பக்ரீத் திருநாளைக் கொண்டாடும் இஸ்லாமிய மக்களுக்கு ம.தி.மு.க சார்பில் வாழ்த்து தெரிவிப்பதாக அக்கட்சியின் தலைவர் வைகோ கூறியுள்ளார்.இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில்,
லட்சக்கணக்கான மக்களிடையே அண்ணல் எம்பெருமானார் (ஸல்) அவர்கள் ஆற்றிய இறுதிப் பேருரை மக்களிடையே எந்வித பேதத்திற்கும் எள்ளவும் இடம் இல்லையென உலகிற்கு அறிவித்தது.
அதனை நினைவுகூரும் இப்பொன்னாளில் சமய நல்லிணக்கம் தழைக்கவும், சமூக ஒற்றுமை நிலைக்கவும் இஸ்லாமும் தமிழ்நெறியும் வலியுறுத்தும் 'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற உணர்வினைப் பேணி வளர்க்கவும் பாடுபடுவோம். இந்நாளில் இஸ்லாமியப் பெருமக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் என்று வைகோ கூறியுள்ளார்.
Subscribe to:
Post Comments (Atom)
0 comments:
Post a Comment