குவைத்தில் சிறப்புக் கருத்தரங்கம்

குவைத் காயிதே மில்ல‌த் பேர‌வையின் சார்பில் ஏப்ரல் 30ம் தேதி இரவு 07.00 மணியளவில் குவைத் மிர்காப் பகுதியிலுள்ள முபாரக்கியா தர்பார் (பழைய தஞ்சை) உணவகம் மர்ஹும் தளபதி திருப்பூர் மொய்தீன் நினைவரங்கில், சமுதாய பிரச்னைகளும் முஸ்லிம் லீக்கின் அணுகுமுறையும் அன்றும், இன்றும் என்னும் தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெற்றது. முகம்மது பந்தர் ஆர்.எம்.பாருக் (டி.எம்.சி.ஏ) தலைமை வகிக்க, வடக்கு மாங்குடி எஸ்.எச்.அப்துல்கரீம் கிராத் ஓதினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினர்கள் வடக்கு மாங்குடி ஹாஜி.முத்தலிப், கூனிமேடு ஹபிபூர் ரஹ்மான், சென்னை ஷகின்ஷாகான், டிம்.எம்.சி.ஏ துணை பொதுச் செயலாளர் அப்துல் ரசாக் அல் பானி, பேரவை செய்தி தொடர்பாளர் ஆரிப் மரைக்காயர் ஆகியோர் முன்னிலை வகிக்க, பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் ஹசன் முகம்மது வரவேற்புரையாற்றினார். பேரவை அமைப்புக்குழு உறுப்பினரும், டி.எம்.சி.ஏ காப்பாளர் குழு அய்யம்பேட்டை கம்பளி பஷிரும் நிகழச்சியை தொகுத்து வழங்க, சிறப்புக் கருத்தரங்கம் இனிதே துவங்கியது.


பெரம்பலூர் மெளலவி முகம்மது ஷரிப் மன்பயீ ஹஸரத் (பேரவை உலமாக்கள் பிரிவு பொறுப்பாளர்), ஹாஜி நாஸர் ரப்பாணி (அல் அமீன் உம்ரா சர்வீஸ்) பேரவை உலமாக்கள் பிரிவு, வல்லம் ஷேக் ஆதம் (தலைவர்.முத்தமிழ் அறிஞர் நற்பணி மன்றம்), புத்தாநத்தம் ஹாஜி.நாஸர் (பேரவை அமைப்புக்குழு உறுப்பினர், சிற‌ப்புரையாற்றினார்கள். இறுதியாக குவைத் காயிதே மில்லத் பேரவை அமைப்பாளர் திருப்பத்தூர் டாக்டர் கே.எஸ்.அன்வர்பாட்சா சிறப்பாக வரலாற்று ரீதியான நிறைவுரையாற்றினார். சமுதாய பாடகர்கள் தச்சன் குறிச்சி ஏ.கலிபுல்லா, அருப்புக்கோட்டை இராவுத்தர் கனி சமுதாய எழுச்சி பாடல்கலை பாடினார்கள். அய்யப்பேட்டை கம்பளி பஷீர் துஆ ஓதினார்.


பேரவை அமைப்புக்குழு உறுப்பினர் விருத்தாசலம் ஏ.நிஜாமுதீன் நன்றி கூற, இரவு உணவோடு நிகழ்ச்சி இனிதே நிறைவுற்றது. கருத்தரங்கத்திற்கு சிறப்பு அழைப்பாளர்களாக அய்யம்பேட்டை சக்கராப்பள்ளி ஜமாத் செயலாளர் ஆவூர் பஷீர், ஒருங்கிணைப்பாளர் தம்பிதுரை என்கிற அப்துல் முகம்மது, திசா அன்வர், டி.எம்.சி.ஏ பொருளாளர்.சாமிமலை ஜாகிர், குவைத் தமிழோசை கவிஞர்.சிவக்குமார், கவிஞர்.சிவமணி, புதுவை கவிஞர் முபாரக், பெரம்பலூர் கவிஞர் பஷீர் அகமது, மஹாராஜா டெக்ஸ்டைல்ஸ் அப்துல்ரசாக், மரைக்காயர் அப்துல் ஜப்பார், ஹபீப் ராஜா மற்றும் தோழமை இயக்க நிர்வாகிகளும், ஆன்றோர்களும், சான்றோர்களும், உலமா பெருமக்களும் பெருந்திரளாக கலந்து கொணடனர்.

0 comments: