தொண்டியில் மர்ம காய்ச்சல்* பெண் பலி

தொண்டியில் மர்ம காய்ச்சலுக்கு ஏற்கனவே குழந்தை பலியான நிலையில் நேற்று பெண் ஒருவர் பலியானர். தொண்டியை சேர்ந்தவர் பவுசல்நிஷா (38). திருமணமாகி இரு குழந்தைகள் உள்ளனர். சில நாட்களாக மர்ம காய்ச்சலால் பாதிக்கபட்டிருந்தார். நேற்று முன்தினம் ராமநாதபுரம் தனியார் மருத்துவமனையில் சேர்க்கபட்டு சிகிச்சை பலனிக்காமல் இறந்தார். இச் சம்பவம் இப்பகுதியில் பீதியை ஏற்படுத்தி உள்ளது.சில நாட்களுக்கு முன் நம்புதாளையில் மூன்று வயது குழந்தை காய்ச்சலால் பாதிக்கபட்டு இறந்தது .

வட்டார மருத்துவ அலுவலர் துரைசாமி கூறுகையில்,""இந்த பகுதியில் மழைநீரில் வாழும் கொசு மூலம் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது.வீட்டு மூலையில் 100 மில்லி தண்ணீர் தேங்கியிருந்தால் கூட அதில் கொசு உற்பத்தியாகிவிடும். மழை நீர் தேங்காதவண்ணம் வீட்டை சுத்தமாக வைத்திருக்க வேண்டும் ''என்றார். பவுசல்நிஷா இறந்தைதை யொட்டி தொண்டி பகுதி முழுவதும் சுகாதார துறையினர் தடுப்பு நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

0 comments: