சுரேஷ் ரெய்னா புதிய கேப்டன்!

ஜிம்பாப்வே தொடருக்கு இளம் இந்திய அணி தேர்வு செய்யப்பட்டுள்ளது. கேப்டனாக சுரேஷ் ரெய்னா நியமிக்கப்பட்டுள்ளார். தோனி, சச்சின், சேவக் உள்ளிட்ட "சீனியர்' வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.
ஜிம்பாப்வே செல்லும் இந்திய அணி முத்தரப்பு ஒரு நாள் தொடரில்(மே 28-ஜூன் 9) பங்கேற்கிறது. இதில் மூன்றாவது அணியாக இலங்கை கலந்து கொள்கிறது. பின் இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் இரண்டு "டுவென்டி-20' போட்டிகளில்(ஜூன் 12, 13) விளையாட உள்ளன. இதற்கான இந்திய அணியை தேர்வு செய்தவற்கான கூட்டம் நேற்று கொடைக்கானலில் நடந்தது. பலம்குன்றிய ஜிம்பாப்வே என்பதால், 15 பேர் கொண்ட இரண்டாம் தர அணி தேர்வு செய்யப்பட்டது.

யுவராஜ் இல்லை:

தோனி, யுவராஜ் சிங், ஹர்பஜன், காம்பிர், நெஹ்ரா, பிரவீண் குமார் போன்ற சீனியர் வீரர்களுக்கு ஓய்வு தரப்பட்டது. சுரேஷ் ரெய்னா கேப்டனாக நியமிக்கப்பட்டார். துணை கேப்டன் வாய்ப்பு விராத் கோஹ்லிக்கு வழங்கப்பட்டது. "ஸ்பெஷலிஸ்ட்' விக்கெட் கீப்பர் அந்தஸ்தில் தினேஷ் கார்த்திக் இடம் பெற்றுள்ளார். ம.பி.,யை சேர்ந்த கீப்பர்-பேட்ஸ்மேன், நமன் ஓஜாவும் உள்ளார். முரளி விஜய், ரோகித் சர்மா, ரவிந்திர ஜடேஜா, யூசுப் பதானுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

அனுபவம் இல்லை:

உமேஷ் யாதவ்(விதர்பா), வினய் குமார்(கர்நாடகா), அ÷ஷாக் டிண்டா(மேற்கு வங்கம்), பங்கஜ் சிங்(ராஜஸ்தான்) ஆகிய அனுபவமில்லாத வேகப்பந்துவீச்சாளர்கள் இடம் பெற்றுள்ளனர். ஐ.பி.எல்., தொடரில் அசத்திய இவர்கள், ஜிம்பாப்வே மண்ணிலும் திறமை நிரூபிக்க வேண்டும் சுழலுக்கு அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா உள்ளனர்.
"டுவென்டி-20' போட்டிகளுக்கு மட்டும் கூடுதலாக பியுஸ் சாவ்õலா, இந்திய அணியில் இணைந்து கொள்வார்.
இங்கிலாந்தில் நடக்க உள்ள முத்தரப்பு தொடருக்கான இந்தியா "ஏ' அணியும் அறிவிக்கப்பட்டது. இதற்கு சதேஷ்வர் பூஜாரா கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
முத்தரப்பு தொடருக்கான அணி: சுரேஷ் ரெய்னா(கேப்டன்), விராத் கோஹ்லி(துணை கேப்டன்), முரளி விஜய், தினேஷ் கார்த்திக்<, ரோகித் சர்மா, யூசுப் பதான், ரவிந்திர ஜடேஜா, அஷ்வின், உமேஷ் யாதவ், வினய் குமார், அ÷ஷாக் டிண்டா, பங்கஜ் சிங், அமித் மிஸ்ரா, பிரக்யான் ஓஜா, நமன் ஓஜா.
"டுவென்டி-20' அணி: முத்தரப்பு தொடருக்கான வீரர்களுடன் கூடுதலாக பியுஸ் சாவ்லா இடம் பெற்றுள்ளார்.


3 தமிழக வீரர்கள்
ஜிம்பாப்வே தொடருக்கு முரளி விஜய், தினேஷ் கார்த்திக், அஷ்வின் ஆகிய மூன்று தமிழக வீரர்கள் வாய்ப்பு பெற்றுள்ளனர். இதில் முரளி விஜய், அஷ்வின் ஆகியோர் சென்னை கிங்ஸ் அணிக்காக ஐ.பி.எல்., தொடரில் சிறப்பாக விளையாடியவர்கள். ஜிம்பாப்வே தொடரிலும் விஜய் தனது அதிரடியை தொடர வேண்டும். சுழலில், அஷ்வின் அசத்துவார் என நம்பலாம்.

0 comments: