Showing posts with label பராமரிப்பு பணி. Show all posts
Showing posts with label பராமரிப்பு பணி. Show all posts

பராமரிப்பு பணி

பாம்பன் ரயில்பாலத்தில் பாரமரிப்பு பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. பாம்பன் ரயில்பாலம் கடலின் நடுவே உள்ளதால் அங்கு தொடர்ந்து கண்காணிப்பு பணிகள் நடந்து வருகிறது. கடலின் உப்பு காற்று பட்டு அடிக்கடி துருப்பிடிக்கும். இதை தடுக்கும் விதமாக பெயின்ட் அடிக்கும் பணி குறிப்பிட்ட சில மாதங்களுக்கு ஒருமுறை நடக்கும். தற்போது மன்னார்வளைகுடாவில் புயல் மையம் கொண்டுள்ளதை தொடர்ந்து பலத்த காற்றும் வீசிவருகிறது. இதை தொடர்ந்து பாம்பன் ரயில் பாலத்தில் பராமரிப்பு பணிகளுடன் பெயின்ட் அடிக்கும் பணியும்மேற்கொள்ளப்பட்டு வருகிறது.