தபால் அலுவலகங்களில் முகவரிச் சான்று அட்டைக்கான விண்ணப்பப் படிவங்களை 10 ரூபாய் கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ளலாம் என, தபால் துறை செய்தி வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘’தபால் துறை வழங்கும் முகவரிச் சான்று அட்டைக்கான விண்ணப்பங்கள், அனைத்து தலைமை தபால் அலுவலகங்கள் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட சார்பு தபால் அலுவலகங்களில் 10 ரூபாய் கட்டணத்தில் கிடைக்கும்.
'ரேஷன் கார்டுக்கு விண்ணப்பிக்கும் போது தபால் துறை வழங்கி உள்ள முகவரிச் சான்று அட்டைகளை ஏற்றுக் கொள்ளலாம்' என, உணவு வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கமிஷனர் தெரிவித்துள்ளார்.
புதிய ரேஷன் கார்டு மற்றும் முகவரி மாற்றத்திற்கு தங்கள் இருப்பிட சான்றாக தபால் துறை வழங்கும் முகவரிச் சான்று அட்டைகளை பெற்று, பொதுமக்கள் மாநில அரசு அதிகாரிகளிடம் சமர்ப்பிக்க வேண்டும்
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment