Showing posts with label மருத்துவம். Show all posts
Showing posts with label மருத்துவம். Show all posts

lமாபெரும் இலவச ஹோமியோ மருத்துவ முகாம் !

கடந்த (19.09.2010)காலை 10 மணிக்கு அதிராம்பட்டினம் கீழத்தெரு முஹல்லா சங்கத்தில் நடைப்பெற்றது இதை மாவட்ட இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தலைவர் PS ஹமீத் தலைமை வகித்தார் .இந்த முகாமை பட்டுக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினர் NR ரங்கராஜன் துவக்கி வைத்தார் . இந்த முகாமில் உச்சிமுதல் உள்ளங்கால் வரை உள்ள அனைத்து வியாதிகளுக்கும் பரிசோதனை செய்து பாதிக்கப்பட்ட வியாதியஸ்தர்களுக்கு இலவசமாக மருந்துகள் வழங்கப்பட்டன .இந்த முகாமில் 300 க்கும் மேற்ப்பட்ட பயானாளிகள் கலந்து கொண்டு பயன் பெற்றனர்.


இதில் சிறப்பு அழைப்பாளர்களாக பேரூர் மன்ற தலைவர் MMS அப்துல் வகாப் ,நகர முஸ்லிம் லீக் தலைவர் KK .ஹாஜா நஜ்முதீன் ,நகர முன்னாள் செயலாளர் Dr ஹாஜி MA முகமத்ஸாலிஹ். பொருளாளர் அப்துல் ரஹ்மான், நகர செயலாளர் வக்கீல் A முனாப் BABL , நகர இ அணி தலைவர் . MA ஷாகுல் ஹமீத், நகர மாணவர் அணி அமைப்பாளர் இதிரிஸ் அஹமது , மாவட்ட பிரதிநிதி MR ஜமால் முகம்மத் .உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டு இம்முகாமை சிறப்பாக வழிநடத்தினர் .

முகாமில் பணியாற்றிய ஸ்ரீ ஜெயேந்திராள் ஜனகல்யான் ஹோமியோ மருத்துவமனை மருத்துவர்கள் ஊழியர்கள் அனைவருக்கும் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பாக நினைவு பரிசுகள் வழங்கப்பட்டன .

இம்முகாமில் சகோதரர் மகிழங்கோட்டை மாரிமுத்து அவர்கள் தானாக முன்வந்து இந்த முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு உணவு வழங்கி தனது சமய நல்லிணக்கத்தை வெளிக்காட்டினார் .

இந்த முகாமை நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நிர்வாகிகள் சிறப்பாக செய்திருந்தனர் .

படம் :ஜேப்பி

உயிருக்குப் போராடும் சகோதரருக்கு உதவி தேவை..........

பரங்கிப்பேட்டை வட்டாத்தைக்காலைச் சேர்ந்த ஒரு சகோதரர் (அப்துல் சலிம் த/பெ: பாசா ஜான்) சுமார் ஒன்ரறையாண்டு முன்பு தனது கபிலீடம் (Sponsor) இருந்து தப்பித்து ரியாத் - ஜெத்தாவில் வேலை செய்து வந்தார். அவருக்கு மூளையில் கட்டி (Brain Tumor) ஏற்ப்ட்டு சுய நினைவு இல்லாமல் இருந்து வருகிறார் மேலும் அவர் நிலைமை மிக மோசமாக உள்ள்து. அவரை ஊருக்கு முறையாக அனுப்ப பல முயற்சிகள் செய்து வருகிறோம் அதில் பல சிக்க்ல்களை நாம் சந்தித்து வருகிறோம். ஆனால் அவரின் நிலைமை மிக மோசமாக உள்ளதால் அவரை சிகிச்சையின்றி அனுப்ப இயலாது
நேற்று ஜித்தா தமிழ்ச் சமூகத்தின் ஆரோக்யா மருத்துவமனை திறக்கப்பட்டுள்ள்து அங்கு சென்ற நாம் டாக்டர் முத்துக்குமாரை அனுகினோம், அவர் கூறுகையில் இந்த நிலையில் ஊருக்கு அனுப்ப இயலாது மேலும் அவரின் உயிருக்கு நாம் உத்திரவாதம் சொல்ல இயலாது, முதலில் சிகிச்சை தேவை,

இவருக்கு உடனே அறுவை சிகிச்சை செய்தாக வேண்டும் நாங்களே செய்துவிடுகிறோம் என்று கூறினார். ஜித்தா தமிழ் சங்கமும் இதற்கு உதவி செய்யும் என்று அவர்கள் நம்பிக்கை தந்தனர்…… (நன்றி கூற நாம் கடமைப்ப்ட்டு இருக்கிறோம்) அவர் இந்தியா சென்றாலும் அவருக்கு அறுவை சிகிச்சை தேவை அதற்கும் இரண்டு மூன்று லட்சம் தேவை.

முறையாக அறுவை சிகிச்சை செய்தால் சுமார் 35,000 ரியால் ஆகும், டாக்டர் முத்துக்குமார் உதவியால் 20,000 ரியாலாக நிர்னயிக்கப்பட்டுள்ளது.
நம்மைப்போன்று அவரும் பிழைப்புத்தேடி வந்தவர் மேலும் ஏழ்மையானவர் இவருக்கு நாம் உதவி செய்யும் நிலமைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறோம் ஆகையால் அனைத்து தமிழ்ச் சகோதரர்களும் உதவி செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறோம்.

இந்த மடல் கிடைத்த ஒவ்வொருவரும் தனிப்பட்ட முறையில் முயற்சி எடுத்து ஒவ்வொரு நபரிடமும் இதை எடுத்து சொல்லவேண்டும்…. காலம் தள்ளாமல் உங்கள் சங்கத்தின் மூலம் அல்லது உங்களால் எவ்வளவு முடியமோ உடனே எங்களுக்கு தெரியப்படுத்துங்கள் முறையாக வசூல் செய்து அதன்பிறகு இவருக்கு அறுவை சிகிச்சை செய்ய இயலாது, ஆகையால் வசூல் செய்து சொல்லலாம் என்று இருக்காதீர்கள் தொலைப்பேசி மூலம் நம் சகோதரர்களை அனுகலாம்.. இவருக்கு இன்னும் இரண்டே நாட்களில் அறுவை சிகிச்சை செய்தே ஆகவேண்டும்………

அவரின் நலனுக்குப் பிரார்த்தனை செய்யும்படியும் உங்களால் இயன்ற நிதிஉதவியை கீழ்க்காணும் வங்கிக் கணக்குக்கு அனுப்பும் படி (அ) கீழ்க்காணும் பரங்கிப்பேட்டை சகோதரர்களிடம் நேரில் அளிக்கும்படி மிகவும்அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.
குழுமத்தில் இல்லாத் சகோதரர்களுக்கும் இம்மைலை forward செய்யுங்கள்…

இது சம்பந்தமாக மேலும் தொடர்பு கொள்ள:

அஸ்கர் - 0504667838 @ JEDDAH
இபுராஹீம் மரைக்காயர் - 0564140759 @ JEDDAH
ஜாக்கீர் - 0501932259 @ JEDDAH
கவுஸ் மரைக்காயர் - 05027524 @ JEDDAH
ரெஜ்ஜாக் மரைக்காயர் - 0509703171 @ JEDDAH
சித்திக் (சலிமின் மைத்துனர் – வட்டாத்தைக்கால்) -0543364573 @ JEDDAH
அபு சுஹைலா (ஹ.முஸ்தபா) ஜெத்தா – 0502484955
ஃபக்ருதீன் (இப்னு ஹம்துன்) @ ரியாத் = 0507891953


பாங்க் அக்கவுண்ட் details
THE SAUDI BRITISH BANKJAKIER HUSSAIN SHAIK YOUSUFACOUNT NUMBER 033199027 150

குவைத்திலிருந்து...
பரங்கிப்பேட்டை கலீல் பாகவீ

எங்களுக்கும் வந்தாச்சு அது ?

பெண்களின் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி அவர்களுக்கு செக்ஸ மூடை அதிகரிக்க உதவும் மாத்திரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இந்த மாத்திரை எதேச்சையாகத்தான் கண்டுபிடிக்கப்பட்டதாம்.

மன அழுத்தத்தை கட்டுப்படுத்தும் மாத்திரையை அமெரிக்க விஞ்ஞானிகள் உருவாக்கியபோது, அந்த வேலையை செய்யாமல், பெண்களுக்கு செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டதை விஞ்ஞானிகள் கண்டுபிடித்தனர். இதையடுத்து இந்த மாத்திரைக்கு பெண்களின் வயாகரா என்று பெயர் வந்து விட்டது.அமெரிக்காவைச் சேர்ந்த வடக்கு கரோலினா பல்கலைக்கழக பேராசிரியர் ஜான் தோர்ப் இதுகுறித்து கூறுகையில், ஃபிலிபன்செரின் (Flibanserin) என்ற மன அழுத்தத்தைக் கட்டுப்படுத்த உதவும் மருந்தை உருவாக்கினோம்.பெண்களிடம் இதை சோதனைக்கு உட்படுத்தினோம்.


ஆனால் மன அழுத்தத்தை இது கட்டுப்படுத்த்த தவறி விட்டது. மாறாக, பெண்களிடம் செக்ஸ் உணர்வுகளைத் தூண்டி விட்டது தெரிய வந்தது.செக்ஸ் மீது மிகுந்த ஆர்வமும், படுக்கை அறைகளில் சந்தித்த பல்வேறு பிரச்சினைகளுக்குத் தீர்வு தருவதாகவும், செக்ஸின்போது தங்களுக்கு வழக்கமாக இருந்து வந்த பல அழுத்தங்களை குறைக்க உதவியதாகவும் இதை சோதனைக்காக பயன்படுத்திய பெண்கள் தெரிவித்தனர் என்றார் தோர்ப்.ஆண்களுக்கான வயாகராவே கூட எதேச்சையாக கண்டுபிடிக்கப்பட்ட மருந்துதான் என்பது குறிப்பிடத்தக்கது.வயாகரா இதயப் பிரச்சினைகளைகு குணப்படுத்த உருவாக்கப்பட்ட மருந்தாகும்.


ஆனால் அது செக்ஸ் பிரச்சினையைத் தீர்த்து வைத்ததால் தற்போது அதற்கான மருந்தாகி விட்டது.வயாகரா செக்ஸ் உணர்வுகளை ஆண்களிடம் வேகமாக தூண்டி விடும். அதேசமயம், ஃபிலிபன்சரின் மாத்திரை அந்த அளவுக்கு வேகமானதல்லவாம். மெதுவாகத்தான் இது செக்ஸ் உணர்வுகளை பெண்களிடம் தூண்டுகிறதாம்.

தொண்டியில் மர்ம காய்ச்சல்* பெண் பலி

தொண்டியில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே குழந்தை பலியான நிலையில் நேற்று பெண் ஒருவர் பலியானர். தொண்டியை சேர்ந்தவர் பவுசல்நிஷா (38). திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்தார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இச் சம்பவம் இப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.சில நாட்களுக்கு முன் நம்புதாளையில் மூன்று வயது குழந்தை காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தது .

வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி கூறுகையில்,""இந்த பகுதியில் மழைநீரில் வாழும் கொசு மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.வீட்டு மூலையில் 100 மில்லி தண்ணீர் தேங்கியிருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகிவிடும். மழை நீர் தேங்காதவண்ணம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ''என்றார். பவுசல்நிஷா இறந்தைதை யொட்டி தொண்டி பகுதி முழுவதும் சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

30ஆண்டுக்கு பிறகு அடக்கம்.

சவுதிஅரேபியாவில் உள்ள ஒரு ஆஸ்பத்திரியில் 1979-ம் ஆண்டு நர்சாக பணியாற்றி வந்தவர் ஹெலன் ஸ்மித். இவர் கட்டிடம் ஒன்றில் தவறி விழுந்து உயிர் இழந்தார். அப்போது அவரது வயது 23. ஆனால் அவர் சாவில் சந்தேகம் இருப்பதாக அவருடைய தந்தை ரான்ஸ்மித் புகார் செய்தார். ஹெலன்ஸ்மித் டென்மார்க் கப்பல் கேப்டன் ஒருவர் அளித்த விருந்தில் கலந்து கொண்டதாகவும் அப்போது அவர் கற்பழித்து கொல்லப்பட்டதாகவும் புகார் கூறினார்.

எனவே அவர் மீது விசாரணை நடத்த வேண்டும் என வற்புறுத்தி வந்தார். இதனால் ஹெலன் உடல் அடக்கம் செய்யப்படாமலே 30 ஆண்டுகளாக சவுதி அரேபியா ஆஸ்பத்திரி பிண அறையிலேயே வைக்கப்பட்டு இருந்தது. அவரது உடலை அக்கம் செய்யும்படி தந்தையிடம் சொன்னதற்கு அதை ஏற்க மறுத்து விட்டார். இப்போது தந்தை ரான் ஸ்மித்துக்கு 83 வயதாகி விட்டது. உடல் நலமும் குன்றி விட்டது. இதையடுத்து அவர் தனது பிடிவாதத்தை கைவிட்டு மகள் உடலை பெற்று அடக்கம் செய்ய முன் வந்துள்ளார். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

முதல்வருக்கு மருத்துவ பரிசோதனை

முதலமை‌ச்சர் கருணாநிதிக்கு சென்னை போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் வழக்கமான பரிசோதனை நடந்தது.இன்று நடக்கும் பல்வேறு அரசு விழாவில் பங்கேற்க காலையில் முதலமை‌ச்சர் கருணாநிதி செல்ல திட்டமிட்டிருந்தார்.இந்த நிலையில் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மரு‌த்துவமனைக்கு சென்று அங்கு வழக்கமான உடல்நல பரிசோதனை செய்து கொண்டார்.உடல் பரிசோதனைக்குப் பின் அங்கு சிறிது நேரம் ஓய்வுஎடுத்து வருவதாக மருத்துவமனை வட்டாரம் தெரிவிக்கி‌ன்றன.

சிறுவனுக்கு அவசரமாக இரத்தம் தேவை

10 வயது சிறுவன் இருதய சத்திர சிகிச்சைக்காக சென்னை மெரியட் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மிகவும் வறிய குடும்பத்தைச் சேர்ந்த இச்சிறுவனின் பெற்றோர் மிகவும் சிரமப்பட்டே சிகிச்சைக்கான நிதியை சேகரித்து அங்கு வந்துள்ளனர்.
தற்போது சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டுள்ள போதிலும் சிறுவனுக்கு அவசரமாக O Possitive fresh Blood ஏற்றப்பட வேண்டியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையிலிருந்து சென்னை வந்துள்ள சிறுவனின் தகப்பனுக்கு யாரிடம் போய் கேட்பது என்ன செய்வதென்று புரியாமல் உள்ளார்.
எனவே அல்லாஹ்வுக்காக இச்சிறுவனின் தேவையைப் பூர்த்தி செய்ய சகோதரர்கள் முன்வந்து இரத்த தானம் செய்து உதவுமாறு அன்பாய் வேண்டுகிறோம்.
சகோதரர்கள் அங்கிருக்கும் முஹம்மட் பைசல் எனும் சிறுவனின் தகப்பனுடன்
00918056127827
என்ற தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொண்டு தங்களால் முடியுமான உதவியைச் செய்யுமாறு வேண்டுகிறோம். மேலும் சிறுவனின் சிகிச்சை வெற்றிபெற்று பூரண சுகமடைய அல்லாஹ்விடம் பிராத்திக்குமாறும் வேண்டுகிறேன்.