ஜெயவர்தனா அதிரடி: இலங்கை வெற்றி * வெஸ்ட் இண்டீஸ் பரிதாபம்

ஜெயவர்தனா அதிரடி கைகொடுக்க, வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான "டுவென்டி-20' உலககோப்பை, சூப்பர்-8 போட்டியில், இலங்கை அணி 57 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.


வெஸ்ட் இண்டீசில் மூன்றாவது "டுவென்டி-20' உலககோப்பை கிரிக்கெட் தொடர் நடக்கிறது. சூப்பர்-8 சுற்றில் நேற்று நடந்த போட்டியில், குரூப்-எப் பிரிவில் இடம் பெற்ற வெஸ்ட் இண்டீஸ், இலங்கை அணிகள் மோதின. டாஸ் ஜெயித்த இலங்கை கேப்டன் சங்ககரா பேட்டிங் தேர்வு செய்தார்.


ஜெயசூர்யா "அவுட்': இலங்கை அணிக்கு ஜெயசூர்யா, ஜெயவர்தனா துவக்கம் தந்தனர். தொடர்ந்து பார்ம் இன்றி சொதப்பி வரும் ஜெயசூர்யா, நேற்றும் ஏமாற்றினார். இவர் ரோக் வேகத்தில் 6 ரன்களுக்கு அவுட்டானார்.


சூப்பர் ஜோடி: பின்னர் ஜெயவர்தனாவுடன், சங்ககரா இணைந்தார். இந்த ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. "டுவென்டி-20' அரங்கில், ஜெயவர்தனா 4, சங்ககரா 6 வது அரை சதம் கடந்தனர். 3 சிக்சர், 5 பவுண்டரி உட்பட 68 ரன்கள் சேர்த்து வெளியேறினார் சங்ககரா. 2 வது விக்கெட்டுக்கு சங்ககரா, ஜெயவர்தனா ஜோடி 166 ரன்கள் குவித்து அசத்தியது.


சதம் நழுவல்: அடுத்து வந்த கபுகேதரா 6 ரன்களுக்கு அவுட்டாகி ஏமாற்றினார். மறுமுனையில் அதிரடி காட்டிய ஜெயவர்தனா சதமடிக்கும் வாய்ப்பை 2 ரன்களில் நழுவ விட்டார். இவர் அவுட்டாகாமல் 98 ரன்கள் (4 சிக்சர், 9 பவுண்டரி) குவிக்க, 20 ஓவர் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்த இலங்கை அணி, 195 ரன்கள் சேர்த்தது.


வெஸ்ட் இண்டீஸ் ஏமாற்றம்:கடின இலக்கை வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு துவக்க வீரர்களான கெய்ல் (5), சந்தர்பால் (11) பெரும் ஏமாற்றம் அளித்தனர். அடுத்து வந்த சர்வான் (28), பிராவோ (23) ஆறுதல் அளித்தனர். பின்னர் களமிறங்கிய பிளட்சர் (16), போலார்டு (9), ஹிண்ட்ஸ் (5), சமி (2) ஆகியோர் ஒற்றை இலக்கங்களில் பெவிலியன் திரும்பினர். 20 ஓவர் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்த வெஸ்ட் இண்டீஸ் அணி 138 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வி அடைந்தது. ஆட்ட நாயகனாக இலங்கையின் ஜெயவர்தனா தேர்வு செய்யப்பட்டார்.


------------


ஸ்கோர் போர்டு


இலங்கை


ஜெயவர்தனா -அவுட் இல்லை- 98 (56)
ஜெயசூர்யா (கே) டெய்லர் (ப) ரோக் 6 (10)
சங்ககரா (கே) போலார்டு (ப) பிராவோ 68 (49)
கபுகேதரா (ப) ரோக் 6 (4)
தில்ஷன் -அவுட் இல்லை- 4 (1)
உதிரிகள் 13
மொத்தம் (20 ஓவரில் 3 விக்., இழப்பு) 195
விக்கெட் வீழ்ச்சி: 1-7 (ஜெயசூர்யா), 2-173 (சங்ககரா), 3-191 (கபுகேதரா).
பந்து வீச்சு: ரோக் 4-0-27-2, டெய்லர் 3-0-28-0, பிராவோ 3-0-36-1, பென் 4-0-41-0, சமி 2-0-23-0, போலார்டு 4-0-38-0.



வெஸ்ட் இண்டீஸ்


கெய்ல் (கே) மாத்யூஸ் (ப) குலசேகரா 5 (4)
சந்தர்பால் (கே) கபுகேதரா (ப) மாத்யூஸ் 11 (9)
சர்வான் (கே) + (ப) மெண்டிஸ் 28 (33)
பிராவோ (கே) மாத்யூஸ் (ப) மலிங்கா 23 (23)
பிளட்சர் (ப) மலிங்கா 16 (18)
போலார்டு (கே) கபுகேதரா (ப) மெண்டிஸ் 9 (10)
சமி எல்.பி.டபிள்யு., (ப) மலிங்கா 2 (3)
ஹிண்ட்ஸ் எல்.பி.டபிள்யு., (ப) மலிங்கா 5 (7)
டெய்லர் -அவுட் இல்லை- 16 (9)
பென் -அவுட் இல்லை- 6 (4)
உதிரிகள் 17
மொத்தம் (20 ஓவரில் 8 விக்., இழப்பு) 138
விக்கெட் வீழ்ச்சி: 1-22 (சந்தர்பால்), 2-23 (கெய்ல்), 3-76 (பிராவோ), 4-82 (சர்வான்), 5-99 (போலார்டு), 6-110 (பிளட்சர்), 7-116 (ஹிண்ட்ஸ்), 8-122 (சமி).
பந்து வீச்சு: குலசேகரா 4-0-27-1, மாத்யூஸ் 2-0-13-1, மெண்டிஸ் 4-0-24-3, பெரேரா 2-0-13-0, முரளிதரன் 4-0-26-0, மலிங்கா 4-0-28-3.

0 comments: