Showing posts with label போர். Show all posts
Showing posts with label போர். Show all posts

பிரிட்டிஷ் சிப்பாய்கள் சுட்டுக்கொலை

ஆப்கானிஸ்தான் நாட்டு காவலர் ஒருவரால் பிரிட்டனின் ஐந்து பாதுகாப்பு வீரர்கள் கொல்லப்பட்டுள்ள நிலையிலும், அங்குள்ள பாதுகாப்பு படையினருக்கு தொடர்ந்து பிரிட்டன் பயிற்சியளிக்கும் என்று பிரிட்டிஷ் பிரதமர் கார்டன் பிரவுண் கூறியுள்ளார்.

தாலிபான்கள் ஆப்கானிஸ்தான் படையினரை கண்டு மிகவும் பயப்படும் நிலையில், அவர்களுக்கு பயிற்சி அளிப்பது முக்கியமானது என்று கார்டன் பிரவுண் பிரிட்டிஷ் நாடாளுமன்றத்ததில் தெரிவித்துள்ளார்.


பிரிட்டிஷ் துருப்பினர் ஐவரை தாங்கள்தான் கொலை செய்தோம் என்று தாலிபான்கள் கூறியுள்ள நிலையில், தாலிபான்கள் ஆப்கானிஸ்தானின் காவல்துறையில் ஊடுருவியுள்ளார்கள் அல்லது காவல்துறையில் ஒரு உறுப்பினரை அவர்கள் பயன்படுத்தியிருக்கலாம் என்றும் கார்டன் பிரவுண் அவர்கள் தெரிவித்துள்ளார்.
ஹெல்மண்ட் மாகாணத்தில் ஒரு சோதனைச் சாவடியில் இடம்பெற்ற இந்தத் தாக்குதலில், பிரிட்டனைச் சேர்ந்த பல இராணுவ வீரர்கள் மற்றும் ஆப்கான் பொலிஸ் அதிகரிகள் பலரும் காயமடைந்துள்ளனர்.

இந்திய எல்லை அருகே சீனா படைகள்.

அருணாச்சல் பிரதேசத்தையொட்டியுள்ள இந்திய எல்லை அருகே சீனா தனது படைகளை குவித்து பயிற்சியில் ஈடுபட்டு வருவதாக தெரியவந்துள்ளது. கவுகாத்தியில் இன்று நடைபெற்ற பயங்கரவாத எதிர்ப்பு குறித்த கருத்தரங்கு ஒன்றில் கலந்துகொண்டு பேசிய இந்திய இராணுவ மேஜர் ஜெனரல் எஸ்.எஸ். ஜாக் இத்தகவலை தெரிவித்தார்.

அருணாச்சல் பிரதேசத்தில் சீன இராணுவம் அவ்வப்போது அத்துமீறி நுழைவதாக புகார் எழுந்துள்ள நிலையில்,சீனாவின் இந்த இராணுவ குவிப்பு குறித்த தகவலை ஜாக் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


அதே சமயம் சீனாவின் இந்த படை குவிப்பும்,பயிற்சியும் வருடத்தின் குறிப்பிட்ட நாளில் நடைபெறுவது வழக்கமான ஒன்றுதான் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். இந்த கருத்தரங்கில் கலந்துகொண்ட மேலும் பல இராணுவ அதிகாரிக்ள் மற்றும் துணை இராணுவப் படை அதிகாரிகள்,ஓய்வுபெற்ற முன்னாள் இராணுவ அதிகாரிகள் உள்ளிட்டோர் தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கைகள் குறித்த தங்களது கருத்துக்க்ளையும்,அனுபவங்களையும் பகிர்ந்துகொண்டனர்.