தம் வந்தது. உடலில் சிறு வலி ஏற்பட்டது. உடலில் வேறெங் கும் காயம் இல்லை.பின்னர், அங்கு வரவழைக்கப் பட்ட 108 ஆம்புலன்ஸ் வேனில் ஏற்றி, அம்பத்தூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். டாக்டர்கள் எனக்கு ஸ்கேனிங் உட்பட முழு உடல் பரிசோதனை செய்தனர்.இதில், இடது கையில் எலும்பு முறிவும், இடது நடுவிரலில் சிறு காயம், வலது காலில் 'சைலன்சர்' சுட்டதால் ஏற்பட்ட தீக்காயம், வலது தோள்பட்டையில் வலி ஆகியவை இருந்தது.


உடலில் பெரிய காயமோ, தலையில் பலத்த அடியோ இல்லை என டாக்டர்கள் கூறினர்.நான் அணிந்திருந்த ஹெல் மெட் தான், தலையில் காயமில் லாமலும், உடலில் சிறு காயத்துடனும் தப்பியதற்கு காரணம். ஹெல்மெட் அணிவது எவ் வளவு முக்கியம் என்பதை அன்று தான் உணர்ந்தேன். இனிமேலும், நான் ஹெல் மெட் அணிந்து தான் பைக்கில் செல்வேன்.இவ்வாறு கதிர்வேல் கூறினார்.

0 comments: