பிரண்ட்லைனர் சேவை அமைப்பு இதுவரை ஒரு கோடி ரூபாய் நிதி உதவி செய்து சாதனை படைத்துள்ளது.குவைத்தில் பல துறைகளிலும் சாதித்து வரும் இந்தியர்களை உள்ளடக்கி, எழுத்தாளர் என்.சி.மோகன்தாஸ் எழுதி வரும் பிரண்ட்லைனர்ஸ் புத்தகத்தின் 14ம் பாகம் தற்போது வெளியானது.சமூக சேவையை உள்ளடக்கி தயாரிக்கப்பட்ட இந்த நூலில், குவைத் இந்திய தூதராக சேவைகள், இந்தியப் பள்ளிகள் மற்றும் பல்வேறு சேவை அமைப்புகள், என்.ஆர். ஐ., விவரங்கள் தொகுக்கப் பட்டுள்ளன.குவைத்தில் நடந்த நிகழ்ச்சியில், குவைத் இந்திய தூதர், இந்நூலை வெளியிட்டு பாராட்டி னார்.
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து முன்னாள் சி.பி.ஐ., இயக்குனர் ஜோஹிந்தர் சிங் பேசினார்.சிறப்பு விருந்தினராக ரமேஷ் பிரபா கலந்து கொண்டு பேசினார்.பிரண்ட்லைனர்ஸ் அமைப்பின் தலைவர் ருமானே, ஆலோசகர் லட்சுமி நாராயணன், துணைத் தலைவர் வேலு மற்றும் நிறுவனர் என்.சி.மோகன்தாஸ் இந்த அமைப்பு ஆரம்பித்தது முதல் இதுவரை ஒரு கோடி ரூபாய்க்கு மேல் செய்துள்ள நலத்திட்ட உதவிகளைப் பற்றி எடுத் துரைத்தனர்.
0 comments:
Post a Comment